வார வெளியீடு
கோழி சுக்கா
சுலபமான முறையில் சுவையான கோழி சுக்காவுக்கான செயல்முறை இது. தேவையான பொருட்கள்: கோழி – 400g –ஊறவைக்க தேவையான பொருட்கள்:– மஞ்சள் தூள் – 1 tsp காஷ்மீரி மிளகாய்த் தூள் – 2 tsp கொத்தமல்லித் தூள் – 2 tsp கரம் மசாலாத் தூள் – 1 tsp சீரகத் தூள் – 1 tsp மிளகுத் தூள் – 1 tsp இஞ்சி பூண்டு விழுது – 2 tbsp தயிர் – […]
விண்ணைத் தாண்டும் அமேசான்
இன்றைய தேதிக்கு உலகின் டாப் 5 டெக்னாலஜி நிறுவனங்களில் ஒன்றான அமேசான், அதன் வருமானத்தில் காட்டி வரும் முன்னேற்றம் அபரிமிதமானது. 1994இல் ஜெஃப் பெஜொஸால் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம், தொடக்கத்தில் கணினி வழியே புத்தகம் விற்பதில் தனது வியாபாரத்தைத் தொடங்கியது. இன்று அது தடம் பதித்து நிற்கும் துறைகள் ஒன்று இரண்டல்ல, ஏராளம். வெறுமனே, தனது கிளைகளை மட்டும் பல இடங்களுக்குப் படரவிடுவதோடு நின்றுவிடாமல், ஒவ்வொரு துறையிலும் புதுமைகளை நிகழ்த்திக்கொண்டு வருகிறது. புத்தகம் என்றால் பேப்பரில்தான் இருக்க […]
ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் – 2019
ஆண்டுதோறும் செயிண்ட் பால் ரிவர் சென்டரில் (St. Paul River Center) இன்டர்நேஷனல் இன்ஸ்ட்டியூட் ஆஃப் மினசோட்டா (International Institue of Minnesota) அமைப்பால் நடத்தப்படும் ஃபெஸ்டிவல் ஆஃப் நேஷன்ஸ் (Festival of Nations) நிகழ்ச்சி, இந்தாண்டு மே இரண்டாம் தேதி, வியாழக்கிழமையன்று தொடங்கி ஐந்தாம் தேதி, ஞாயிற்றுக்கிழமை வரை நடைபெற்று முடிந்தது. 86 ஆண்டுகளாக நடைபெறும் இந்த நிகழ்ச்சி, அமெரிக்காவில் பல்வேறு இனக்குழுக்கள் சங்கமிக்கும் நிகழ்வுகளில் பழமையான ஒன்றாகும். கிட்டத்தட்ட நூறு இனக்குழுக்கள் இந்த நிகழ்வில் […]
பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019
பல்வேறு ஆசியக் கலைக்குழுக்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், ப்ளுமிங்டனில் இருக்கும் மால் ஆஃப் அமெரிக்கா பேரங்காடியில் மே 4ஆம் தேதியன்று நடைபெற்றது. காலை பதினொரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய, சீன, ஜப்பானிய இசைக்குழுக்களும், நடனக்குழுக்களும் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரத நாட்டியம், காவடி, கரகம் போன்றவற்றுடன், தமிழ் திரைப்பாடல்களுக்கும் தமிழ்க்குழுக்கள் நடனமாடின. நிகழ்ச்சிக்காக வந்திருந்த பார்வையாளர்களுடன், பேரங்காடிக்கு வந்தவர்களும் பார்வையாளர்களாக மாறி நிகழ்ச்சியைக் கண்டுக்களித்தனர். […]
மாடர்ன் மதர் !
மங்கிய விளக்கொளி…. சிறியதான மேடை… அந்த மேடையின்மேல் இரண்டு மூன்று சிறிய இரும்புக் கம்பங்கள் பொருத்தப் பட்டிருந்தன. மேடையைச் சுற்றி நிறைய நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. அவற்றில் சில ஆண்கள் அமர்ந்திருந்தனர். மேடையிலிருந்து சில அடிகளில் தொடங்கி, அந்த அரங்கம் முழுவதும் பல டேபிள்களும், சேர்களும் அமைக்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றில் மனிதர்கள் அமர்ந்திருந்தனர். தொண்ணுத்தி ஒன்பது சதவிகிதம் ஆண்களும், ஒன்றிரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர். பல வெய்ட்டர்களும், சர்வர்களும் சுற்றிச் சுற்றி வந்து அனைவரையும் ‘கவனித்துக்’ கொண்டிருக்க, சாராயக் […]
துணுக்குத் தொகுப்பு – வெள்ளை யானை பூமி
பொதுவாக ‘வெள்ளையானை’ என்ற சொல்லுக்கு, இன்றைய வழக்கில், நம்மிடம் இருக்கும் அதிக பயனில்லாத, அதன் மதிப்பை விட, அதனைப் பாதுகாக்க அதிகப் பிரயத்தனப்படவேண்டிய ஒரு பொருளைக் குறிக்க சொல்லப்படுகிறது. சில நாடுகளில் பண்டிகைக்கால ஒன்றுகூடல்களில் வேடிக்கையாக நடைபெறும் பரிசு பொருள் பரிமாற்றங்களை ‘வெள்ளையானை பரிசு’ (White Elephant Gift exchange) என்கிறார்கள். பெறுபவருக்குப் பயனளிக்காது என்று தெரிந்தாலும், வந்திருப்போர் அனைவரும் கேலிபேசி மகிழ்வுறும் வகையில் இந்தப் பரிசு பரிமாற்ற நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. பரிசாகப் பெற்றதினால் தூக்கிப்போட மனம் […]
சொற்சதுக்கம் 9
கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! தி வ த் ம த ர் ச ந் ம் ர ட ங் ட் சு ன க தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் இரு _____ _____ _____ கூப்பி வாக்கு சேகரிப்பார்கள் அரச குடும்பத்தினர் […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்
புராணம், இதிகாசம், சீர்த்திருத்தம் எனப் பல பரிமாணங்களைக் கடந்து வந்த தமிழ்த்திரையுலகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் அரசியல் தாக்கத்தைப் பெற்றது. குறிப்பாக மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின. அறுபதுகளில் C.V. ஸ்ரீதர், A. பீம்சிங், B.R. பந்துலு, T.R. ராமண்ணா, A.C. திருலோகச்சந்தர், K.S. கோபாலகிருஷ்ணன், K. பாலச்சந்தர் போன்றோர் காதல் மற்றும் குடும்பப் பின்னல்களின் பின்னணியில் படங்களை நகர்த்திச் சென்றனர். ஒரு கட்டம் வரை, தனது வாள் சண்டை திறமை […]
அமெரிக்காவும் அதன் அகால ஆசையும்
தமிழில் அகால மரணம் என்பது இயற்கையான இறப்பு இல்லை என்று பொருள்படும். தமிழ் மக்களில் ஈழத்து மக்களும், மலேசிய மக்களும் துப்பாக்கியின் பரிவிளைவுகளை அவர்கள் வாழ்நாட்களில் பார்த்தவர்கள், பார்த்துக்கொண்டு இருப்பவர்கூட. இன்று வட அமெரிக்க மண்ணில் வாழும் தமிழரும் அவ்வப்போது காணும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டனர் எனலாம். கடந்தவாரம் கூடி கொலராடோ மாநிலத்தில் 10 வருடங்களிற்கு முன்னர் நடைபெற்ற அகோரக் கொலம்பைன் பள்ளிக்கூடச் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏழே ஏழு மயில்களிற்கப்பால் மீண்டும் இரண்டு மாணவர்கள் […]






