Archive for January, 2014
வாங்க ஃப்ரீயா பேசலாம்

”டேய் .. சுரேசு! எப்ட்றா இருக்கே? பாத்து எம்புட்டு நாளாகுது.” “ஏ .. மாப்ளே .. என்கிட்டயே பிட்ட போட்றியா? நேத்து காலம தானே உன்னய பாத்தேன்?” “என்னது? நேத்து காலம பாத்தியா? ஆமடா.. ஆமடா.. உங்க வீட்டு முன்னால பாத்தேனில்ல? முந்தாநா நம்ம சீனிவாசனில்ல .. அதாம்டா நெட்டுக்குத்தலா ஆறடிக்கு வளந்து நிப்பானே .. அதே சீனிவாசந்தேன்.. அவுங்க வீட்டுல பட்டறைய போட்டோம்..” “அங்கன பட்டறைய போட்டுட்டு மட்ட மல்லாக்க படுத்து கெடந்துபுட்டு என்னிய பாத்தத […]
சக்ரவர்த்தி இராசகோபாலாச்சாரி

அரசியல் சாணக்கியர் என்று பலரால் அழைக்கப்பட்ட ராஜாஜி எனும் ராஜகோபாலாச்சாரி பிறந்தது 1878ம் ஆண்டு, டிசம்பர் திங்கள் 10ம் நாள். இவர் அப்போதைய சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த தொரப்பள்ளியில் பிறந்தவர். இவரது தந்தை சக்கரவர்த்தி ஐயங்கார். சமஸ்கிருத பண்டிதரான அவர் தமது பிள்ளையின் படிப்பைக் கருத்தில் கொண்டு ஓசூருக்கு வர, ராஜாஜியின் பள்ளிப்படிப்பு ஓசூரில் துவங்கியது. படிப்பில் மிகவும் சூட்டிகையான மாணவராக இருந்தார் தொடர்ந்து தனது ஆசிரியர்களிடம் கேள்விகள் கேட்டு உலக விஷயங்களைத் தெரிந்துக் கொள்வதில் ஆர்வம் […]
எசப்பாட்டு – வேண்டுவதும் வேண்டாததும்

மண் மீது மகிழ்வாய் வாழ்ந்திட
பொன் பொருள் அளவாய் அவசியம்
பெண் அவளின் காதல் கிடைத்திட
மென் இதயம் இருத்தல் அவசியம்
கேளாய் மகளே

மானாட மயிலாடச் சொல்வேனடி
மனம்போல விளையாடச் சொல்வேனடி
தேனாகத் தமிழாகச் சொல்வேனடி
தானாகத் துயிலாடச் சொல்வேனடி
அரசியலில் இதெல்லாம் சகசமப்பா…

முடிந்தால் கட்டு
கட்டினால் இடி
முடிந்தவரை மௌனமாயிரு
உரத்துக் குரல்கொடு
ஆளுறக்கம் போல் நடி
வீழும்வரை பொறுமை கொள்
வீழ்ந்தபின் உரக்கக் கத்து
உலகச் செம்மொழி – அத்தியாயம் 9

அத்தியாயம் 8 செல்ல இங்கே சொடுக்கவும் கி. பி. 48ஆம் ஆண்டு சமயத்தில், இன்றைய இந்தியாவைச் சேர்ந்த இளம் பேரழகியின் கனவிலும் கொரிய இளவரசன் சுரோவின் கனவிலும் ஒருவருக்கொருவர் மாறிமாறி தோன்ற இருவரும் காதல் வயப்படுகின்றனர்.இந்தியப் பேரழகி மரக்கலம் ஏறிக் கடல் வழியே பயணம் செய்து கொரிய தீபகற்பத்தை அடைகின்றாள். இளவரசன் சுரோவை மணந்து கொரியாவின் காராக் பேரரசை ஆள்கிறார்.. அவர்களுக்கு 12 வாரிசுகள் இருந்தனர். அரசி இறக்கும்போது தங்கள் குழந்தைகளை அழைத்து “அம்மா, அப்பா” என்று […]
இலகுவான மீன் குழம்பு

மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி பின்னர் மஞ்சள், பாதி கறி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து ஒருபக்கத்தில் வைத்துக்கொள்ளவும். பழப்புளியை சற்று சூடான ½ கோப்பை நீரில் குழைத்து, புளிச்சாறை வடித்துக்கொள்ளவும்.
ஒரு தட்டையான சட்டியில் மிதமான சூட்டில் சற்று மிளகு, வெந்தயம்,கடுகு,சீரகம் போன்றவற்றைப் பாதி கறிவேப்பிலை சேர்த்து 1-2 நிமிடம் வறுக்கவும். பின்னர் சமையல் எண்ணெய் சேர்த்துக்கிளறி, மீன் துண்டுகளை அதன் மேலை வைக்கவும். 30 நாழிகளில் மீன் துண்டுகளை மறுபுறம் திருப்பி விடவும். மேலும் 30 நாழிகளில் இதர பொருட்களை எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும். மீன் துண்டுகள் குழம்பில் மூழ்கி இருப்பது முக்கியம்.
ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-3

(பகுதி 2) புலம்பெயர்ந்தோர் கவிதைகளில் உள்ளடக்கம் கவிதையின் உள்ளடக்கம் என்பது, அது எதைப்பற்றிச் சொல்ல முனைகிறது என்பதைப் பொறுத்ததாகும். கொளு, கரு, பாடுபொருள், உள்ளீடு, பொருள், விஷயம், தீம், பாவிகம் போன்ற பல பெயர்களினால் இதனை அழைப்பர். ‘’எழுதப்பட்ட அல்லது பேசப்பட்ட பொருளின் செய்தி உள்ளடக்கம்’’ என க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி குறிப்பிடுகின்றது. இவ்வகையில், ஒரு கவிஞன் கூறவிழையும் பொருள் பொதுமையானது. அது சமூகத்துக்குரியது. வருணனை மட்டுமே கவிஞனுக்கு உடைமையானது. கவிதையின் பொருள் வேறு, கவிதை […]