அன்றாடம்
சங்கமம் 2020

மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஆண்டுதோறும் நடத்தும் பொங்கல் கொண்டாட்ட விழாவான சங்கமம், இந்தாண்டு ஜனவரி மாதத்தின் 18ஆம் தேதியன்று ஹாப்கின்ஸ் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. மினசோட்டாவில் வசிக்கும் தமிழ்க் குடும்பங்கள் இந்த விழாவில் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர். சனிக்கிழமை காலை 11:30 ஆரம்பித்த இவ்விழா, இரவு ஒன்பது மணி வரை ஆடல், பாடல், இசை, நாடகம் எனத் தொடர் நிகழ்ச்சிகளால் நிரம்பி வழிந்தது. மதிய சிறப்புப் பொங்கல் உணவு மற்றும் உபசரிப்புடன் விழா தொடங்கியது. விழாவிற்கு வந்திருந்த […]
குமார்ஸ் தென்னிந்திய உணவகம்

வட அமெரிக்காவில் பல இந்திய உணவகங்கள் இருந்தாலும், தமிழ்நாட்டு உணவுகளுக்கெனப் பிரத்யேக உணவகமாக, முதலில் டெக்ஸாஸில் தொடங்கப்பட்டு, இன்று அமெரிக்காவில் பல நகரங்களில் கிளை பரப்பி வருகிறது, குமார்’ஸ் தென்னிந்திய கிராமத்து சமையல் முறை உணவகம் (Kumar’s South Indian Village Cuisine). மினியாபொலிஸ் ஆப்பிள் வேலி பகுதியில் சமீபத்தில் உதயமாகியிருக்கும் குமார்’ஸ் உணவகத்தின் உரிமையாளர் திரு. ராமையும், குமார்’ஸ் உணவகத்தின் முதல் கிளையை டெக்ஸாஸில் தொடங்கி, பிறகு பல இடங்களிலும் அமைக்க உதவி வரும் திரு. […]
பனிகாலப் பரவசம் 2020

January/தை மாதம் எது எங்கு எப்போது நிகழ்வு பனிச்சறுக்கப் பார்ட்டி Lutsen, Minnesota Jan 10 – 11 மினசோட்டா வடக்கிழக்குப் பகுதியில் Lutsen மலைச்சாரல்கள் கோலாகலமாக பனிச்சறுக்குதல் கொண்டாட்டங்களை வருடாந்தம் கொண்டாடும். இவ்விடம் பனிக்குடிசைகள் Charlet அனுபவமும் போகுபவர்க்குக் கிடைக்கும் I.C.E Fest Little Falls, Minnesota Jan 11-12 இது மூன்றாவது வருட பனிக் கொண்டாட்டம். உறைந்த ஏரியின் மேல் பெரும் Carousel (merry-go-round சுழற்றி) மற்றும் பனிச் சைக்கிள், பனிச்சப்பாத்து […]
மால் ஆஃப் அமெரிக்காவில் புத்தாண்டுக் கொண்டாட்டம்

ப்ளூமிங்டனில் மால் ஆஃப் அமெரிக்காவில், டிசம்பர் 31 ஆம் தேதியன்று இரவு, புத்தாண்டுக் கொண்டாட்டமாக, மூன்லைட் சர்க்கஸ் (Moonlight Circus) என்ற நிகழ்ச்சியும், ஃபேமிலி கவுண்ட் டவுன் டான்ஸ் பார்ட்டி (Family Countdown Dance Party) என்ற நிகழ்ச்சியும் மாலை ஆறு மணியிலிருந்து நள்ளிரவு வரை நடைபெற்றது. செலியஸ் ஏரியல் ஆர்ட்ஸ் ஸ்டுடியோ (Xelias Aerial Arts Studio) என்ற குழு இந்த சர்க்கஸ் நிகழ்ச்சியைச் சிறப்பாக நடத்தினார்கள். வந்திருந்த பலரும் இந்த நிகழ்வுகளில் கலந்துகொண்டு, மகிழ்வுடன் […]
சாய்பாபா கோவில் திறப்பு விழா 2019

