Archive for August, 2017
வட அமெரிக்கத் தமிழ்த் தெருவிழா (Tamil Fest-Scarborough’s largest street festival)

நடுத்தெருவில் குத்தாட்டம் வேண்டுமா, கொம்பனாட்டம் வேண்டுமா, இல்லை சிலம்பாட்டம் வேண்டுமா? அல்லது பாட்டுக் கேட்டு ஆடணுமா, மெட்டுப்பாட்டு முணுமுணுக்கணுமா எல்லாமே உண்டு இந்தத் தமிழர் தெருத் திருவிழாவில். கனேடியத் தமிழ் மக்களின் தரமே வட அமெரிக்காவில் ஒரு தனி விசேடம். ஏறத்தாழ 300,000 இற்கும் மேற்பட்ட தமிழர் வாழும் ரொன்ரோ மாநகரில் ஸ்கார்பரோ பகுதியில் மூன்றாவது வருடமாக நடைபெறும் கனேடியப் பண்டிகை இது. இந்தப் பண்டிகை ஆகஸ்ட் மாதம் 26, 27 தேதிகளில் நடைபெற்றது. ஊர்க் கோயில் […]
கவித்துளி

கவித்துளி 1 இரவின் மடியில் இளைப்பாறுகையிலே இன்னிசை மழை இனிதெனப் பொழிந்திடவே இளந்தென்றல் இதயத்தை இதமாய் வருடிடவே இசையில் இணைந்திட பாவிமனம் தவித்திடவே இன்பத்தின் உச்சந்தனை அள்ளி நுகர்ந்திடவே இன்னிசையோடு இயைந்தே இன்பத்தை எய்திடவே இதயத்தில் நாணத்தோடு காதல்தீபம் ஏற்றிடவே இன்முகத்தோடு இதய சிம்மாசனத்தில் ஏறிடவே இதழில் பழரசம் பருகிடக் காத்திருக்கவே இடுப்பு மடிப்பினில் இதயம் பறிபோயிடவே இரவின் நீளத்தில் கோலமகளும் நாணிடவே இரவின் ஒளியினில் இதழ் பதித்திடவே இன்னுயிரும் மெய்யதுவும் ஒன்றாகி இணைந்துவே !!! கவித்துளி 2 […]
மினசோட்டா தலைமையக மறுதிறப்பு (Minnesota Capitol Reopening)

முதன்முதலில் 1905 ஆம் ஆண்டு திறக்கப்பட்ட மினசோட்டாவின் தலைமையகத்தில் 2013இல் மறுசீரமைப்புப் பணிகள் தொடங்கப்பட்டன. இருக்கைகளை அதிகரிப்பது, பொதுமக்களுக்கான புதிய கலந்துரையாடல் அறைகள் அமைப்பது, கழிப்பறைக் கட்டுமானங்கள், புதிய விருந்தினர் மையம் எனப் பல விஸ்தரிப்பு வேலைகள் நடைபெற்றன. இதற்காகச் சுமார் 310 மில்லியன் டாலர்கள் செலவிடப்பட்டது. இச்சமயத்தில், கட்டிடத்தின் சில பகுதிகள் மட்டும் பயன்பாட்டில் இருந்தன. இம்மாதம் ஆகஸ்ட் 11 ஆம் தேதி, பணிகள் அனைத்தும் நிறைவடைந்து, தலைமையகம் மக்களின் முழுமையான பயன்பாட்டிற்குத் திறக்கப்பட்டது. […]
பார்க்கர் ஏரி நீர் சறுக்கு (Water Ski Show)

மினசோட்டா எங்கும் ஏரிகளாக இருப்பதால், விதவிதமான நீர் சார்ந்த விளையாட்டுகளை இங்குள்ளோர் விளையாடுவதுண்டு. அதில் வாட்டர் ஸ்கீ (Water Ski) எனப்படும் நீர்ச் சறுக்கு விளையாட்டும் ஒன்று. பனியில் சறுக்கிச் செல்வது போல், தண்ணீரின் மேல் சறுக்கிச் செல்லும் விளையாட்டு இது. வேகமாகச் செல்லும் படகில் கட்டப்பட்டிருக்கும் கயிறை ஒரு குழுவாகப் பிடித்துக்கொண்டு, ஒருவர் பின் ஒருவராக, ஒருவர் மேல் ஒருவராகப் பல நிலைகளில், பார்வையாளர்களைக் கவருமாறு சாகசம் புரியும் விளையாட்டு இது. மினசோட்டாவில் நீர்ச் சறுக்கு […]
இளைஞர்களே இனி அவசரம் வேண்டாம்..!

