வார வெளியீடு
2019 இளையோர் கலை, பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை
ஒவ்வொரு ஆண்டும் மினசோட்டாத் தமிழ்ப் பள்ளி நடத்தும் இளையோருக்கான பேச்சுத்தமிழ், கலை மற்றும் பண்பாட்டுப் பயிற்சிப் பட்டறை இந்தாண்டு ஜுன் 29 மற்றும் 30 ஆகிய தினங்களில் ஆப்பிள் வேலியில் உள்ள Camp Sacajawea என்னும் இடத்தில் நடந்தது. இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் இவ்விடத்தில் நடைபெற்ற பட்டறையில் கலந்துகொண்ட இளையோருக்குப் பேச்சுத்தமிழிலும், தவில், நாதஸ்வரம், நாட்டுப்புறப் பாடல், நடனம் போன்ற கலைகளிலும், கபடி, சிலம்பம், பம்பரம், ஆடு புலி ஆட்டம், பல்லாங்குழி போன்ற விளையாட்டுகளிலும் பயிற்சி அளிக்கப்பட்டது. […]
The extraordinary journey of the fakir
17 ஆண்டுகளுக்கு முன்பு, யாரும் நினைத்திருக்க மாட்டார்கள். துள்ளுவதோ இளமையில் நடிக்க வந்திருந்த தனுஷ், தமிழில் முன்னணி நடிகராக முன்னேறி, நடிப்பிற்காக தேசிய விருது பெற்று, ஹிந்தியில் ஹிட் கொடுத்து, பிறகு ஆங்கிலப் படத்திலும் நடிப்பார் என்று. இதோ, தி எக்ஸ்ட்ராஆர்டினரி ஜர்னி ஆஃப் ஃபகீர் (The extraordinary journey of the fakir) என்ற படத்தின் மூலம் தனது அடுத்த மைல்கல்லைக் கடந்து வந்திருக்கிறார். து.இ.யில் ஷெரினுக்கு முத்தம் கொடுத்து தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர், சர்வதேசப் […]
ஆபரேஷன் வார்சிட்டி ப்ளு
கோடைக்காலம் வந்ததும் உயர் பதின்ம வயதில் பிள்ளைகளிருக்கும் குடும்பங்களில் கல்லூரி பற்றியதான ஒரு பதட்டம் தொற்றிக்கொள்ளும். பெரும்பாலும் இவர்களது கோடைக்கால விடுமுறை பயணங்களில் கல்லூரி விஜயங்கள் முதன்மை பெறும். அமெரிக்காவில் கல்லூரி படிப்புக்கான கட்டணங்களும், இதர செலவுகளும் ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக 3 முதல் 5 சதவீதம் வரை உயர்ந்து கொண்டேயுள்ளது. இந்தக் கட்டண உயர்வுகளுக்கு பணவீக்கம் காரணமாகச் சொல்லப்பட்டாலும், கல்லூரிப் படிப்புகளுக்கான தேவையும் அதிகரித்து வருவதுதான் முக்கியக் காரணம். ஜார்ஜ்டவுன் பல்கலை நடத்திய ஒரு ஆய்வு, […]
மினசோட்டா வெயிலில் கோடைக்காலக் குதூகலம்!
என்ன? எங்கே? எப்போது? Edina Art Fair Diverse collection of art, entertainment, kids’ zone, craft beer gardens and gourmet foods 50th and France Avenue மே 31-ஜூன் 2 Stone Arch Bridge Festival Art, music, & car show on the Minneapolis riverfront. SE Main Street, Minneapolis ஜூன் 14-16 Twin Cities Jazz Festival Free, three-day music festival featuring headline acts on […]
பனிப்பூக்கள் Bouquet – பிரச்சினை பலவிதம்
மத்திய அரசு, ஹிந்தி குறித்த அறிவிப்புகளை அவ்வப்போது கொடுக்கும் போதெல்லாம், தமிழகத்தில் எதிர்க்குரல்கள் எழும்பும். முன்பு, அரசியல்வாதிகள் மட்டும் தான் குரல் கொடுப்பார்கள். சமூக வலைத்தளங்களின் வருகைக்குப் பிறகு, இப்போது வலைவாசிகளின் குரல் அரசியல்வாதிகளின் குரலை மீறிவிட்டது எனலாம். இனி, அரசியல்வாதிகள் எதிர்ப்பு எழுப்பாவிட்டாலும், மக்கள் குரல் தவறாமல் எழும்பும் என நம்பலாம். அமைதியாக இருக்கும் ஏ.ஆர்.ரஹ்மானே இது குறித்து மூன்று ட்வீட்களை ஊமைக்குத்தாகப் போட்டார் என்றால் பார்த்துக்கொள்ளுங்கள். — செல்வராகவனுடைய புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் போன்ற […]
கொலைகாரன்
இந்தப் படத்தை மினசோட்டாவில் ஒரு திரையரங்கில் பார்த்தபோது, திரையரங்கில் இரு வயதான அமெரிக்கர்கள் வந்து உட்கார்ந்தனர். இந்தப் படத்திற்கு எப்படி இவர்கள்? தெரியாமல் வந்து விட்டனரோ? என்றெல்லாம் சந்தேகம் வந்தது. அவர்கள் உட்கார்ந்து ஆர்வமுடன் பார்க்க தொடங்கியதைக் கண்ட பிறகுதான், சரியான படத்திற்குத் தான் வந்திருக்கிறார்கள் என்பது தெரிந்தது. படம் பார்த்து முடித்த பிறகு, படம் குறித்த அவர்களது கருத்தையறிய முடிந்தது. அவர்களுடைய சுருக்கமான விமர்சனத்தைப் பார்ப்பதற்கு முன்பு, படம் குறித்த நமது பார்வையைப் பார்த்துவிடலாம். வெற்றிப்படங்களாகக் […]
மினசோட்டா வெய்யிலில் கோடைகாலக் குதூகலம்!
