Archive for July, 2017
விவசாயிகள் சந்தை – 2017

விவசாயத்தைப் பிரதான உற்பத்திப்பொருட்களாக ஏற்றுமதி செய்யும் மினசோட்டா மாநிலத்தில் கோடைக் காலம் குதூகல என்பது உள்ளூர் காய்கறி வாங்கியோ அல்லது சொந்தத் தோட்டத்தில் வளர்த்தோ, சமைத்துச் சுவைக்கும் காலம். கோடை கடந்தால் குளிர் வந்துவிடும். எனவே, சுறுசுறுப்பாக பொடிநடை போட்டு, அழகான உணவுகளைப் பதமாகத் தெரிவு செய்து, மிகக் குறைந்த சில்லறைக் காசுகளால் பை முழுதும் பல கறிவாங்க ஒரே சந்தர்ப்பம் விவசாயிகள் சந்தையே. இதோ உங்கள் அருகாமையில் உள்ள இவ்வருட உள்ளூர் விவசாயச் சந்தைகள் அட்டவணை. […]
ஃபெட்னா பேரவைத் தமிழ் விழா 2017

ஃபெட்னாவின் 2017 பேரவைத் தமிழ் விழா, மினியாபொலிஸில் எம்சிசி (MCC) என்றழைக்கப்படும் பிரமாண்ட கன்வென்ஷன் சென்டரில் (Minneapolis Convention Center) ஜூலை 1, 2 மற்றும் 3 ஆம் தினங்களில் வெகு விமரிசையாக நடைபெற்றது. இவ்விழாவுக்கு அமெரிக்கா, இந்தியா, கனடா, சிங்கப்பூர் என உலகின் பல பகுதிகளிலிருந்தும் விருந்தினர்கள் வந்து கலந்துகொண்டனர். முன்னதாக, 31 ஆம் தேதி வெள்ளியன்று மாலை, வந்திருந்த விருந்தினர்களைச் சந்தித்து, அவர்களுடன் உணவருந்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ‘நட்சத்திர இரவு’ நிகழ்ச்சி செயிண்ட் பாலில் […]
பிக் பாஸ் சர்ச்சைகள்

‘பிக் பாஸ்’. தமிழ் தொலைக்காட்சியை, இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தை, உலகில் பல மூலைகளில் வாழ்ந்து வரும் தமிழரை ஆட்டி வைக்கும் சொல்லாகி விட்டது பிக் பாஸ். யூ டுயூபில் கிளிக் செய்யும் லிங்க்கில் எல்லாம் சுத்தமாகச் சவரஞ்செய்து கண்ணாடி போட்ட கமல் மேதாவித்தனம் காட்டி முறைக்கிறார். ஜூலியானா, கஞ்சா கருப்பு, ஆர்த்தி, சினேகன், காயத்ரி, ஓவியா எனப் பலரது பெயரைக் கேட்டு, படித்துக் காதுகளும், கண்களும் சிவந்து விட்டன. ஜி.எஸ்.டி. புண்ணியத்தால் புதுத் தமிழ்ப்படம் ஏதும் வராமல் […]