அன்றாடம்
தீபன் – துரத்தும் துயரம்
சென்ற வருடம், கேன்ஸ் மற்றும் பிற திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு பல விருதுகளைப் பெற்ற ஃபிரெஞ்ச் திரைப்படமான “தீபன்“, மினியாபோலிஸ் அப்டவுன் தியேட்டரில் ஜுன் மாத நடு வாரத்தில் திரையிடப்பட்டது. ஃபிரான்சில் வசிக்கும் பிரபல இலங்கைத் தமிழ் எழுத்தாளரான ஷோபா ஷக்தி, இதில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்கம் – ஃபிரெஞ்ச் இயக்குனர் அவ்தியாத். — நான் தூத்துக்குடியில் இருந்த பொழுது, சிறு வயதில் அடிக்கடி இரு சாதிகளுக்கிடையே நடைபெறும் சாதி கலவரங்களைக் காணும் பொழுது, இது […]
ரமலான்
இறைவனின் சாந்தியும் சமாதானமும் நாம் அனைவர் மீதும் என்றென்றும் நிலவட்டுமாக! இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது. அவை 1.ஈமான் கொள்வது (அல்லாவைத் தவிர வேறு இறைவன் இல்லை. முகமது நபி (ஸல்) அவர்கள் இறைவனின் தூதர் ஆவார்கள்) ஐந்து வேளை தொழுகையை நிறைவேற்றுவது. ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பது. ஸகாத் வழங்குவது. இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்வது. பன்னிரெண்டு முஸ்லிம் மாதங்களில் ரமலான் மாதத்திற்குப் பல சிறப்புகள் உள்ளது. இந்த மாதத்தில் நோன்பு நோற்பதை இறைவன்முஸ்லிகளுக்குக் […]
MNTS வாழையிலை விருந்து 2016
வாழையிலை விருந்து என்றால் பெரியவர் முதல் சிறுவர் வரை அனைவருக்கும் ஆனந்தமே பல வகையான உணவுகள், அதுவும் வாழை இலையில் பரிமாறுவதற்கென்றே நம் முன்னோர்கள் எந்த வரிசையில் உண்பது என்ற வரைமுறை வகுத்து அதற்கான முறையில் இலையின் எந்தப் பகுதியில் என்ன உணவு இருக்க வேண்டும் என்று கூட வரையறுத்துள்ளனர். உணவிற்குத் திருவிழா எடுப்பது, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல் உணவை உண்பது, உணவே மருந்து என்று வாழ்ந்து, உணவைக் கொண்டாடியது போன்ற சிறப்பம்சம் கொண்ட சமூகம் நம் தமிழ்ச் […]
ஆழ்நித்திரை
நாம் அனைவரும் தினந்தோறும் செய்யும் விடயம் உறங்குவது. ஆன்மிக ரீதியாக இதைப் பற்றி சற்று அலசிப் பார்ப்போம். இந்த விடயத்தைப் பற்றி உங்கள் கருத்துக்களைக் கீழே “கமெண்ட்” எழுதி பகிருமாறு கேட்டுக்கொள்கிறேன். வேதங்கள் மனிதன் மூன்று நிலையில் உள்ளான் என சொல்கிறது. முழிப்பு நிலை, கனவு நிலை மற்றும் ஆழ்நித்திரை. ஆசை, சோகம், பொறாமை என பல உணர்வுகள் நமக்கு முழிப்பில் இருக்கும் தருணம் வருவதுண்டு. புத்த மதத்தை எடுத்துகொண்டால் மனிதன் கெடுவது ஆசையால். நாம் வாழும் […]
பகுத்தறிவு – பகுதி 4
(பகுதி – 3) கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இந்தக் கட்டுரையைத் தொடர இயலாததற்கு இதனை எதிர்பார்த்திருந்த வாசகர்களிடம் வருத்தம் தெரிவித்துக் கொள்கிறோம். எழுத இயலாததற்கான காரணம் என்று குறிப்பிட்டு எதனையும் சொல்ல இயலவில்லை. மனிதனொன்று நினைக்க இறை – எங்கும் நிறைந்திருக்கும் இயற்கை என்று வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம் – ஒன்று நினைக்குமென்பதையே காரணமாகச் சொல்லலாம் என்று விழைகிறேன். இயற்கையில் எதுவுமே தற்செயலாக நிகழ்வதில்லை என்பதை முழுமையாக நம்புவதன் வெளிப்பாடே இது. நாம் பிறந்த இடம், […]
ஆணவம் அழிவைத்தரும் – பைபிள் கதைகள்
அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும். அடக்கம் ஒருவரைப் புகழோடு வாழும் நிலைக்கு மேம்படுத்தும், அதே சமயம் அடக்கமின்மையும் ஆணவமும், கடவுள் மேல் விசுவாசமின்மையும் நம்மை இருளுக்குள் ஆழ்த்தி அழிவைத்தரும். உருவம் பார்த்து யாரையும் ஏளனம் செய்யக் கூடாது. மற்றவர்களைவிட நானே பலமானவன் என்று நினைப்பதே நம்முடைய முதல் பலவீனம். அதே போல எதிரியின் பலம் நமக்கு தெரியவில்லை என்றால் அதுவே நமது பலவீனம். இது எல்லாமே நாம் கேள்விப்பட்டதுதான். இதை நமக்கு உணர்த்தும்படியாக, […]
திரைப்படத் திறனாய்வு – 24
சமீபத்தில், சூர்யா நடித்து வெளிவந்த “24” என்ற தமிழ்த் திரைப்படத்தைப் பார்க்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது குறித்து ஒரு சிறு கட்டுரை எழுதலாம் என்று எடுத்த முடிவின் விளைவே இது. வழக்கமாகக் குறிப்பிடும் ”பொறுப்புத்துறப்பு” (disclaimer) ஒன்றையும் முதலிலேயே கூறிவிட்டுத் தொடரலாம். இதனைத் திரைப்பட விமர்சனமாகவோ, திறனாய்வாகவோ பார்க்க வேண்டாம். தமிழ்த் திரைப்படங்களைத் தொடர்ந்து பார்க்கும் ஒரு சாதாரண ரசிகனின் பார்வை என்றே கொள்ளவும். படத்தின் பெயரை வைத்துச் சற்று எதிர்பார்ப்பு அதிகரித்து விட்டது என்றே கூற […]






