admin
admin's Latest Posts
பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்
எங்களால் மகேந்திரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட பாலு மகேந்திரா, யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர். அந்தக் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அக்காலத்தில், என்னுடன் பணி செய்த தேவு குலதுங்கவும் நானும் சேர்ந்து அறுபதுகளில் தயாரித்த ”நீயும் நானும்” என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பாலு மகேந்திரா நடித்திருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் அவர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கருகே, புகைவண்டி […]
வறுமை வசந்தமாகிறது!
தொலைந்த நாட்களுக்குக் கிடைத்தபரிசுதான்
தொங்கிப் போன தாடியும்
சுருங்கிப் போன சட்டையும்
மனம் இருந்திருந்தால்
சுயமானத்தை இழந்திருக்க மாட்டேன்
இன்னும் என் கண்ணில் உள்ளது
ஒளி
முறிந்த மொட்டுக்கள்
தெருக் கோடியில் அட்டை பிடித்து நிற்கிறார் மூத்தவர்
நரைத் தாடியில் சட்டைக் கிழிந்து நிற்கிறார் மூத்தவர்
இளம் வயதில் படை வீரனாய் ஓட்டினார் கப்பலை
இன்று வீதியில் கடும் வெய்யிலில் நிற்கிறார் மூத்தவர்
காதலர் தினம்
1996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி.. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து […]
நம்பிக்கை
உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
அமெரிக்கா
உனக்கும் எனக்கும் ஒரே மொழி
ஆங்கிலம்
உனக்கும் எனக்கும் ஒரே ஆடை
கந்தலாடை
தாத்தா – பெண்
இயற்கை அழகை எல்லாம்
அள்ளிப் பருகி – ஒளி இழந்து
இன்று அமைதியாய்
அடங்கிப் போனது விழிகள்!
சிறுமி – பெரியவர்
அண்ட ஒரு இடமில்லையோ?
அன்னமிடக் கையில்லையோ ?
ஆதரிக்க உறவில்லையோ?
ஆதரவே சிறு பலகை தானோ?
ஒரு அபலையின் அழுகுரல்
உதைபட்ட பந்தாக உருண்டோட
உறவினரால் நிலைகுலைந்து போனேன்!
எதைச் சொல்லி நான் அழுவேன் இன்று
வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்
என்னை விட்டுச் சென்றவர் வருவார் என்று
வாடிய என் முகத்தில்
கண்ணீர் கூட இல்லை அழுதுவிட
எசப்பாட்டு – காதல்
காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]
வாழ்த்து மடல் – திண்டுக்கல் தனபால்
அன்புள்ள பனிப்பூக்கள் உள்ளூர் வாசகர்களே… உங்களைப் போல நானும் பனிப்பூக்களின் தொடர் வாசகன்… கதை, கவிதை, கட்டுரை, வரலாறு, அன்றாட நிகழ்வுகள், சமையல் குறிப்புகள் எனப் பல்சுவைகளின் ரசிகன்… நான் மட்டுமல்ல… வீட்டில் குழந்தைகள், பெரியவர்கள் உட்பட அனைவருமே… ஓராண்டு நிறைவடைந்து விட்டது… உங்களின் மனது போல் எனது மனதும் நிறைவடையவில்லை… இரண்டாம் ஆண்டில் மென்மேலும் சிறக்க வேண்டும்… எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்… அறிந்தும், தெரிந்தும், புரிந்தும் பயன் இருந்தாலும், அவைகளைப் பகிர்ந்து […]







