admin
admin's Latest Posts
ஆட்டிஸம் – 2
(ஆட்டிஸம் – 1) ஆட்டிஸம் என்பதை ஒரு நிலை என்று விளக்குவதே சரியாக இருக்குமென நினைக்கிறேன். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைவு, பொதுவாக, குழந்தையின் மூன்று வயதுக்குள் தோன்றுகிறது. குறைபாடுகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பல வகைகளில் வேறுபடுகின்றன. சில குழந்தைகள் மற்றவரிடம் தான் தெரியப்படுத்த விரும்புவதைக் காட்ட இயலாத நிலையில் இருக்கலாம். வேறு சில குழந்தைகளால் சிறிய இயக்கங்களைச் செய்ய இயலாத நிலை – அதாவது ஒரு சின்ன கரண்டியையோ, பொம்மையையோ எடுத்து நகர்த்தி வைக்க இயலாத […]
திருவிவிலிய கதைகள் – நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?
“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்” என்பது தமிழர்கள் நாம் அனைவருக்கும் மிகவும் பழக்கமான கூற்று. இது சகோதரப் பிணைப்பைப் பாராட்டுவதாகும். சமுதாயத்தை அன்போடு பிணைத்துக் காப்பது சகோதர பாசமே. ஆனாப் பாருங்க, இன்னைக்கு நேற்று இல்ல, ஆதி காலத்திலிருந்து அண்ணன், தம்பி சண்டை இருக்கத்தானே செய்யுது. சரி இப்ப, ஆதி மனிதனான ஆதாமுடைய குடும்பத்தில சகோதரர்களுக்கு இடையே நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கப்போறோம். கிருஸ்துவ மறையின் புனித நூல் திருவிவிலியம் (Bible) ஆகும். இது புதிய ஏற்பாடு, […]
மினசோட்டாவின் கதை – பாகம் 2
(மினசோட்டாவின் கதை பாகம் 1) முதல் மனிதன் வட அமெரிக்காவிற்குக் குறிப்பாக மினசோட்டா மாநிலத்திற்கக்கு வாந்தான் அல்லது வந்தாள் என்று சரியாகத் தெரியாது. எனினும் மனித இனம் ஆசியாவிலும், ஆபிரிக்கக் கண்டங்களிலும் குடியேறியிருக்கும் அதே காலகட்டத்தில் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படவில்லை என்று இதுவரை வட மற்றும் தென்கண்டங்களில் நடந்துள்ள அகழ்வு ஆராய்ச்சித் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மினசோட்டாப்பகுதி மற்றும் வட அமெரிக்கவிற்கு வந்தவர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து ருஸ்ய-சைபீரியாவுடாக பெரிங் நீரிணையைக் கடந்து; பெரும் பனியுகம் பின்தாங்கத் தொடங்கியபின்னர் […]
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2
(எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 1) ஜாஸ் (Jazz) என்பது ஐம்பதுகளின் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இசை வடிவம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வியல் இசையாகக் குறிக்கப்படும் இது பல உட்பிரிவுகளைக் கொண்டு விளக்குவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் ப்ளூஸ் (Blues) எனும் பிரிவின் படி மனித வாழ்வியலில் இழையோடும் சோகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பிரபலமடையத் தொடங்கியது. அக்காலங்களில் இங்கு சவ ஊர்வலங்களில் இவ்வகை இசை […]
கலைவாணர்
”சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே சொந்தமான கை இருப்பு, வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும் இந்த சிரிப்பு” என்ற பாடலைக் கேட்டிராத, ரசித்திராத சென்ற தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களே இருந்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்து, நடித்து அதற்கு முழு உயிரும் கொடுத்த நகைச்சுவை நடிப்பின் மாமேதை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலே அவரின் சிந்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். நகைச்சுவையில், சமூக […]
குருதேவ் தீப யாத்திரை
>> English Versionஹரி ஓம்! நம் வாழ்க்கையில் நம் கற்றுக் கொள்ளவேண்டியது நிறைய உள்ளன. அதை உரிய முறையில் கற்றுக்கொள்ள ஒரு குரு அவசியம். பிறந்தவுடன் தாய் தந்தை நமக்கு முதல் குரு. பள்ளிப் பருவத்தில் பள்ளி வாத்தியார் நமக்கு இரண்டாம் குரு. அதே போல், முறையாக ஆன்மிகம் பயில நமக்கு ஒரு குரு அவசியம். வசிஷ்டர், சங்கராச்சாரியார், ராமகிருஷ்ண பரமஹம்சர், ராமானுஜர், ராகவேந்திரர், ரமணமஹரிஷி, சின்மயானந்தா என பல குருமார்கள் தோன்றி மறைந்துள்ளனர். குரு சின்மயானந்தா […]
யார் அந்த இராவணன் – பகுதி 2
(யார் அந்த இராவணன் – பகுதி 1) இலங்கைத் தீவு உருவான கதை இலங்கையின் ஆதிக்குடிகளாகக் கருதப்படும் இயக்கர் நாகர் பற்றியும், இவர்களோடு இராவணனுக்கு உள்ள தொடர்புகள் பற்றியும் பல ஐதீகங்கள் உள்ளன. ஒரு காலத்தில் புவிநிலப்பரப்பில் பல கண்டங்கள் இருந்தன என்றும், அவற்றில் ஒரு கண்டமாக இப்போதைய இந்தியாவும் அதனை அண்டிய நிலப்பரப்புகளும் காணப்பட்டன என்றும் சில வரலாற்றுக் குறிப்புக்கள் குறிப்பிடுகின்றன. இக்கண்டங்களை ஆட்சி செய்தவர்களில் மனுச்சக்கரவர்த்தி என்பவனும் ஒருவன். இவனுக்கு சமன் என்று ஒரு மகனும், […]
பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015
பண்டிகைக்காலப் பரவச தள்ளுபடி Holiday Shopping 2015 வட அமெரிக்க வாடிக்கையாளரே உங்கள் வாகனத்தை ஆரம்பியுங்கள். இந்த வாரம் (11/26/2015) அமெரிக்காவில் வியாழன் நன்றி நவிலல் நாள் உணவையுண்டு ஏப்பம் விட்ட அடுத்த நிமிடமே தள்ளுபடி பார்த்து பண்டங்கள் வாங்கி வர ஓடி வேண்டாமா? கனடாவிலும் ‘பாக்சிங்டே’ என்று தள்ளுப்படிக் காலம் ஆரம்பம். இந்த வருடம் சுமார் 135.8 மில்லியன் அமெரிக்க நுகர்வோருடன் நமது தமிழ் மக்களும் ஏட்டிக்குப்போட்டி போட்டு பண்டிகைகாலத் தள்ளுபடிகள் பெற்று செலவழிக்கவுள்ளனர். அமெரிக்கா […]
நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey
நியூ இங்கிலாந்து முறைப்படி வான்கோழி சமையல் New England Thanks giving Turkey வரலாற்றுக் குறிப்பு – நன்றி நவிலல் நாள் என்பது வடஅமெரிக்காவில் அறுவடைப் பண்டிகைக் காலம். ஐரோப்பிய குடியேறிகள் வடஅமெரிக்காவில் முதல்முறை வந்திறங்கியபோது போது அத்தியாவசிய உணவுப் பொருட்கள், வேட்டையாடுதல் போன்றவற்றில் பின்தங்கியிருந்தனர். இதை விட கடும்பனிகாலச் சூழலும் அவர்கட்கு ஏற்றுக்கொள்ளவில்லை இதனால் குடியேறிகள் பனியாலும், பட்டினியாலும் மரிக்கத் தொடங்கினர். இதைப் பார்த்து பரிதாபம் கொண்ட பூர்விகவாசிகள் இவர்கட்கு வேட்டை உணவு, போர்வைகள் என […]







