Archive for November, 2013
தீபாவளி வாழ்த்து

சலசலவென நீரில் குளித்து
பளபளவென புத்தாடையில் சொலித்து
கமகமவென உணவைச் சமைத்து
பலப்பல நண்பர்களை அழைத்து
தீபாவளி

இந்தியா முழுவதும் நூற்றுக்கணக்கான பண்டிகைகள் கொண்டாடப்படுகின்றன. மத நம்பிக்கைகளுக்கு ஏற்ப பலவிதமான பண்டிகைகளின் கொண்டாட்டங்கள் அமைகின்றன என்பது அனைவரும் அறிந்ததே. எல்லாவி்தமான நம்பிக்கைகளையும் ஒதுக்கி விட்டு, நாடு முழுவதும் கொண்டாடப்படும் திருவிழாக்களின் நிகழ்வுகளை வைத்து, அதனைக் கொண்டாடும் மக்களின் எண்ணிக்கைகளை வைத்து இந்தியாவின் ஒரு பொதுவான பண்டிகை என்று சொல்ல வேண்டுமானால் தீபாவளி என்று கூறிவிடலாம் என நினைக்கிறேன். இது ஒரு குறிப்பிட்ட மத நம்பிக்கையைக் குறித்தது என்பதை அனைவரும் ஒத்துக் கொண்டாலும், இதன் பின்னணி என்பது […]
கலிங்கத்துப்பரணி

ஆயிரம் யானைகளைப் போரில் வென்ற வீரனைப் பாடும் நூல் பரணி எனப்படும். பரணி என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகைப் பிரபந்தங்களுள் ஒன்று. இது கலித் தாழிசையாற் பாடப்பெற்றது. பெரும்போர் புரிந்து வெற்றிபெற்ற வீரனைச் சிறப்பித்துப் பாடுவதையும் பரணி யென்று கூறுவர். கலிங்கத்துப்பரணி என்ற இரண்டு நூல்கள் உள்ளன. அவை முறையே செயங்கொண்டார் மற்றும் ஒட்டக்கூத்தரால் எழுதப்பட்டது. செயங்கொண்டார் எழுதிய கலிங்கத்துப்பரணியே தமிழின் முதல் பரணி நூல் என ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. பலபட்டடைச் சொக்கநாதர் என்னும் புலவர் “பரணிக்கோர்ச் […]
வாழிய மகாத்மா

சத்தியாக்கிரக எழுச்சி மீண்டு வருமா?
சாதிபேதமற்ற புரட்சி சாதனைத் தொடக்கமா?
சத்தியம் கற்றுக்கொடுத்ததோ ஹரியின் நாடகமா?
நிதமும் விளங்கினாய் பக்தியின் பாத்திரமா?
நாட்டுக்குத் தந்தையாய் அடைந்தது பாக்கியமா?
நாட்டுக்காக அறப்போர் நடத்தியது மறப்போமா?
ஊரார் பிள்ளையை ஊட்டி வளர்த்தால்…..

”இவர் எப்பவும் இப்படித்தான், சொல் பேச்சுக் கேக்கறதே இல்லை. தன் பொண்டாட்டி, குழந்தை குடும்பம்னு ஏதாவது நெனப்பு இருந்தாத்தானே.. பரோபகாரம், மத்தவாளுக்குச் சேவை செய்ரோம் பேர்வழின்னு, சொந்தக் குடும்பத்தைப் பத்திக் கவலையே இல்ல”…. சரஸ்வதி மாமியின் புலம்பல் தொடர, பொழுது புலர்ந்தது என்ற எண்ணத்துடன் பதில் எதுவும் கூறாமல் தானுண்டு, தன் வேலையுண்டு என்று கிளம்பத் தயாரானார் சாம்பு மாமா. தனது மஞ்சள் பையில், தர்பை, பூணூல் எனத் தர்ப்பணத்திற்குத் தேவையான பொருள்களை எடுத்து வைத்துக் கொண்டார். […]
திருப்புறம்பியம்

காவிரியின் கிளை நதியான மணியாற்றிற்கும் கொள்ளிடத்திற்கும் இடையே அமையப்பெற்ற வளமையான ஊர் திருப்புறம்பியம். சோழர் வரலாற்றை மாற்றியமைத்த பெருமை இவ்வூருக்கு உண்டு. பல்லவரும் பாண்டியரும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் அது.விசயாலயச் சோழர் தஞ்சையை முத்தரையரிடம் இருந்து கைப்பற்றித் தலைநகராக ஆக்கி பல்லவர்களுடன் நட்புடன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலம்.ஆதித்தச் சோழர் இளவரசுப் பட்டம்மேற்று சோழச் சிற்றரசை சோழப் பேரரசாக ஆக்க கனவு கண்டுகொண்டிருந்த காலம். பாண்டிய நாட்டின் வட எல்லையாகவும் பல்லவ நாட்டின் தென் எல்லையாகவும் சோழநாடு […]
முற்றியலுகரம் – குற்றியலுகரம் – குற்றியலிகரம் ஒரு முக்கோண விளக்கம்

கோடைகால வெயில் வெளுத்து வாங்கிக் கொண்டிருந்தது. வெளியில் போன நான் மிகவும் களைப்புடன் வீட்டுக்குத் திரும்பியிருந்தேன். “ஐயோ சரியான களைப்பாய்இருக்குது ஒரு காபி கிடைக்குமா அம்மா?” தான் செய்த வேலைகளை அப்படியே நிறுத்தி விட்டு ஐந்து நிமிடங்கள் கழித்து கையில் காபியுடன் வந்தாள். கையில் வாங்கி மடக் மடக் என்று குடிக்கும் ஆசையில் உறிஞ்சினேன். “ஆ” என்று அலறியப்படி காபீயை அப்படியே மேசையில் வைத்து விட்டு “என்னம்மா காபி கேட்டால் இப்படியா தருவாய்” என்று ஒரு செல்லக் […]