Archive for June, 2017
ரிது – பருவக்காலங்களின் கோர்வை

மினியாபொலிஸ் நகரில் ஜனவரி மாதத்தில் “ரிது (RITU) – பருவங்கள்” எனும் நாட்டிய நிகழ்ச்சி நடந்தேறியது. ரிது எனும் சம்ஸ்கிருத சொல், தெற்காசிய நாடுகளில்- குறிப்பாக இந்தியா, பங்களாதேஷ், நேபால், இலங்கை போன்ற நாடுகளில் நிலவும் ஆறு பருவகாலங்களைக் குறிப்பிடும் பதமாகும். இப்பருவக் காலங்களை வரிசைப்படுத்தி நான்காம் நூற்றாண்டில், காளிதாசரால் இயற்றப்பட்ட ரிது சம்ஹாரம் எனும் இலக்கியத்தின் அடிப்படையில் ‘கலா வந்தனம்’ எனும் பரதநாட்டியக் குழுவினர், நாட்டிய நிகழ்ச்சி ஒன்றை ஒருங்கிணைத்து அமைத்திருந்தனர். இந்நிகழ்ச்சி , […]
மினியாப்பொலிஸ் நகரத்தைச் சுற்றியுள்ள பார்வை இடங்கள்

மினியாப்பொலிஸ் நகரத்தில் இருந்து இலகு ரக ரயில் (light-rail), பேருந்து bus மூலம் சென்று பார்வையிடக் கூடிய இடங்கள் (1) DOWNTOWN ST. PAUL இலகு ரக ரயில் – GREEN LINE – ஐ 5ஆவது தெருவிலிருந்து . எடுத்துக்கொள்ளவும் (2) EAT STREET சுமார் 55 க்கும் மேற்பட்ட உணவகங்கள், நிகொலேட் அவென்யுவின் 20 குறுக்குத் தெருக்களில் காணப்படுகின்றன . இவ்விடம் போவதற்கு 3ஆவது அவென்யூ, 2 ஆவது அவென்யூவிலிருந்து பேருந்து எண்கள் 17 […]
தந்தையெனும் உறவு

செல்வமெனக் குழந்தை ஜனித்த பொழுதில் சொல்ல வார்த்தையின்றி உருகிய உள்ளம்! செல்லச்சேய் கரங்களில் தவழ்ந்த பொழுதில் மெல்லப் பூத்திட்ட விழிநீரில் பெருமிதம்! தந்தை எனும் பொறுப்புயர்வு அடைந்ததும் சிந்தை எலாம் குழந்தை நினைந்து நிந்தை எலாம் புறந்தள்ளி உழலும் விந்தை பலபுரிந்து நிற்கும் நற்சொந்தம்! தான் காணப் பெறாத உலகத்தை வான் ஏறித் தொடாத உச்சத்தை சான்றோனாய்த் தன் பிள்ளை அடைந்து மாண்புற வேண்டி ஏங்கும் நெஞ்சம். நடை பயின்ற தளிர் பருவத்தில் கடை விரல்பிடித்துப் […]
மினஹஹா நீர்வீழ்ச்சி (Minnehaha falls)

மின்னியாபொலிஸில் வாரயிறுதியில் குடும்பத்துடன் எங்குச் செல்வது என்று ரொம்பவும் குழம்ப வேண்டியதில்லை. மதிய உணவு தயார் செய்து கொண்டு எங்காவது ஒரு ஏரிக்கரையோரம் தஞ்சம் புகுந்து விடலாம். உட்கார்ந்து சாப்பிடுவதற்குத் தயார் நிலையில் மேஜை நாற்காலி, குழந்தைகள் விளையாடுவதற்கு விளையாட்டுக் கருவிகள், பெரியவர்கள் நடமாட நடை பாதை எனச் சகல அம்சங்களும் இருக்கும். மினஹஹா நீர்வீழ்ச்சியும், அது அமைந்திருக்கும் மினஹஹா பூங்காவும் அருமையான நல்ல வாரயிறுதிப் புகலிடங்கள். மினியாபொலிஸ் நகருக்குள்ளேயே இருக்கும் சிறு நீர்வீழ்ச்சி இது. மினடோங்கா […]
கிறீன்லைன் – சிறிய மீ-கொங் (Little Mekong)

மினசோட்டா மாநிலத்திற்கு வருகை தரும் விருந்தாளிகளுக்கும், உள்ளூர் மக்களுக்கும் கிழக்காசிய – முக்கியமாக தாய்லாந்து, வியட்னாம், கம்போடிய – மலையகவாசிகளாகிய மங் (Hmong) மக்களையும், சீனாவையும் இணைக்கும் மீ-கொங் ஆற்றோர உணவுகளைப் பரிமாற வரவேற்கிறது செயிண்ட் பால் நகர சிறிய மீ-கொங் பகுதி. இந்தப்பகுதி ஃப்ராக் டவுன் (Frogtown) என்றும் அபிமானிகளால் அழைக்கப்படுகிறது. எச்சில் ஊறும் பல்வகை கிழக்காசிய உணவகங்கள் பல்கலைக்கழக வீதி (University Avenue), குறுக்கு வீதிகள், வடக்கு டேல் (Dale North st.) […]