மினசோட்டா வெய்யிலில் கோடைகாலக் குதூகலம்! எது எங்கே எப்போது Edina Art Fair Diverse collection of art, entertainment, kids’ zone, craft beer gardens and gourmet foods 50th and Franc Avenue மே 31-ஜூன் 2 Stone Arch Bridge Festival Art, music, & car show on the Minneapolis riverfront. SE Main Street, Minneapolis ஜூன் 14-16 Twin Cities Jazz Festival Free, three-day […]
பனிப்பூக்கள் Bouquet – தேர்தல் ரிசல்ட் ஸ்பெஷல்
கடந்த வாரம் இந்தியப் பொதுத்தேர்தல் முடிவுகள் வெளியானது. வாக்கு எண்ணிக்கைக்கு முன்பு, வாக்குப்பதிவு சாதனங்கள் அங்குமிங்கும் கொண்டு செல்லப்பட்டதாகச் செய்திகள் வெளியானது. எதிர்கட்சிகள் ஆளும்கட்சியின் மீது குற்றச்சாட்டியது. அதன் பிறகு, தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு, அந்த எதிர்கட்சிகள் அமைதியாகிவிட்டன. ரிசல்ட் அவர்களை அமைதியாக்கிவிட்டது. வாக்கு எண்ணிக்கையில் மோசடி என்றால், அவர்களது வெற்றியும் கேள்விக்குரியதாகிவிடுமே! — வாக்கு எண்ணிக்கையின் போது ரிபப்ளிக் டிவி அர்னாப், அவசரத்தில் ஒரு வார்த்தையை வேகமாகச் சொல்லப்போக, அவரை நாடே வாரு வாரென்று […]
சவுத் டக்கோடாவில் என்ன பார்க்கலாம்?
ஒரு வழியா மினசோட்டாவில் சம்மர் தொடங்கிவிட்டது. மக்கள் எங்குப் போகலாம் என்று திட்டமிடலை ஏற்கனவே தொடங்கியிருப்பார்கள். மினசோட்டாவுக்குப் பக்கத்து மாநிலமான சவுத் டக்கோடா வாரயிறுதியில் பக்கோடா சாப்பிட்டுக்கொண்டே காரில் சென்று வருவதற்கு நல்ல சாய்ஸ். மினியாபொலிஸிலிருந்து மூன்று மணி நேரத்தில் சவுத் டகோடாவை அடைந்துவிடலாம் என்றாலும், அங்கு நாம் பார்க்க வேண்டிய இடங்களைக் காண இன்னும் அதிகத்தூரம் பயணம் செய்ய வேண்டி இருக்கும். அதனால், பயணத்தை அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்வது அவசியம். இனி சவுத் டக்கோடாவிலிருக்கும் காண […]
பட்டமளிப்பு விழா 2019
மினசோட்டாவிலுள்ள மேப்பிள் குரோவ் இந்து கோவிலில் பள்ளிப் படிப்பு முடித்து கல்லூரி செல்லவிருக்கும் மாணவர்களுக்கு மே மாதம் 19 ஆம் தேதி பாராட்டு விழா நடைபெற்றது. இந்த விழாவிற்கு, ஓக்கலாமா மாநிலப் பல்கலைக் கழகத்தின், பத்மஸ்ரீ முனைவர் சுபாஷ் காக், சிறப்புரையாற்றி மாணவ மாணவிகளுக்குப் பரிசுகளை வழங்கினார். முனைவர் டேஷ் அறக்கட்டளை சார்பில் சிறந்த 7 மாணவர்களுக்கு $500 ஊக்கத் தொகை வழங்கப்பட்டது இவர்கள் அனைவரும் கோவில் மற்றும் கோவில் பள்ளிகளில் பணியாற்றிய தன்னார்வலத் தொண்டர்கள். இந்த […]