வட அமெரிக்க மினசோட்டா மாநிலத்தின் சாஸ்கா நகரில் புதிதாக கட்டப்பட்ட சாய்பாபா கோவில் திறப்பு விழா கடந்த டிசம்பர் மாதம் 13 ஆம் நாள் தொடங்கி 15 ஆம் நாள் வரை நடைபெற்று, பக்தர்களுக்குத் திறக்கப்பட்டது இந்த மூன்று நாள் நிகழ்ச்சியில் குருஜி ஸ்ரீ சி பி சட்பதி (Guruji Shri C.B. Satpathy) முன்னிலையில் சாய்பாபா திருவுருவம் திறக்கப்பட்டு பூஜை நடைபெற்றது. இந்தக் கோவிலை நிர்மாணிக்க, சாஸ்கா நகரில் 2014ஆம் ஆண்டு 42 ஏக்கர் நிலம் […]
2019 டாப் சாங்க்ஸ்

ஒரு ஆண்டின் சிறந்த பத்துப் பாடல்கள் என்று ஒரு லிஸ்ட் எடுக்க வேண்டுமென்பது அவ்வளவு சுலபமானது அல்ல. ஒவ்வொருவரின் ரசனையும் வேறுபடும் என்பதால், ஒரு பட்டியல் அனைவரையும் திருப்திப்படுத்துவது என்பது சிரமமே. இருப்பினும், இந்த ஆண்டை நினைவுப்படுத்தும் வண்ணம் அமைந்த பாடல்களின் பட்டியல் அவசியம் என்பதால், அதற்கென முயன்று தேர்ந்தெடுத்த பட்டியல் இது. இதில் ஆட்டம் போட வைக்கும் பாடல்களும் உண்டு, ஆழ்ந்து உறங்க வைக்கும் பாடல்களும் உண்டு. குழந்தைகள் ரசித்த பாடல்களும் உண்டு, பெரியோர்கள் ரசித்த […]
ஐ.ஏ.எம் நன்றி நவில்தல் விழா 2019 (IAM Thanksgiving 2019)

அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் அமைந்துள்ள இந்தியன் அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (Indian Association of Minnesota) அமைப்பு சார்பில் 2019 ஆண்டில் உதவிய அனைத்து தன்னார்வலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் விழா கொண்டப்பட்டது. இந்த விழா சென்ற வாரம், டிசம்பர் 6 ஆம் தேதி நியு பிரைட்டன் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது. திருமதி. மீனா கோனார் நடனத்துடன் தொடங்கிய விழாவில், அமைப்பின் தலைவி திருமதி. நாஷ் அனைவரையும் வரவேற்று, தன்னார்வலர்களுக்கு நன்றி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டின் […]
அட்லாண்டா வாழ் தமிழர்களின் முதல்நூல் வெளியீட்டு விழா

நவம்பர் 17, 2019 அன்று ஆல்ஃபெரட்டாவில் நிகழ்ந்தேறிய அட்லாண்டா வாழ் தமிழர்கள் மற்றும் உறவினர்களின் முதல்நூல் வெளியீட்டு விழாவில், பல கண்டங்களைத் தாண்டித் தன் சுவை மாறாது ஓங்கி ஒலித்தது தமிழ். அட்லாண்டா மாநகரத் தமிழ்ச்சங்கத்தின் முழு ஆதரவுடன் மூன்று நூல்களும், இரண்டு கையேடுகளும் ஒரே சமயத்தில் இவ்விழாவில் அரங்கேறியது பெருமைக்குரியது. முதல் நாள் நடைபெற்ற தமிழ்ச்சங்கத் தீபாவளி விழாவில், திருமதி. ஜெயா மாறன் நூலாசிரியர்களை அறிமுகப்படுத்தி, நூல்களைப் பற்றிய முன்னோட்டத்தை அழகுற அளித்தார். அவர் பேசுகையில், […]
ஃப்ரோஸன் 2

2013 இல் ஃப்ரோஸன் முதல் பாகம் வெளிவந்த போது, பெண் குழந்தைகளின் ஏகோபித்த ஆதரவைப் பெற்றதோடு நிற்காமல், பாக்ஸ் ஆபிஸிலும் சாதனைகளைப் படைத்தது. ‘லெட் இட் கோ’ பாடல், அப்போதைய சிறுமிகளின் தேசிய கீதமாகவே மாறிவிட்டிருந்தது. அந்த ஆண்டின் வசூல் சாதனை படைத்த படங்களில் முதல் இடத்தைப் பிடித்தது. வீடுகளில் வாங்கப்படும் வீடியோ விற்பனையிலும் முதல் இடத்தைப் பிடித்தது. அனிமேஷன் படங்களின் வசூல் சாதனை பட்டியலில் இந்தாண்டு வரை அதுவே முன்னணியில் இருந்தது. சமீபத்தில் தான் லயன் […]