Archive for December, 2016
காலிஃப்ளவர் பனீர் கட்லெட்

டிசம்பர் – ஜனவரி மாதக் குளிருக்கு , சாயங்கால வேளையில் மசாலா டீயும், வடையும் கிடைத்தால், குளிர்காலத்தை இன்னும் இரண்டு மாதங்களுக்கு நீடித்தாலும் சம்மதிப்பார்கள் தமிழர்கள். அப்படி ஒரு வெற்றிக்கூட்டணி இது. ஆனால், வடையில் கார்ப் (Carb), ட்ரான்ஸ் ஃபேட் (Transfat) போன்ற கெட்ட சங்கதிகள் உள்ளன. நீண்ட கால உட்கொள்ளலில், உடல் நலத்திற்குச் கேடு ஏற்படுத்தக்கூடியது. இதையெல்லாம் கருத்தில் கொண்டு, சுவைக்கும் ஆரோக்கியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்துச் சமைக்கப்படும் ஒரு சிற்றுண்டி, இந்த கட்லட். எந்த மாவும் […]
ஓசோன் துளை

புறஊதாக் கதிரால் ஆகுமாம்
ஓசோன் படலம்
அக்கதிரால் சிதைவும் அடையுமாம்
ஓசோன் படலம்
மின்சாதனப் பொருளால் வருமாம்
குலோரோ சேர்மம்
பனித்துளிகளைக் கத்தரிப்போம்

பனித்துளிகளைக் கத்தரிப்போம் தம்பி, தங்கைகளா வாருங்கள், பனிக் காலத்தில் கத்தரிக்கோல் கலைகளைப் பழகுவோம். கீழே உள்ள வடிவங்களையும், பல் வேறு பனிமழைத் துளி உருவங்களையும் வெட்டியெடுத்து அலங்கரிப்போம். செய்முறை சதுரக் காகிதத்தை 6 முனைகளாக மடிக்கவும். முடித்த ஒரு கோணத்தில் கீழேயுள்ள பனித்துளி உருவங்களை வெட்டியெடுங்கள் மாலையாகக் கோர்த்தும், சோடனையாக யன்னல் கண்ணாடிகளில் ஒட்டி அலங்கரி்த்தும் அழகு பார்ப்போம்.
மார்கழித் திங்கள் மதிநிறைந்த நன்னாளாம் !!

வைகறைப் பொழுதினிலே வான்திறக்கும் முன்னமேயே
வைத்திருந்த நீரதிலே வாசலையும் தெளித்தெடுத்தே
வைப்பதற்குப் பூசணியும் வரைந்தெடுத்த மாக்கோலமே
வையமனைத்திற்கும் மார்கழி வந்ததனைச் சொல்லிடுதே !!
கிறிஸ்மஸ் கிஃப்ட்

வழக்கம்போல காலை ஐந்தரை மணிக்கு அலாரம் தலையில் சம்மட்டி போல் அடிக்க, போர்வையை விலக்கி விட்டு எழுந்தான் கணேஷ். திரை நீக்கித் திறந்திருந்த ஜன்னலின் வெளியே பார்க்க, இன்னும் கும்மிருட்டு நிரம்பியிருந்தது. ”யப்பா, இன்னிக்கு ஒரு நாள் ஆஃபிஸ் போனாப் போதும், கிறிஸ்மஸ் நியூ இயரோட சொந்த லீவையும் சேத்து பத்து நாள் எங்கயும் போக வேண்டாம்”.. சிறு குழந்தை போல விடுமுறையை நினைத்துக் கொண்டே குளியலறை நோக்கிச் சென்றான். பல் தேய்க்கலாம் என்று குழாயைத் திறந்தால் […]
ஸ்திதப் பிரக்ஞன்

இந்த சமஸ்கிருத வார்த்தையை முதன்முதலாகக் கேள்விப்பட்டது, சமீபத்தில் மறைந்த திரு. சோ ராமசாமி அவர்கள் முன்னாளைய பாரதப் பிரதமர் மொரார்ஜி தேசாய் குறித்து 1990 களில் எழுதிய கட்டுரையில்தான். இந்த வார்த்தைக்கு என்ன பொருள் என்று புரிந்திராத காலமது. சோ அவர்கள் மொரார்ஜி தேசாய் குறித்து எழுதுகையில், இந்த வார்த்தையில் பொதிந்துள்ள பல தத்துவார்த்தப் பொருட்களை விளக்கியிருப்பார். அவற்றில் ஒன்று, சாதாரண மனிதராகவே வாழ்ந்து, உலகில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளையும் சாட்சி பாவத்தில் பார்த்திருந்து, நடுநிலைமையில் மட்டுமே […]
அனுபவ வாழ்க்கை

வண்டியை நிறுத்திவிட்டு, பக்கத்தில் இருந்த கைப்பையை எடுத்தாள் த்ரிவேணி. கைப்பை அருகில் இருந்த கோப்பையும் எடுத்துக் கொண்டாள் . அன்றைய நாளை மனதில் ஒட்டிய படி இறங்கினாள் . இன்றைய பொழுது ஒரு புதிய பெண் வந்து வகுப்பில் இணைவதாக, ஒரு வாரம் முன்பே பள்ளி முதல்வர் வேணியிடம் அறிவித்திருந்தார். வண்டியைப் பூட்டி விட்டு வகுப்பை நோக்கி நடக்கத் தொடங்கினாள். கருமையான நிறத்தில் ஒரு “ஃபார்மல்” பாண்ட் , வெளிர் நிறத்தில் ஒரு முழுக்கைச் சட்டை. தோள் […]
2016 – ஒரு பார்வை

எல்லா வருடங்களைப் போலவே, இந்த ஆண்டிலும் உலகம் பல ஏற்றத்தாழ்வுகளைக் கண்டிருக்கிறது. பல நல்லது கெட்டதுகளைச் சந்தித்திருக்கிறது. தூக்கி வாரிப்போடும் சம்பவங்களைச் சகஜமாகக் கடந்திருக்கிறோம். சிலது வெறும் சம்பவங்கள், சிலது மைல்கல்கள், சிலது திருப்புமுனைகள். ஒவ்வொருவர் வாழ்விலும் ஏதேனும் வகையில் முத்திரை பதித்திருக்கும் 2016ஆம் ஆண்டின் டைரிக்குறிப்புகளில் எழுதப்பட்ட முக்கிய உலக நிகழ்வுகளைத் திரும்பிப் பார்க்கலாமா? கனடா தமிழர் பாரம்பரிய மாதம் அக்டோபர் மாதம் ஐந்தாம் தேதியன்று, கனடா பாராளுமன்றத்தில் ஜனவரி மாதத்தைத் தமிழர் பாரம்பரிய மாதமாக […]