Archive for September, 2015
திரைப்படக் குறுக்கெழுத்து

இடமிருந்து வலம் அபிநய சரஸ்வதி என்ற செல்லப் பெயர் கொண்டவர் இவர் (5) பிரமிளா தேவி என்ற இயற்பெயர் கொண்ட நடிகை – இவரது மகளும் கனகா என்ற பெயரில் நடித்தார். (3) 1931ம் ஆண்டு தமிழில் (தெலுங்கு, ஹிந்தி உரையாடல்களும் இதில் இடம்பெற்றிருந்தன) வெளிவந்த முதல் பேசும் திரைப்படம் (4) இந்நாளைய செலவாளி இயக்குனரான இவரது பெயரில் எண்பது படங்களைப் படைத்த புகழ் பெற்ற முன்னாள் இயக்குனர் ஒருவரும் இருந்தார். (4) கேரளாவில் பிறந்து, தமிழில் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 18

(அத்தியாயம் 17 செல்ல இங்கே சொடுக்கவும்) அரபிய தீபகற்பத்தின் வடபகுதியில் தான் நாகரிகத்தில் உச்சம் தொட்ட சுமேரிய நாகரீகம் தோன்றியதாகச் சொல்லப்படுகின்றது. இது இன்றைய இராக் நாடாகும். இங்குதான் யூஃப்ரடீஸ் மற்றும் சின்னார் என்று அழைக்கப்படுகின்ற டைக்ரஸ் நதிகள் ஓடுகின்றன. இவ்விரு ஆறுகளும் இப்பகுதியை வளம் கொழிக்கச் செய்கின்றன. அக்காடிய மொழியில் யூஃப்ரடீஸ் ஆற்றை இப்-புரத்து ஆறுஎன அழைத்தனர். இந்தப்பக்க ஆறு அந்தப்பக்க ஆறு என்பதை இப்புரத்து ஆறு அப்புரத்து ஆறு என்று குறிப்பிடப்பட்டது. இதே ஆற்றைப் […]
தனித் தீவு

அதி காலை மணி 5. யாரோ தலையில் தட்டியது போல எழுந்தாள் வாணி. சிறிது நேரம் தூக்கம் கலையும் வரை அப்படியே படுத்திருந்தாள். அருகில் படுத்திருந்த குரு புரண்டு படுத்தான். இவள் முழித்து இருந்ததைப்பார்த்து, பக்கத்தில் இருந்த கடிகாரத்தைப் பார்த்தான். “மணி 5 தானே ஆகுது, ஞாயித்திக்கிழமை தானே? தூங்கு”. “தூக்கம் வரல. வழக்கமா எழுந்துக்கிற நேரம் அதான். நான் கீழே போறேன்.” ஏனோ வாணிக்கு இந்தச் சனி ஞாயிறு சீக்கிரம் எழுந்திருப்பது மிகவும் பிடித்தமான ஒரு […]
விநாயகர்ச் சதுர்த்தி

கல்லிற் செய்த கருஞ் சிலையாம்
கணக்காய் அமைத்த கற் கோயிலாம்
கருணைக் கடவுளாய்க் காண்பவர் பலராம்
கண்மூடித் தனமாய்க் கடிந்துரைப்பர் சிலராம்
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15

பிரயாண அவலம் (ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-14) புலம்பெயர்ந்து உலகின் திசையனைத்தும் சென்று வாழ்வதென்பது சுலபமான விடயமல்ல. உரிய ‘வீசா’, ‘பாஸ்போர்ட்’ இல்லாமல் திருட்டு வழியில் கடல் கடந்தும் காடு, மலை கடந்தும் நாடு விட்டு நாடு கடந்தும் கண்டம் விட்டுக் கண்டம் ஓடியும் தமது பயணங்களை மேற்கொண்டு, பல மாதங்கள் தொடக்கம் சில வருடங்கள் வரை நீண்ட பயணத்தைச் செய்து கடினமான வழிகளில் உலகின் திசையனைத்தும் பரவினர். பேற்றோல் பவுசர்கள், பாரவூர்திகள், கொள்கலன்களில் சென்று இடைநடுவில் […]
இறக்கும் மனிதர்கள் ; இறவாப் பாடல்கள்

சென்ற ஜூலை மாதம், பதினான்காம் நாள்….. சென்னை சாந்தோம் பகுதியின் வாகன இரைச்சல்களுக்கு நடுவே உயர்ந்து நிற்கிறது அந்த வெள்ளை வீடு. சூரியனின் ஒளி விழுந்து அந்தச் சூட்டால் ஆர்ப்பரித்த கடலலைகளின் ஓலம் விட்டு விட்டுக் கேட்கிறது. மலர் மாலைகளின் வாசம் காற்றில் தவழ்ந்து அருகிலிருக்கும் கடற்புறத்தின் வாடையை நசுங்கச் செய்கிறது. ஆங்காங்கே மீனுக்காகப் பறந்து செல்லும் பறவைகள் ஒலி எழுப்பிக் கொண்டே செல்கின்றன. மிகவும் ரம்மியமான காலைப் பொழுது. தமிழ்த் திரையுலகைச் சார்ந்த பல நட்சத்திரங்கள், […]
விலையில்லா விளையாட்டு!

நடை பழக ஒரு பொம்மை, ஒலி அறியச் சில பொம்மைகள், அடுக்கிச் சேர்க்கப் பல வகைகள், சின்னதான சமையலறை, அழகு படுத்தும் ஒப்பனைப் பொருட்கள் கொண்ட அழகுப் பெட்டிக்கடை (boutique), வண்ணமய வடிவம் செய்து விளையாடும் மாவு (Play Dough), கட்டி அணைத்துக் கொண்டாட மென் பஞ்சு பொம்மைகள் (soft toys), சிறிய அளவு சிற்றுந்து பொம்மைகள் என இவையெல்லாம் என் பிள்ளையின் விளையாட்டு அறையை எட்டிப் பார்த்த கணம் என் கண்ணில் பட்டவை. இதைக் காணுகையில் […]
கிழித்தெறியப்படும் கவிதைகள்

இந்தக் கவிதைகளை எங்கள் பண்பாடென
ஒருகாலத்தில் நாங்கள் உறுதி பூண்டிருந்தோம்
புழுக்கத்தில் கசியும் இரவுகளில் கூட
நெறி தவறாமல் – நாம்
எம் கவிதைகள் படித்தோம்
லேக் சுப்பீரியர் – ஏரிகளின் ராணி

மினசோட்டாவில் ஒரு வருடத்திற்கு மேல் இருந்தவர்கள் அனைவரும் கண்டிப்பாக டுலுத்‘திற்கு (Duluth) ஒரு விசிட் அடித்திருப்பார்கள். ‘என்னது, மினசோட்டாவில் இருந்துவிட்டு டுலுத் போனதில்லையா?’ என யாராவது கேட்டுவிடுவார்களா என பயந்தே பலரும் போய்விட்டு வந்திருப்பார்கள். போலவே, லேக் சுப்பீரியரும். லேக் சுப்பீரியரின் கரையோரத்தில் இருக்கும் டுலுத்திற்கு செல்பவர்களின் கண்களில் இந்த சுப்பீரியர் ஏரி படாமல் போவதில்லை. அமெரிக்காவில் இருக்கும் ஒவ்வொரு பகுதியிலும், இலையுதிர் காலத்தில் இயற்கையின் வர்ண ஜாலத்தைக் காண சில இடங்கள் இருக்கும். Fall color […]
சொற் சதுக்கம்

கீழே பெட்டிக்குள் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு பொருளுள்ள சொற்களை அமையுங்கள். சொற்கள் எத்தனை எழுத்துக்களை வேண்டுமானாலும் கொண்டிருக்கலாம். எ.கா. மனம். 25 சொற்களுக்கு மேல் கண்டுபிடித்தால் நீங்கள் தமிழ் வித்தகர் என்று சொல்லிக்கொள்ளலாம். ட வ ம த ம் ன வே க ர (சொற் சதுக்கம் – விடைகள்)