admin
admin's Latest Posts
செங்குளம்
சூரியன் மேற்கில் ஓடி மறைந்து கொண்டிருந்தது. நேரம் ஆறு ஆறரையைத் தாண்டியிருக்கும் என மனதில் நினைத்தபடி நடந்து கொண்டிருந்தேன். பல்லாயிரம் அடி உயரத்தில் பறந்த விமானத்தின் சத்தம் என் காதைப் பிளந்தது. அண்ணாந்து வானத்தைப் பாத்தேன். சிறு பறவைகள் கூட்டமாகப் பறப்பது போலவும்… காற்றில் உதிரும் இலவம் பஞ்சுக் கூட்டம் வானவெளியில் சல்லாபம் புரிவது போலவும் ஒன்றுடன் ஒட்டி உரசியபடி வானத்தில் இருந்து கொத்துக் கொத்தாக எண்ணுக்கணக்கற்ற துண்டுப் பிரசுரங்கள் தரையை நோக்கி வந்துகொண்டிருந்தன… கடும் போருக்கு […]
விடியல்
நாள்தோறும் விடிகிறது பொழுது!
இரவு அழுக்கைப் பெருக்கிக் கொட்டிவிட்டு,
வெளிச்சம் அரங்கேறுகிறது!
ஒளியைத் தழுவிக்கொள்ள
பூமியெல்லாம் புத்துணர்ச்சி!!
மினசோட்டா ஐரோப்பியத் தொடர்புகள் – ஸ்காண்டிநேவியா SCANDINAVIA
நமது மாநிலமாகிய மினசோட்டாவில் ஆசிய நிலப்பரப்புத் தொடர்பு காலத்தில் புலம் பெயர்ந்த ஆதிவாசி மக்களிற்கு அடுத்தபடியாக கடல்மூலம் புலம் பெயர்ந்த மக்கள் பெரும்பாலும் ஸ்காண்டிநேவியர்கள் ஆகும். ஸ்காண்டிநேவியா பிரதேசம் பொதுவாக டென்மார்க் Denmark, நோர்வே Norway, சுவீடன் Sweden நாடுகளைச் சாரும். வடதுருவப்பிரதேசக் கடலைச் Arctic Sea சார்ந்த பின்லாந்து, ஐஸ்லாந்து Iceland மற்றும் லப்லாந்து Lapland எனும் வடதுருவக் கலைமான் reindeer வர்க்கங்களை மந்தையாகப் பார்க்கும் நாடோடி மக்கள் பிரதேசமும் ஸ்காண்டிநேவியாவில் அடங்கும் . லப்லாந்து […]
மினசோட்டா விண்வெளி வீராங்கனை
மினசோட்டா விண்வெளி வீராங்கனை (Astronaut) முனைவர் கேரன் நைபெர்க் (Karen NyBerg) கார்த்திகை மாதம் நமது மாகாணத்தில் கோலாகலமாக பல்வேறு பண்டிகைகள் ஆரம்பிக்கும் தருணமாகும். இதேசமயம் நமது மாகாணத்தின் விண்வெளி வீராங்கனை கேரன் நைபெர்க் 166 நாட்களுக்கு மேல் சர்வதேச விண்கலத்தில் வலம் வந்து வீடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் பல மாகாணங்களிலிருந்தும் பலர் விண்வெளி போய்வரினும் சர்வதேச ரீதியில் விண்வெளி சென்ற 50 வது பெண்மணி என்ற பெருமை இவரைச் சாரும். மினசோட்டா மாகாணத்திலிருந்து சென்ற அண்மைக்கால […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 8
அத்தியாயம் 7 செல்ல இங்கே சொடுக்கவும் சப்பானியத்தில் புலமைப் பெற்ற நண்பர் யோகியை போன வாரம் தமிழ்ப் பள்ளியில சந்தித்த போது, சப்பானிய மற்றும் தமிழ் மொழித் தொடர்பு ஆய்வுகள் இன்று பல்வேறு தரப்பினரால் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சுமார் 1000க்கும் மேற்பட்ட தமிழ்ச் சொற்கள் சப்பானியத்தில் கண்டுப் பிடிக்கப்பட்டுள்ளதாகவும் சொன்னாங்க. நான் போன அத்தியாயத்துல நானூறு தமிழ்ச் சொற்கள் சப்பானியத்துல இருப்பதாகச் சொன்னது பழைய தரவுகள் என்றும் சொன்னாங்க. சப்பானுக்கு மிக அருகில் உள்ள ஒரு பெரிய தீபகற்பம் […]
இலையுதிர் மரம்
பருவந்தொட்ட பெண்ணைப் போல
பஞ்சஞ்தீர்ந்த மண்ணைப் போல
மகிழ்ந்து துளிர்த்திருந்த மரமே
மங்கையும் நீயும் ஓரினமோ?
