\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

குறுக்கெழுத்து – பழமொழி

குறுக்கெழுத்து – பழமொழி

  இடமிருந்து வலம்  தலை சாய்க்க மடி தரும் பஞ்சு நண்பன். யார் அவன்? (4)  தண்ணீரில் பிறந்தாலும், தண்ணீரினால் மடியும். அது என்ன? (3)  இரண்டு பக்கமும் காடு ; நடுவிலே ஒரு பாதை. அது என்ன? (3)  ஊரெல்லாம் சுற்றினாலும் வீட்டுக்குள் மூலையில் முடங்கும். அது என்ன? (4)  ஊர் உண்டு மக்களில்லை; மலையுண்டு மரங்களில்லை; ஆறுண்டு நீரில்லை. வண்ணமுண்டு உயிரே இல்லை – அது என்ன? (5) 12.வாயில் கடிபடாது. கையில் பிடிபடாது. […]

Continue Reading »

வாழையிலையும் 26 வகைகளும்

வாழையிலையும் 26 வகைகளும்

“கல்யாணச் சமையல் சாதம், காய்கறிகளும் பிரமாதம் என்ற பாடல் “ஐம்பது ஆண்டுகளையும் கடந்து, இன்றும் நம்மிடையே பிரபலமாகவும் சுவை மாறாமலும் இருப்பதற்கு முக்கியக் காரணம், இந்தப் பாடலில் உணவை மையப்படுத்தி வரும் வரிகளும், காட்சிகளில் காண்பிக்கப்படும் உணவு வகைகளேயாகும். உணவிற்குத் திருவிழா எடுப்பது, பருவகாலத்திற்கு ஏற்றாற்போல்உணவை உண்பது, எதற்குப் பின் எதை உண்பது என்ற வரைமுறை வகுத்து , உணவே மருந்து என்று வாழ்ந்து, உணவைக் கொண்டாடிய சமூகம் நம் தமிழ்ச் சமூகம்,   நம்மில் பலருக்குப் […]

Continue Reading »

சிறுகதை போட்டி

Filed in போட்டிகள் by on April 27, 2015 0 Comments
சிறுகதை போட்டி

பல்லாயிரம் ஆண்டுகளாக கதைகள் சொல்லியும் கேட்டும் வளர்ந்தவர்கள் தமிழர்கள். உலகமெலாம் அதி நவீனம் ஆக்கிரமித்திருந்தாலும் அறைக்குள் அமர்ந்து கதை படிப்பது அலாதி சுகம்! கதை படிப்பது சுகமென்றால் ஓர் கதை வடிப்பது சுகமோ சுகம். நம்மில் பலரில் ஒளிந்திருக்கும் புனைவுத் திறனை புவியறிய வெளிக்கொணரும் வகையில் பனிப்பூக்கள் சஞ்சிகை சிறுகதை போட்டியினை அறிவிப்பதில் பெருமகிழ்ச்சி கொள்கிறது. பனிப்பூக்கள் நடுவர் குழு தேர்ந்தெடுக்கும் சிறந்த மூன்று கதைகளுக்குக் கீழ்க்கண்டவாறு பரிசுகள் உண்டு: முதல் பரிசு, இரண்டாம் பரிசு, மூன்றாம் […]

Continue Reading »

எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 1 Comment
எசப்பாட்டு – வளர்ச்சியோ வீழ்ச்சியோ?

நாடாரு கடையதிலே
நாலாறு பொருள்வாங்க
நான்நடந்து போனதினம்
நாபகமா வந்துருச்சு….

நாகரிகம் வளந்துதுன்னு
நாட்டுப் புறத்திலயும்
நாம்பாத்து நடக்கையிலே
நாலஞ்சு லைன்கடைங்க…

Continue Reading »

மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்

மதங்கள் கடந்து மனிதம் தொட்டக் குரல்

‘இறைவனிடம் கையேந்துங்கள்’ என்று உலகோரைத் தன் கம்பீர வெண்கலக் குரலால் சுண்டியிழுத்தவர் இறைவனடி சேர்ந்து விட்டார்! தமிழகத்தில், 1925ம் ஆண்டு டிசம்பர் திங்கள் 25ம் நாள், ராமநாதபுரம் மாவட்டம் வெளிப்பட்டிணத்தில் முஹம்மது இஸ்மாயில், மரியம் பீவி தம்பதியருக்கு மூன்றாவது மகனாகப் பிறந்தவர் நாகூர் ஹனிஃபா. இவரது இயற்பெயர் இஸ்மாயில் முஹம்மது ஹனிஃபா. தனது இயற்பெயரைச் சுருக்கி இ.எம்.ஹனிஃபா என்று வைத்துக் கொண்டார். அவரது தந்தையின் பூர்விகமான நாகூர் சேர்ந்து கொள்ள நாகூர் ஹனிஃபா என்ற பெயர் பிரபலமடையத் […]

Continue Reading »