இன்றிருக்கும் இளைஞருக்கு ஈடில்லா அவசரம்.. இல்ல மொன்றிருப்பதை யுமறவே மறந்தனர்.! என்றும் மெல்லத் தூங்கியே எழுவர்…எழுந்தபின்.. வெல்லத்தான் நினைப்பார் எதையும் எளிதில்,! ஒருவரியில் முழுவதையும் படிப்பதிலே அவசரம்.! படித்து முடிப்பதற்குள் படுக்கச்செல்ல அவசரம்.! பருவம் வருமுன்னே பாழுங்காதலிலும் அவசரம்.! பணிசெய்யும் இடத்திலே பதவிக்கும் அவசரம்.! சிட்டாகப் பறக்க வேண்டுமெனும் எண்ணம்.. எந்நாளும் வேண்டா மெனும்நிலை வேண்டும்.! மொட்டாகும் முன்னே பூப்பூக்க நினைத்தால்.. பூவுலகில் எல்லாமே தலைகீழாய் மாறிடாதோ.! கட்டான இளைஞரின் கட்டுக்கடங்கா வேகமது.. காதல் கனிந்திருக்கும் வரைப் […]
நீங்கள் எட்டு மணி நேரம் தான் வேலை பார்க்கிறீர்களா?

உலகமெங்கும் மே ஒன்றாம் தேதி கொண்டாடப்படும் தொழிலாளர் தினம், அமெரிக்காவில் மட்டும் செப்டம்பர் முதல் திங்கள் அன்று கொண்டாடப்படும் காரணம் என்ன? அமெரிக்காவுக்குச் சைனீஸ் நூடுல்ஸும் டொமட்டோ சாஸும் பிடிக்கும் அளவுக்கு, சோஷலிசமும் போராட்டங்களும் பிடிப்பதில்லை. மே 1 முதல் எட்டு மணி நேரம் மட்டுமே வேலை என்ற கோரிக்கையை முன் வைத்து நடத்தப்பட்ட சிகாகோ தொழிலாளர் போராட்டத்தை உலகமே வருடந்தோறும் மே ஒன்றாம் தேதி அன்று நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்க, அமெரிக்காவில் மட்டும் தொழிலாளர் […]
இந்தியா ஃபெஸ்ட் 2017 (India Fest)

இந்தியா அசோசியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) வருடம் தோறும் இந்தியச் சுதந்திரத் தினத்தையொட்டி மினசோட்டாவில் வசிக்கும் இந்தியர்களையும், இந்திய அமைப்புகளையும் ஒருங்கிணைத்து மினசோட்டா ஸ்டேட் கேப்பிடல் (State Capitol) மைதானத்தில் நடத்தும் இந்தியா ஃபெஸ்ட் (India Fest) நிகழ்வு, இந்தாண்டு ஆகஸ்ட் 19ஆம் தேதியன்று வெகு விமரிசையாக நடந்தது. அன்றைய தினம் வெளிப்புற நடமாட்டத்திற்கு ஏற்ற தட்பவெப்பம் அமைந்திருந்தது, இந்த நிகழ்வுக்குச் சாதகமாக இருந்தது. காலை பதினொரு நிகழ்ச்சிகள் தொடங்கின. மாமன்றக் கட்டிடத்தின் முன்பாக மேடை […]
அனாமதேய ஆபத்து

கடந்த இரண்டு மூன்று வாரங்களாக இணையங்களிலும், சமூகத் தளங்களிலும் காட்டுத் தீயெனப் பரவிவரும் சொல் ‘சரஹா’. இது புதிய சமூகப் பிணையப் பயன்பாட்டு மென்பொருள் (Social networking apps / Social networking software). வாட்ஸப், ட்விட்டர், ஸ்நாப்சாட், இன்ஸ்டாகிராம், பின்ட்ரெஸ்ட் போன்று பல பயன்பாட்டு மென்பொருட்கள் இருக்கும் பொழுது, இதென்ன புதுசா சரஹா? சரஹா (Sarahah) சவூதி அரேபியரான, ஜெயின் அல்-அபிதின் டாஃபிக் சரஹாவை உருவாக்கியுள்ளார். அரேபிய மொழியில் ‘சரஹா’ என்றால் வெளிப்படை, நேர்மை என்று […]