admin
admin's Latest Posts
எது தவறு?
“ராக்கி இந்த தபால் ஒரு வாரமா இருக்கே, அந்த அட்ரஸ்ல ஆள் இல்லையா? இல்லையின்னா அதை திருப்பி அனுப்புனவங்களுக்கே அனுப்பிச்சுடு” என்றார் போஸ்ட்மேன் ராக்கி என்கிற ராக்கப்பனிடம் சாம்ராஜ் நகர் போஸ்ட்மாஸ்டர். “சார் அந்த அட்ரஸ்ல இருக்கறவரு இரண்டு மூணு நாளைக்கு முன்னாடி இறந்துட்டாராம், அதான் என்ன பண்றதுன்னு வச்சுருக்கேன்,” “தபால் எங்கிருந்து வந்திருக்கு? கோயமுத்தூர்ல் இருந்து சார்” “சரி அந்தக் கடிதாசிய நாளைக்கே திருப்பி அனுப்பிச்சுரு,” சரி என்று கடிதத்தை எடுத்தவன் கடிதம் பிரிந்திருப்பதைப் பார்த்து […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 5
(பகுதி 4) சென்ற இதழில், இதே கட்டுரையில் “மே மாத இறுதிக்குள் ஜனநாயகக் கட்சியின் இறுதி வேட்பாளர் தெரிந்துவிடக் கூடிய வாய்ப்புள்ளது. ஆனால் குடியரசுக் கட்சியின் இழுபறி நிலை ஜூலை மாத மாநாடு வரையில் விலகாத நிலையே காணப்படுகிறது” என்று குறிப்பிட்டிருந்தேன். ஆனால் சென்ற மாதத்துச் சம்பவங்கள் அரசியல் எதிர்பார்ப்புகள் அந்தரத்தில் தொங்கும் பெண்டுலம் போல எந்த வகையிலும் ஆடக் கூடியவை என்பதை ஊர்ஜிதப்படுத்தியுள்ளன. மே மாதம் மூன்றாம் தேதி, தான் பெரிதும் எதிர்பார்த்த இண்டியானா மாநில ப்ரைமரி […]
இந்திரிய இன்பம்
இரவினில் கட்டிலினில் இன்பக் களிப்பினில்
இருக்கும் உணர்வுகள் இறுதிகண்ட பின்னரே
இல்லாமல் போனதேன்? இதுவே மகிழ்ச்சியெனில்
இணைந்து முடிக்கையில் இலகுவாய் விலகுவதேன்?
அம்மா ஒரு தீர்க்கதரிசி
ஒரு வியாழக்கிழமை அதிகாலை… அமெரிக்காவில், கணேஷின் வீடு என்றும் போல் அன்றும் வேலை நாளுக்கான காலை நேரப் பரபரப்பில் தொடங்கியிருந்தது. அவனுக்கு அலுவலகம் செல்ல வேண்டும், முதல் மீட்டிங்க் காலை 7 மணிக்கு. லக்ஷ்மிக்கும் அலுவலகம் செல்ல வேண்டும், சற்று லேட்டாக அலுவலகம் தொடங்குகிறதென்றாலும் குழந்தைகள் இரண்டையும் பள்ளிக்குத் தயார் செய்து, பெரியவளைப் பள்ளிப் பேருந்திலும், சிறியவளைப் பள்ளியிலும் சென்று சேர்த்து விட்டுத்தான் அவள் அலுவலகத்திற்குச் செல்ல இயலும். எல்லோருமே பரபரப்பாய் இயங்கும் நேரம். இந்த நேரங்களில்தான் […]