வாடகை சைக்கிள்

Filed in இலக்கியம், கதை by on April 27, 2015 0 Comments
வாடகை சைக்கிள்

நம் சிறுவயது மகிழ்ச்சியும்,  நினைவுகளுமான  கூட்டாஞ்சோறு, நொண்டி, கில்லி-தாண்டு, பல்லாங்குழி, நண்பர்களுடன் சேர்ந்து கட்டிய மண் கோவில், அதற்கு நடத்திய திருவிழா, இதன் வரிசையில் வாடகை சைக்கிளுக்கு முக்கிய இடம் உண்டு. சமீபத்தில் இணையத்தில் உலாவிக் கொண்டிருக்கும் வேளையில், எனது பார்வையில் பட்டது வாடகை சைக்கிள், இதைப் படித்த நொடிப் பொழுதில் என் நினைவுகள் என் பால்ய பருவத்திற்குச் சென்றதை என்னால் உணர முடிந்தது. நாம் மறந்த, நம்மை விட்டு மறைந்த வாடகை சைக்கிள் பற்றிய நினைவு […]

Continue Reading »

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-13

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12) அந்நிய மனோநிலை உணர்வு புதிய உணர்வு நிலைகளும் அந்நிய மொழியின் ஆதிக்கமும் தமிழ்க் கவிதை மரபில் சில மாற்றங்களை விளைவிக்கத் தொடங்கி விட்டன. மேற்குலகிற்குப் புலம்பெயர்ந்து சென்றவர்களில் அதிகமானவர்கள் மனதளவில் பெரிதும் பாதிக்கப் பட்டனர். எம்மவர்களின் நாளாந்த வாழ்க்கை மேலைத்தேச நாட்டினர் போல் அமைந்ததல்ல. சமூகப் பொருளாதார ரீதியாகக் குடும்ப உறவுகளுடன் பின்னிப் பிணைந்த வாழ்க்கை எமக்குத் தனித்துவமானது. ஆனால் முன்பின் அறிமுகமில்லாத ஒரு நாட்டில் முற்றிலும் புதிதான ஒரு வாழ்வியற் […]

Continue Reading »

மினசோட்டா ஹிந்து மந்திர் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

மினசோட்டா ஹிந்து மந்திர் தமிழ் புத்தாண்டு கொண்டாட்டம்

மினசோட்டா வாழ் தமிழர்களுக்கு இது கொஞ்சம் பிசியான வாரயிறுதி. ஆரம்பித்து வைத்தது, ஏப்ரல் 11 ஆம் தேதி அன்று மெபில் க்ரோவ் (Maplegrove) ஹிந்து மந்திரில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தமிழ்ப் புத்தாண்டு நிகழ்ச்சிகள். ஹிந்து மதத்தில் பல கடவுள்கள் இருந்தாலும், பொதுவாக அமெரிக்காவில் அனைத்துக் கடவுள்களுக்கும் அனைத்து இடங்களிலும் கோவில்கள் இருப்பதில்லை. ஈஸ்ட் கோஸ்ட் பகுதிகளை விதிவிலக்கு எனலாம். மற்ற பகுதிகளில் வெகு சொற்பமே. அந்த வகையில், மினசோட்டா இந்தியர்கள் கொடுத்து வைத்தவர்கள் எனலாம். பெரும்பாலான கடவுள்களின் […]

Continue Reading »

இது கவியல்ல நிஜம்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
இது கவியல்ல நிஜம்

வித்தகக் கவி நானென்று விண்டுரைக்க வரவில்லை முத்திரைக் கவி நானெழுதி மூண்டெள முயலவில்லை கொத்துக் கொத்தாய் எம்மவர்கள் செத்து விழுந்தபோதும் தத்துவங்கள் பேசியிங்கே தரித்திரராய் வாழ்ந்திடுவோம்   மன்னுயிர் மண்மேல் வீழ்ந்து மடிந்திடும் நிலைதான் கண்டும் என்னுயிர் பிழைத்தல் வேண்டி ஒதுங்கிநான் நிற்கக் கண்டு முன்வாயிற் சொற்கள் சேர்ந்து முரண்டு பிடித்தெனைக்  கொல்ல என்னுடல் நிமிர்ந்து நானும் ஏற்றந்தான் காண்பதெப்போ   சாப்பாடு இன்றியங்கே தமிழ்ச்சாதி சாகக்கண்டும் காப்பீடு ஏதுமில்லாக் காரியங்கள் நாங்கள் செய்து ஏற்பாடு ஏதும் […]

Continue Reading »

பொன்னம்பலம் ராமநாதன்

பொன்னம்பலம் ராமநாதன்

இங்கிலாந்திடமிருந்து இலங்கை நாட்டின் விடுதலைக்காகப் பல தலைவர்கள் உருவாகி அரும்பணியாற்றியுள்ளனர். அவர்களில் தமிழ்த் தலைவர்கள் பலரும் இடம்பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவர் சர். பொன்னம்பலம் ராமநாதன். 1851ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதினைந்தாம் தேதி கொழும்பில் பிறந்தவர் ராமநாதன். இவரது தந்தை கேட் (ராச வாசல்) முதலியார் அருணாச்சலம் பொன்னம்பலம். தாயார் செல்லாச்சி அம்மாள். தந்தை ஆங்கில அரசாங்கத்தில் ஒரு உயர் பதவியில் இருந்ததாலும்,வியாபாரம் நடத்தி வந்ததாலும் ராமனாதனின் பால்ய நாட்கள் சுகமாகவே அமைந்தன. கொழும்பு ராயல் கல்விக்கழகத்தில் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad