\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

ஸ்வெனும் மரநீர்த் தொட்டியும்

ஸ்வெனும் மரநீர்த் தொட்டியும்

முதற்குறிப்பு:  இளைஞர்களால் தங்கள் கை கால்களைக் கட்டி வைத்துக்கொண்டு எதுவும் செய்யாமல் இருக்க  முடியுமா? முடியாது.  ஏதாவது ஒரு கும்மாளம், கோஷ்டியுடன் குதித்தல் என்று உயிராபத்துக்குப் போகக்கூடிய சாகசங்களில் இருந்து மயிரிழையில் உயிர் தப்பித்தவாறு போகுதலே ஒரு வாழ்க்கை. இதுபோன்ற உற்சாகமான பண்டைய மினசோட்டா நொர்வீஜியன் பையனொருவனின் கதைதான் இது. பனிக்காலத்திற்கு ஆயுத்தமாகுதல் ”ஓடு ஓடு சீக்கிரம் வா, பொழுது நேரத்தை வீணாக்கக்கூடாது, ஏயிங்கர், கரேன் இந்த வாளிகளை உடன் ஓலினாவிடம் கொண்டுபோய்க் கொடுங்கள். ம்…… ஸ்வென் […]

Continue Reading »

கோமகன்

Filed in இலக்கியம், கதை by on April 27, 2015 0 Comments
கோமகன்

சிவகங்கை மாவட்டம் சின்னாளப்பட்டி கிராமத்துப் பெரிய கோவில் பரபரத்துக் கொண்டிருந்தது. பூசாரி சுப்ரமணிய ஐயரும் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனும், சிவனுக்கும் அம்மைக்கும் அலங்காரம் செய்துக்கொண்டிருந்தனர். சுப்ரமணிய ஐயர் செய்கின்ற சந்தனகாப்பு அலங்காரம் சுத்துப்பட்டுப் பதினெட்டு கிராமத்திலும் பிரபலம். பதினெட்டு கிராமத்திலும் எல்லா  கிராமத் திருவிழாக்களிலும் சுப்பிரமணிய ஐயரின் சுவாமி அலங்காரமே பேசும் பொருளாக இருக்கும். கடந்த இரண்டு வருடமாகத்தான் அவரின் வளர்ப்பு மகன் மணிகண்டனைக் கோவிலில் சுவாமி கைங்கரியங்களுக்கு அனுமதித்திருக்கின்றார். “மணி இத கவனமா பார்த்துச் […]

Continue Reading »

ஜெயகாந்தன்

ஜெயகாந்தன்

இரு வாரங்களுக்கு முன்னர், ஏப்ரல் 8 ஆம் திகதி, தமிழ் எழுத்துலகச் சூரியன் ஒன்று அஸ்தமித்தது. தமிழ் எழுத்துலகில் பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளாய் பற்பல சூரியன்கள் ஒளிர்ந்து பிரகாசமுறச் செய்தன என்பது நாமறிந்ததே. எனினும், ஒவ்வொரு சூரியனுக்கும் ஒவ்வொரு விதமான ஒளிக்கிரணங்கள்  உண்டென்று , அதன் ஒளிக்கிரணங்களினால் அனுதினமும் மலர்ச்சியுறும் தாமரை போன்ற தமிழ் நெஞ்சங்களுக்கு அத்துபடி.   தனது நிலவுலகப் பயணத்தைச் சமீபத்தில் முடித்துக் கொண்ட, ஒப்பாரும் மிக்காருமற்ற, இன்னொரு ஒளிக்கிரணம், ஜே.கே. என்று சமகாலத்தவர்களால் செல்லமாக அழைக்கப்பட்ட […]

Continue Reading »

தலையங்கம்

தலையங்கம்

வாசகப் பெருமக்களுக்கு அன்பான வணக்கங்கள் ! நம்மில் பலர் – குறிப்பாக கீழை நாடுகளில் – உழைக்கும் தோழர்களை இன்றும் பெருமளவில் சமமாக நடத்துவது இல்லையென்பதே கசப்பான உண்மை. பொதுவாக, நன்கு படித்து உலகம் “ஒய்ட் காலர்ட்” (White Collared) என்று குறிப்பிடும் மேல்தட்டு வேலைகளில் இருப்பவர்கள் உயர்வு என்றும், படிப்பறிவு தவிர்த்து உடலுழைப்பை முன்னிறுத்தி வாழ்க்கை நடத்தி “ப்ளூ காலர்ட்” (Blue Collared) என்று குறிப்பிடப்படும் தொழில்கள் புரியும் உழைப்பாளிகளைச் சற்றுத் தாழ்வு என்றும் கருதுவதே […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 9

Filed in இலக்கியம், கதை by on April 27, 2015 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 9

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 8) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த […]

Continue Reading »

நேர்மைக் காதல்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
நேர்மைக் காதல்

கன்னியிவளைக் காதலிக்கும் வேளையிலே
கண்களிரண்டிருந்தும் காட்சியிலாக் குருடனாயிருந்தேன்
கண்ணொத்த கன்னியவள் காதலினால்
கருத்தொருமித்துக் கண்களாயிருப்பாளென்ற கற்பனையால்.

அகம்புறமென அறுபதுக்குமேல் செய்யுளறிந்தும்
அறிவிலியாய் இருப்பதே அவளின்கவனமென
அமைதியாய் வாழ்ந்திருந்தேன் அந்நாளில்
அணங்கவளின் கடைப்பார்வை என்மேல்விழுமென…

Continue Reading »

அழியும் மானுடம்

Filed in இலக்கியம், கவிதை by on April 27, 2015 0 Comments
அழியும் மானுடம்

உயிரினம் அனைத்தும் ஒப்பிட்டு நோக்கின்
உயரினம் எம்மினமென ஓலமிடும் மானிடா!
தன்னினம் அழித்துத் தரித்திரம் சமைக்கும்
தனியினம் மனிதயினம் மட்டும் தானடா!
பழிக்குப் பழியெனப் பகைதனைத் தீர்த்து
பசியாறிப் புசித்திடும் முரட்டுக் கூட்டமடா!
விழிக்கு விழியென வீம்புடன் வாழ்ந்து
விடியலைத் தேடிடும் குருட்டுக் கும்பலடா!

Continue Reading »

பழமொழிகளும் மரபுத் தொடர்களும்

பழமொழிகளும் மரபுத் தொடர்களும்

மொழி என்பது ஒரு சமூகத்தின் பண்பாட்டு நெறிமுறைகளைப் பிரதிபலிக்கும் இயல்புடையது. தலைமுறை தலைமுறையாக இயற்கையுடன் பின்னிப் பிணைந்த நிலையில் அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பேசப்படும் அனுபவ மொழிகளின் தொகுப்பினை நாம் பழமொழிகள் என்று அழைக்கிறோம். அதுபோல தொன்று தொட்டு மரபு பிறழாமல் ஒரு பண்பாட்டினரின் நடைமுறை வாழ்வியலில் உள்ள சொற்களின் திரட்சியை மரபுத் தொடர்கள் என்கிறோம். சிலர் இவை இரண்டுக்குமான வேறுபாட்டை உணரத் தவறுகின்றனர். சிலரோ பழமொழிகள் மற்றும் மரபுத் தொடர்கள் என்பன வழக்கிழந்துவிட்ட மொழிகள், எனவே […]

Continue Reading »

சர்வம் தண்ணீர் ம(மா)யம்

சர்வம் தண்ணீர் ம(மா)யம்

இந்தத் தலைப்பைப் பார்த்துட்டு நான் ஏதோ பஞ்சபூத தலங்களில் நீருக்கு உரிய தலமான திருவானைக்கா ஜம்புகேசுவரர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் ஜம்பு லிங்கம் என்கின்ற அப்புலிங்க சுவாமியைப் பற்றி எழுதப்போறேன்னு நெனச்சா அது என் தவறல்ல. நான் சொல்லப்போவது ஒன்றும் புதிதல்ல. இது எங்க பாட்டன் G.T நாயுடு காலத்திலேயே கண்டுப்பிடிக்கப் பட்டதுதான். ஆனா இப்ப சமீப காலமாப் பார்த்தீங்கன்னா, ஜப்பான்ல அடுப்பில்லாமல் போண்டா சுட்டதாகவும் ,பாக்கிஸ்தான்ல பருப்பில்லாமல் சாம்பார் வச்சதாகவும் பீத்திக்கிறாங்க. அதாங்க தண்ணீர்ல தேர் (CAR) […]

Continue Reading »

தமிழனென்று சொல்லடா – கவிமணி

தமிழனென்று சொல்லடா – கவிமணி

”தமிழனென்று சொல்லடா, தலை நிமிர்ந்து நில்லடா” என்ற பாரதியின் வரிகளைப் பின்பற்றி, நம்மைத் தலை நிமிர்ந்து வாழவைத்த இன்னொரு தமிழ்ப் பெருந்தகை கவிமணி தேசிக விநாயகம் பிள்ளையாகும். பாட்டுக் கொருபுலவன் பாரதியடா! – அவன் பாட்டைப் பண்ணோடொருவன் பாடினானடா! கேட்டுக் கிறுகிறுத்துப் போனேனேயடா! – அந்தக் கிறுக்கில் உளறுமொழி பொறுப்பாயடா! சொல்லுக்குச் சொல்லழகும் ஏறுமேயடா! – கவி துள்ளும் மறியைப்போலத் துள்ளுமேயடா ! கல்லும் கனிந்துகனி யாகுமேயடா ! – பசுங் கன்றும் பால் உண்டிடாது கேட்குமேயடா! […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad