வார வெளியீடு
பனிப்பூக்கள் 2022 சிறுகதைப்போட்டி முடிவுகள்
சென்ற ஜனவரி மாதம், பனிப்பூக்களின் 2022 ஆம் ஆண்டுக்கான சிறுகதைப் போட்டியினை அறிவித்திருந்தோம். ‘மனித உறவுகள்’ என்ற கருவின் அடிப்படையில் ஏராளமான கதைகள் எமக்கு வந்து சேர்ந்தன. உலகெங்கிலுமிருந்து அருமையான படைப்பாற்றலுடன், சிரத்தையெடுத்து போட்டியில் பங்கேற்றவர்களுக்குப் பனிப்பூக்களின் நன்றிகளையும், பாராட்டுகளையும் தெரிவிப்பதுடன், தொடர்ந்து படைப்புகளை அளித்திடவும் வேண்டுகிறோம். போட்டிக்கு வந்திருந்த கதைகள் ஒவ்வொன்றும் உறவுகளின் பரிமாணத்தை வெவ்வேறு கோணங்களில், யதார்த்தத்துடன், மிக நேர்த்தியாக, அழுத்தமாகப் பதிவு செய்திருந்தன. கதைகளை வாசித்த எமது நடுவர் குழுவினர், வார்த்தைகளால் […]
பெண்மை
பிறப்பில் தொடங்கி என்னை இறப்பு வரைக்கும் இங்கே சிறப்பாய்க் காத்தவள் பெண், மறுப்பு இதற்கேது சொல்? கருவில் தாங்கி, கற்பக தருவாய் ஈன்று, என்னை வருவாய் மலரேயென்று அற்புதத் திருவாய் மலர்ந்தவள் அன்னை! சிறுவனாய் நான் அலைகயிலே சிறியதாய்த் தோன்றும் செயலும் ஒருவனாய்ச் செய்திடத் தகுந்த திறமையைக் கற்றிடாக் காரணத்தால் அருகிலே வந்து அமர்ந்து பெருகிய நற் பாசத்தோடு மருகிய விழிநீர் துடைத்து உருகியே உதவியவள் அக்காள்! பள்ளி போகும் பருவத்திலே […]
இலத்திரனியல் திரையில் பார்ப்பதும் காகிதத்தில் கிரகித்தலும்
சந்தர்ப்பம், சூழல், தொழிநுட்ப நவீனங்கள் எமது வாழ்வைத் தொடர்ந்தும் மாற்றியவாறே உள்ளன என்பதை நாம் அறிவோம். மாற்றங்கள் யாவும் முன்னேற்றத்திற்கு உரியன என்று கூறிக்கொள்ள முடியாது. இதை நாம் படிக்கும் செய்தித்தாள்கள், புத்தகங்கள் என்று எடுத்துப் பார்த்தால் சில விடயங்கள் தெளிவிற்கு வரும். சென்ற பலவருடங்கள் அச்சுத்தாளில் தயாரிக்கப் பட்டு காகித வாசிப்பில் இருந்து கணனி உபகரணங்களில் desktop, notebook இருந்து இன்று பலவித கைத் தொலைபேசி smart phone, தட்டு ஏடுகள் Tables கொண்ட இலத்திரனியல் […]
இரு ஆசிய நாடுகளின் நெருக்கடி – பாடமும் படிப்பினையும்
கடந்த இரண்டாண்டுகளாக நோய்தொற்றின் பிடியில் சிக்கித் தவித்த உலகநாடுகள், அப்பிடியில் லேசானத் தளர்வு ஏற்பட்டுத் தங்களை ஆசுவாசப்படுத்திக்கொள்ள முனைந்த வேளையில் வேறுவடிவிலான சிக்கலுக்குள் சரியத் தொடங்கியுள்ளன. இம்முறை உலகை அச்சுறுத்துவது போர் மற்றும் பொருளாதார நெருக்கடி. ஆயுதங்கள் கொண்டு வெறித்தனமான போர் நடவடிக்கைகளால் சில நாடுகள் வீழ்ச்சியுற, பொருளாதார ஸ்திரமின்மையால் சில சிறிய நாடுகள் பேரின்னல்களைச் சந்தித்து வருகின்றன. அவற்றில் குறிப்பிடவேண்டியவை இலங்கையும், பாகிஸ்தானும். இலங்கை இலங்கையின் நெருக்கடிக்குப் பல காரணங்கள் சொல்லப்படுகின்றன. இலங்கையின் பொருளாதாரம் 3T […]
ஆங்கிலமே இணைப்பு மொழி (லிங்குவா ஃபிரான்கா)
“ஒரு மொழி உலகளாவிய மொழியாக மாறுவது அதைப் பேசும் மக்களின் சக்தியால்” – இதைச் சொன்னவர், பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற மொழியியலாளர் டேவிட் கிரிஸ்டல். உலகெங்கும் சுமார் 7100 மொழிகள் இருந்ததாக அறியப்படுகிறது. அவை ஒவ்வொன்றும், தனித்தன்மையோடு, வெவ்வேறு பரிமாணங்களில், மனிதச் சமூகத்தை அழகுபடுத்திக்கொண்டிருக்கின்றன. துரதிர்ஷ்டவசமாக இவற்றில் பல மொழிகள், அவை புழங்கப்படும் பூகோள எல்லையைக் கடந்து பிரபலமடையவில்லை. எனினும் சில மொழிகள் எல்லைகளை உடைத்து மிகப் பரவலாகப் புழங்கிவருகின்றன. அவற்றில் குறிப்பிடத்தக்கது ஆங்கிலம். ஐந்தாம் நூற்றாண்டில், […]
(Indian Association of Minnesota) IAMன் இந்திய மக்கள் சந்திப்பு 2022
IAMன் இந்திய மக்கள் சந்திப்பு கடந்த மாதம் மார்ச் 19 2022 அன்று மினசோட்டா மாநிலத்தில் உள்ள மின்னெடுங்கா (Minnetonka) உள்ள சமூக மன்றத்தில் சமூக மன்ற கட்டிடத்தில் நடைபெற்றது. இந்த விழாவிற்கு பல்வேறு இந்திய அமைப்பு நிறுவனத்தின் பிரமுகர்களும், தன்னார்வத் தொண்டு அமைப்பு நிறுவனத்தின் உள்ள பிரமுகர்களும், மினசோட்டா மாநிலத்தில் தேர்வுசெய்யப்பட்ட உள்ளூர் அரசியல் (elected officials) பிரமுகர்களும் மெலிசா ஹோர்ட்மன் (Melissa Hortman), ஜின்னி க்ளெவோர்ன் (Ginny Klevorn), கிறிஸ்டின் பஹனீர்(Kristin Bahner), ரியான் […]
பொங்கும் பூந்தோட்டம்
மினசோட்டாவில், மங்கு பனி ஓய்ந்திட, மாரி மழை பெய்திட பொங்கி வந்தது வசந்தகாலம். மரகதப் பச்சை இலைகள் ஒரு புறம். மஞ்சள், செம்மஞ்சள், வெள்ளை, இளஞ் சிவப்பு, சிவப்பு, நாவல், என மலர்ந்திடும் பூக்கள் மறுபுறம். வெப்பவலயத்திலிருந்து வட அமெரிக்காவில் வந்து குடியேறி வாழும் தமிழர்கள் பலருக்கு ஆரம்பத்தில் வட அமெரிக்க காலநிலை சற்றுப் புதிராகவும் அல்லது கேள்விக் குறியாகவும் அமையலாம். குறிப்பாக, வீட்டின் பிந்தோட்டத்தில் தாவரங்கள், பூக்கள், மரங்கள் வளர்க்க விரும்புவோர்க்கு எப்போது, அவற்றை விதைப்பது […]
மினசோட்டாவில் இனங்கள் குறித்த வரலாற்றுக் கல்வி தேவையானது
1990களில் ஊர்ப்புற, விஸ்கொன்சின் மாநில பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த போது நான் உள்ளூர் பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் போய்ப் பார்ப்பதுண்டு. அதன் பொழுது கிழக்காசிய, பொதுவாக வியட்னாமிய, மொங் இன அடிக் கொடி, அல்லது சில சமயம் கறுப்பின விளையாட்டு வீரர்களை குறித்துக் கேவலமாக பார்த்துக் கொண்டிருக்கும் சிறுவர்கள் குரல் கொடுத்ததை அவதானித்திருக்கிறேன். இவ்வகையான எண்ணம், மினசோட்டா மாநில ஊர்ப்புறப் பகுதிகளிலும் பரவலாகயிருந்ததையும் கண்டதுண்டு. 30 வருடங்களுக்குப் பின்னரும் இந்த இனத்துவேசம் மினசோட்டா பாடசாலைகளிலும் எழுச்சிபெறுவது சமூகத்திற்கு […]
முடிவுக்கு வருகிறதா பொருளாதார உலகமயமாக்கம்?
இந்தக் கட்டுரையை நீங்கள் எந்தக் கருவியில் – கணினி, மடிக்கணினி, கைக்கணினி, கைப்பேசி – படிக்கிறீர்களோ தெரியாது, ஆனால் அந்தக் கருவியில் குறைந்தது ஐந்து நாடுகளின் உதிரிப் பாகங்களாவது கலந்திருக்கும். மிக நேர்த்தியான, இலகுவான, இன்றியமையாத பொருளாக மாறிவிட்ட கருவி, உங்கள் கைகளில் தவழ்வதற்குக் காரணமாக அமைந்தது உலகமயமாக்கல் சாத்தியப்படுத்திய பூகோள எல்லைகளைக் கடந்த விநியோகச் சங்கிலி எனலாம். இன்று நாம் அன்றாட வாழ்வில், காலையில் எழுந்ததும் பல்துலக்கும் ப்ரஷ், பேஸ்ட், குளிக்க சோப்பு, துடைக்கும் டவல், […]