நன்றி தெரிவிக்கும் திருநாள்
பொதுவாக மேற்கத்தியவர்களைப் பற்றிய கிழக்கத்திய மக்களின் கருத்து அவ்வளவாக உணர்வுகளுக்கும், உறவுகளுக்கும் மதிப்பளிக்காதவர்கள் என்பதே. தொலைவிலிருந்து பார்த்து இவர்களின் விவாகரத்து விகிதங்களையும், ஹாலிவுட்டில் காட்டப்படும் முகத்தில் சற்றும் சலனமில்லாமல் பஞ்ச மா பாதகங்கள் புரியும் சாதாரண மனிதர்களையும் மட்டுமே பார்க்கும் கீழை நாட்டினருக்கு அது போன்ற ஒரு அபிப்ராயம் தோன்றுவதில் வியப்பெதுவும் இல்லை. அருகிலிருந்து பார்த்து, இவர்கள் குடும்ப வாழ்க்கைக்கும், குழந்தைகளுக்கும், உறவுகளுக்கும் கொடுக்கும் மரியாதையையும், பல உயர்வான எண்ணங்களுக்கு (values) கொடுக்கும் முக்கியத்துவத்தையும் நேரில் பார்க்கையில், […]
செட்டிநாட்டு சம்பாஷணை
”அக்கா சொகமா இருக்கீயளா”….. வெள்ளை மனத்துக்குச் சொந்தகார செகப்பி, நடந்து வரும் வழியில் எதிரில் வரும் தெவ்வானை அக்காவைச் சந்தித்துக் குசலம் விசாரிக்கிறாள். “வாடி என்னயப் பெத்த ஆத்தா, நா நல்லாருக்கேனப்பு.. நீ எப்படி இருக்க? ஏது இந்தப்பக்கம் அதிசயமா காத்தடிக்குது?” அதே கரிசனத்துடன் பதிலளித்துக் கேள்வி கேட்கிறாள் தெய்வானை. “ஒண்ணுமில்லயக்கா, நம்ம பெரியாஸ்பத்திரி வரக்கும் ஒரு எட்டு போயாரலாமுன்னு”….. “அடியாத்தி, என்னாச்சுடி, உடம்புக்கு எதுவுஞ் சொகமில்லையா?” “எனக்கெதுமில்லயக்கா, நல்லாக் குத்துக் கல்லாட்டமாத்தேன் இருக்கேன். நம்ம கெளவிக்கு […]
மா விளக்கு
மாவிளக்கானது தமிழ்க்கிராமப்புற பாரம்பரியம் கார்த்திகை முருகனிற்கும், ஊர் அம்மனிற்கும், புரட்டாதியில் எள்ளெண்ணெய் எரித்தலின் போதும் செய்யப்படும். தேவையானவை பச்சை அல்லது தீட்டாத புதிய அரிசி பனங்கட்டி நல்லெண்ணெய் செய்யும் முறை – அரிசியை ஊறவைத்துப் பின்னர் சற்று உலர்த்தி அரைக்கவும், அரைத்த அரிசியுடன் பனங்கட்டித் துருவல்கள் சேர்த்துப் பசையாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் உள்ளங்கை வெப்பத்தில் கோழைகளாக உருட்டி, நடுவில் பெருவிரலால் அழுத்தி எண்ணெய் விடக்கூடிய அளவு ஒரு பள்ளத்தை உண்டாக்கவும். பள்ளத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் திரிவைத்து […]







