Archive for March, 2017
CONNECT INDIA 2017

இந்தியா அசோஸியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) சார்பில் பிப்ரவரி 11ம் தேதி அன்று “CONNECT INDIA 2017” நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் மினசோட்டாவில் உள்ள அனைத்து இந்திய அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் உள்ளூர் பிரமுகர்கள் பங்கேற்றனர். அன்றைய தினம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில உங்கள் பார்வைக்கு. ராஜேஷ்
ஹைக்கூ கவிதைகள்

முதல் காதல் …! முகப் பொலிவோடு நான் முதலாய் அவன் …! முகமறியாக் காதலில் முழுவதுமாய் அவன் …! முப்பொழுதும் அவன் நினைவால் முழுநிலவாய் நான் …! முதல் காதல் முகவுரை ஆகுமா..? முடிவுரை ஆகுமா …?! மூர்ச்சையாகிறேன் நானே…!! **** உலகமயமாக்கல் ! முதுகெலும்பை முறித்து முடக்கியது விவசாயம் உலகமயமாக்கல் …! **** கருக்கலைப்பு கல்யாண நாளன்று கருக் கலைப்பு செய்தாள் தன் காதலை பெற்றோருக்காக…! **** மது – மாது …..! […]
ஃபேஸ்புக் புர்ச்சியாளர்கள்

அதென்ன புர்ச்சி? எந்நேரமும் களத்தில் நின்று போராடினால், அது புரட்சி. டைம்பாஸுக்காக, இணையத்தில் உட்கார்ந்து அன்றைய தினத்தின் ஹாட் டாபிக்கிற்குச் சவுண்ட் விட்டுக் கொண்டிருந்தால், அது புர்ச்சி. 🙂 சமீப ஆண்டுகளில், இத்தகைய புர்ச்சியாளர்களின் புகலிடமாக, ஃபேஸ்புக் இருந்து வருகிறது. சமயங்களில், நம்ம சுற்று வட்டாரத்திலேயே இவ்வளவு புர்ச்சியாளர்களா என்று மலைக்க வேண்டியிருக்கிறது. இவர்களை அடையாளம் காண்பது எப்படி? கண்டிப்பாக, டெய்லி போஸ்ட் போடுவார்கள். போடாட்டி? ஆபீஸ்ல புழிஞ்சு எடுத்துட்டு இருக்காங்க’ன்னு புரிஞ்சுக்கோங்க!! சொந்தக் கதை, வீட்டு […]
உரிமைகள் மசோதா-2

முதல் சட்டத் திருத்தம் முதல் திருத்த வரைவிலக்கணத்தின் தமிழாக்கம் (உரிமைகள் மசோதா – 1) அமெரிக்க அரசு, எந்தவொரு மத அமைப்பையும், அவற்றைக் கடைபிடிப்பதையும் ஏற்கவோ, மறுக்கவோ எந்தச் சட்டமும் இயற்றாது. இது பேச்சுச் சுதந்திரம், பதிப்பகச் சுதந்திரம், அமைதியாக இயங்கக் கூடும் இனக்குழுக்களின் சுதந்திரம் மற்றும் தங்களது குறைகளை அரசிடம் முறையிடும் சுதந்திரம் ஆகியவற்றுக்கும் பொருந்தும். மேலேயுள்ளவற்றில் பேச்சுச் சுதந்திரம் (freedom of speech) என்று குறிப்பிடப்பட்டிருந்தாலும் அது கருத்துச் சுதந்திரம் என்ற பொருளிலேயே கையாளப்படுகிறது. […]
பேர்ள் ஹார்பர்

ஒரு புறம் போருக்கான ஆயத்தங்கள் ரகசியமாக நடந்து கொண்டிருக்க, மறுபுறம் சமாதானத்திற்கான பேச்சுவார்த்தை முயற்சிகளும் நடைபெற்று வந்தன. ஜப்பானியப் பிரதமர் ஃபியூமரோ கோனோ , அமெரிக்க அதிபர் ரூஸ்வெல்டுக்கு, பேச்சு வார்த்தைக்கான அழைப்பினை விடுத்தார். பேச்சு வார்த்தை கூட்ட நேரங்களை வீணடிக்க வேண்டாம் என்று நினைத்த அதிபர் ரூஸ்வெல்ட், பேச்சு வார்த்தைக்கான நிரல்களையும், முடிவுகளையும் ஓரளவுக்கு உறுதி செய்து கொண்ட பின்னர் நேரில் சந்திப்பது உசிதமாக இருக்கும் என்று வலியுறுத்தினார். ஏற்கனவே ராணுவப் பிடியிலிருந்த பிரதமர் கோனோ, […]
வசந்தத்தின் தொடக்கம் (Spring Equinox)

இந்த ஆண்டு 2017 இல் மார்ச் 20ஆம் தேதியன்று வசந்த காலத்தின் தொடக்கமான சமப் பகலிரவு தினம் (Equinox) நிகழவிருக்கிறது. Equinox என்பது சமமான இரவு என்ற பொருளளிக்கும் லத்தீன் வார்த்தையில் இருந்து வந்த சொல். ஒரு வருடத்தின் இரு நாட்களில் மட்டுமே இரவும் பகலும் சமமான நேரம் கொண்டவையாக இருக்கும். ஒன்று, வசந்தச் சமப் பகலிரவு நாள் (Spring Equinox). மற்றொன்று, இலையுதிர் சமப் பகலிரவு நாள் (Autumn Equinox). ஏன் அனைத்து நாட்களிலும் இரவும், […]
சர்வதேச மகளிர் தினம்

மிகச் சமீபத்தில், சர்வதேச மகளிர் தினத்தைக் கொண்டாடிவிட்டோம். கண்ணைக் கவரும் வாழ்த்தட்டைகளைப் பகிர்ந்து கொண்டாயிற்று; நமக்குத் தெரிந்த பெண்களுக்கும், ஊடகப் பொதுவெளிகளிலும் மனதை வருடும் வாசகங்களுடன் ‘மகளிர் தின வாழ்த்துகளை’ப் பதிவு செய்தாகிவிட்டது. நான் பெண்களை மதிப்பவன் என்று சட்டையில் அடையாள வில்லை குத்திக் கொண்டு அடுத்த வருட மார்ச் மாதம் எட்டாம் தேதி வரை மற்ற உலக வழக்குகளில் கவனம் செலுத்தலாம். ‘நள்ளிரவில் ஒரு பெண் நகைகள் அணிந்து பாதுகாப்பாக சென்று வர முடிகிறது என்றால் […]
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம் ! அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன் வெந்து தணிந்தது காடு – தழல் வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!! – மகாகவி சுப்பிரமணிய பாரதி அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்வது, பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்வு செய்யும் திறமை என ஏதோவொரு துறையைக் கை வந்த […]