admin
admin's Latest Posts
உலகச் செம்மொழி – அத்தியாயம் 5
ஆஸ்திரேலியா என்ற நாட்டின் பெயருக்கான தமிழ் மூலத்தை போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆங்கில மூலச்சொல்லகராதியில் ஆஸ்திரேலியா என்ற சொல் லத்தினிய மொழியில் இருந்து வந்ததாக இருக்கின்றது.
தமிழ்ப் பயிற்சிப் பட்டறை
வட அமெரிக்காவில் எண்ணற்ற சங்கங்களைப் பார்த்திருப்பீர்கள், பல தமிழ்ச் சங்கங்களாவும் இருக்கக் கூடும். பெரும்பாலான சங்கங்கள், ஜனரஞ்சகம் என்ற போர்வையில் திரைப்படம் சார்ந்த ஆட்டத்துக்கும், பாட்டுக்கும் மட்டுமே முதன்மையளித்து செயலாற்றுவதையும் கண்டிருப்பீர்கள். கேளிக்கை நடவடிக்கைகளிலும் நல்ல கருத்துக்களையும், கலைகளையும் கற்றுத் தரும் நோக்கமுள்ள அமைப்புகள் கிடைப்பது அரிதாக உள்ள இக்காலத்தில், மினசோட்டா தமிழ்ச் சங்கத்தின் அமைப்பான மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளி செய்து வரும் சேவையைப் பொதுமக்களிடம் கொண்டு செல்வதில் பெருமை கொள்கிறோம். கடந்த ஜுன் மாதம் 22 […]
வ(ச)ந்த காலம் மாற்றம்
நேற்றைய மாலைப் பொழுதில்
என் வீட்டு முற்றத்தில் இரு சிறு குருவி
துளிர்விட்ட பசும்புல்லில் தீனி பொறுக்கி
குதூகலித்துக் கலவிகொண்டு மகிழ்ந்திருந்தன. .
வசந்தகாலத்தின் வரவுக்கண்டு
மரங்கள் குருத்தெறிந்து
மொட்டுவிட்டுக் கருத்தரிக்க
கொட்டும் மழையில்
தலை கழுவிச் சீவி முடித்துச் சிங்காரித்து
அம்மணமாக நின்றன.
அன்னையர் தினக் கவிதை
கற்பனையாய் நிலநிறை கடவுளர் பலரிருக்க
கனிந்துருகி நிதந்தோறும் கரங்கூப்பி நான்வணங்க
கண்விழித்து நான்கண்ட முதற் கடவுள்
கலையாமல் நிலைகொண்டாள் முழுதாய் என்னுள்!
கட்டிலாகக் கல்லறையும் உணவாக எலிக்கறியும்
வந்தோரை வாழவைத்தாய், பழையதையும் பகிர்ந்துண்டாய்
வான்முட்ட சின்னங்கள் வனப்பாக நீயே செய்தாய்
விண்மீன்கள் தோற்கடித்துக் காவியங்கள் பல படைத்தாய்
வீரத்தின் விளைநிலமே, பலபோரை கண்டுவிட்டாய்
உன் படைப்பில் நீ மெச்சும் ஒன்றேதென்றால்
ஊனுருக்கி நீ செய்த உன் குழந்தைதானே என்பாய்
யாக்கை நிலையாமை
பகலவன் எழுந்தாட
பனித்துளி பறந்தது
புள்ளினம் இசைபாட
புதுதினம் உதித்தது
கடிகாரம் வசைபாட
கனவு கலைந்தது
கலாம்
அறிஞரை மதிக்கலாம்; அன்னையைத் துதிக்கலாம்! அறிவியல் பெருக்கலாம்; அழகுகள் சமைக்கலாம்! அறநெறி உரைக்கலாம்; அல்லவை தவிர்க்கலாம்! அறிவாட்சி சிறக்கலாம்; அசதியைத் துறக்கலாம்! அறிவை வளர்க்கலாம்; அழிவைத் தடுக்கலாம்! அன்பைப் போதிக்கலாம்; அநீதியை எதிர்க்கலாம்! அணுவைப் படிக்கலாம்; அகிம்சை பழக்கலாம்! அக்னியை ஏற்கலாம்; அவனியை அணைக்கலாம்! கற்பதை நினைக்கலாம்; கசப்பதைத் தொலைக்கலாம்! கருணையில் திளைக்கலாம்; கர்வத்தை மறக்கலாம் களைப்பினைத் துடைக்கலாம்; களிப்புடன் சிரிக்கலாம்! கண்ணியம் வரிக்கலாம்; கடுந்தவம் தரிக்கலாம்! கழனியில் உழைக்கலாம் ; கணினியில் கதைக்கலாம்! கன்னித்தமிழ் கற்கலாம் […]
மாதத்தின் மாமனிதர் – மேதகு ஜவகர்லால் நேரு
மே மாதத்தின் மாமனிதராக யாரை நினைவு படுத்தலாம் என்று ஆராய்ந்த பொழுது தமிழினத்தையும் தமிழ்மொழியின் தொன்மையையும் சிறப்பாக எழுதி இருக்கும் அவரை நினைவு கூர்தல் சிறப்பாக இருக்கும் எனத் தோன்றியது. இந்தியக் குடியரசின் முதல் பிரதம மந்திரி, அவர் சார்ந்த கட்சிக்கு கொள்கை இல்லை என்றாலும் நேர்மையான பொதுவுடைமைக் கொள்கையையும் நியாயமான கூட்டாட்சி கோட்பாட்டையும் முன்மொழிந்தார், பின்னர் வந்த ஆட்சியாளர்கள் அதைக் குழிதோண்டிப் புதைத்தது வேறு விடயம். 542 பிரதானச் சிற்றரசுகளையும் பகுதிகளையும் உள்ளடக்கி தங்களின் மொழி, […]
வாங்க…. ஃப்ரீயா பேசலாம் …
நான் பேசப்போற டாபிக்கை வெச்சு எனுக்கு ரொம்ப வயசாயிட்ச்சினு நெனுச்சுக்காதீங்கோ … யங் ஏஜூ தான் எனுக்கு.. இர்ந்தாலும் அப்பப்போ எதுனா ஃபீல் ஆவும் … போன வாரம் இப்டித்தான் ஃபீலாயிட்டேன்.. என் டாட்டரு, அதாம்ப்பா பொட்ட புள்ள, ரிபோர்ட் கார்டை எடுத்தாந்து நீட்டுச்சி … நம்பள மாரி இல்லாம ஏதோ நல்லா படிக்கும்னு வெச்சிக்கோ .. சரி நல்ல மார்க் வாங்கியாந்துக்கிறாளே எதுனா கிஃப்ட் குடுப்போம்னு ‘உனுக்கு என்னா ஓனும் கண்ணு?’ன்னு கேட்டேம்பா. டக்குனு ‘செல்ஃபோனு’ […]







