admin
admin's Latest Posts
யாழ்ப்பாண ஒடியல் கூழ் (மச்சக்கூழ்)
யாழ்ப்பாணத்துத் தமிழற்கும் தமிழக ஊர்ப்புறத்தாருக்கும் ஆடிமாதமெனில் கொதிக்கும் வெய்யிலில் இதமான கூழ் வடித்துக் குடிப்பது வழமை. இது மேலும் பனங்கட்டியும், தேங்காய்ச் சொட்டுடன் சேர்த்துச் சுவைப்பதும் பண்டைய கால மரபு. தேவையானவை ½ lbs மீன் ½ lbs கணவாய் ½ lbs இறால் ½ lbs சிறிய சிங்க இறால்/crawfish ¼ lbs பயிற்றங்காய் ¼ lbs மரவள்ளிக்கிழங்கு ¼ lbs பலாக்கொட்டை ¼ lbs முழக்கீரை/spinach 3 மேசைக்கரண்டி அரிசி ¼ கோப்பை/cup உலர்ந்த […]
கவிஞர் அறிவுமதி
சரிகை வேட்டியில்லை, பட்டுத் துண்டுமில்லை, தங்க ஃப்ரேம் போட்ட கண்ணாடியில்லை, மொகலாய மன்னர்கள் அணியும் காலணியி்ல்லை, மொத்தத்தில் திரைப்படப் பாடலாசிரியர்/கவிஞர் என்றவுடன் நாம் வழக்கமாகக் கற்பனை செய்து கொள்ளும் உருவம் எதுவுமில்லை, ஆனால் தரமான பாடல்கள் பல எழுதி, தமிழ்த் திரையுலகில் கிட்டத்தட்ட முப்பது வருடங்களுக்கு மேலாகத் தனது பங்களிப்பைப் பல வகையிலும் தந்தவர். பாரதிராஜா தொடங்கி, இளையராஜா வரை பல ஜாம்பவான்களுடனும் பணி செய்து, அந்த இணைப்புகளைத் தனது வாழ்க்கையின் உயர்வுக்கு உபயோகப்படுத்த வேண்டுமென்ற எண்ணம் […]
எசப்பாட்டு
எசப்பாட்டு என்பது ஒரு கருத்தினை விவாதிப்பது போல இரு தரப்பினர் பாடும் பாடல் வடிவம். மிகப் பழமையான பாடல் முறைகளில் இதுவும் ஒன்று. கிராமப்புறங்களில் வயல் வேலைகளில் ஈடுபடுவோரும், கடுமையான வேலை செய்பவர்களும் உடல் அசதி தெரியாமல் இருக்க இவ்வகை பாடல்களைப் பாடுவார்கள். ஒருவர் பாடலின் ஒரு பகுதியைப் பாடியதும், அதற்குப் பதிலளிப்பது போல ஏளனம் செய்தோ, பதில் கொடுக்கும் வகையிலோ மற்றவர்கள் பாடுவார்கள். லாவணி பாடல் என்பதும் எசப்பாட்டின் ஒரு வகை. திரைப்பாடல்களிலும் இது கையாளப்பட்டிருக்கிறது. […]
காந்தர்வக் குரலோன்
இசையுதிர் காலம் கட்டுரையை எழுதி முடித்து, திருத்திய பின் மேலும் ஒரு இசை நாதம் ஓய்ந்து போனது. தெள்ளத்தெளிவான உச்சரிப்பும், பொருத்தமான பாவமும், உணர்ச்சியையும் ஒரு சேர இணைத்துப் பாடி வந்த திரையிசைச் சிம்மம் – எழிலிசை வேந்தன் டி.எம். செளந்தரராஜன் மறைந்தார், தொகுளுவா மீனாட்சி ஐயங்கார் சௌந்தரராஜன் – சுருக்கமாக, டி.எம்.எஸ் – 1922ம் ஆண்டு, மார்ச் 24ம் தேதி மதுரையில் பிறந்தவர். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் டி.எம்.எஸ். தனது ஏழாவது வயதிலிருந்து இசை […]
காதல்
சிந்தும் மழைத்துளி போலே சந்தம் பொழியுது உள்ளே எதிலும் அழகைக் கண்டேன் மண்மேலே காணும் கனவுகள் மெல்ல வானம் தழுவுது இங்கே நெஞ்சம் நிறைகிறதின்பம் தன்னாலே பூக்கள் பொழிந்திடும் என்னுயிர் வாசம் வீசும் மரங்களும் செம்மொழி பேசும் கொஞ்சும் பறவைகள் கண்ஜாடை பேசும் மலைதனில் நதி வந்து ஜதிகளைப் போட, கரைதனில் நுரைவந்து அலைகளைத் தேட துளிர்விடும் நினைவுகள் தொடுவானம் சேரும் சரணம் 1 விண்ணோடு மேகம் வந்தாடும் நேரம் மண்ணோடு வாசம் என்மீது வீசும் கண்ணோடு […]
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம்
வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் – வானுரையும் தெய்வத்துள் வைக்கப் படும். – பொய்யாமொழிப் புலவன் இந்தக் குறளுக்கு, இன்றைக்கு வாழும் மனிதர்களில் எவரேனும் ஒருவரை உதாரணமாகச் சொல்லலாம் என்றால் இந்தியத் திருநாட்டின் முன்னாள் அதிபர் டாக்டர். அப்துல் கலாம் அவர்களைவிட பொருத்தமான இன்னொருவர் இருக்க இயலுமோ? கனிவான உருவம், களையான முகம், கூர்மையான கண்கள், குழந்தைச் சிரிப்பு, நெற்றியில் புரளும் கவனமாக வளைத்து விட்ட வெளிர் முடி, எளிமையும் சிறப்பையும் ஒருங்கே காட்டும் அழகான உடை, 82 […]
வித்தியாசம் என்ன?
சற்றுப் பொறுங்கள்… நினைவிருக்கிறதா? ஏப்ரல் மாதத்தில் மேப்பிள் குரோவ் நகர் இந்து தேவாலயத்தில் நடந்த தமிழ்ப் புத்தாண்டு தினக் கொண்டாட்டத்தில் முகாமிட்டிருந்த பனிப்பூக்கள் குழுவினர் அங்கே திரளாக வந்திருந்த குழந்தைகளுக்கு வண்ணம் தீட்டும் போட்டி நடத்தினர் என்பது நினைவிருக்கிறதா? அந்தப் போட்டிகளின் வெற்றி பெற்ற படங்களும் மற்றும் கலந்து கொண்ட அத்தனை படைப்புகளும் இதோ: இவ்விடம் வித்தியாசத்தைப் பாருங்கள்
அகர வரிசையில் அழகிய மினசோட்டா
அகரவரிசையில்அழகிய மினசோட்டா ஈ – ஈலீ Ely MN, மினசோட்டாவின் வடமேற்கில் மாகாணத்தின் பெரிய செயின்லூவிஸ் மாவட்டத்தில்அமைந்துள்ளது – இவ்விடம் BWCA எனப்படும் கைத்தோணி (Canoe) ஏரிக்கரைக்கு அருகாமையிலும் 3 மில்லியன் ஏக்கர் சுப்பீரியர் காட்டையும் எல்லையாகக் கொண்டது. இவ்விடம் பிரதான உல்லாசப்பயணிகள் பார்வைக்கு தேசத்தின் பிரதான ஓநாய்ப் பாதுகாப்பு, பராமரிப்பு ஆராய்ச்சிக் கூடம் மேலும் காட்டில் மான், மரை, மற்றும் கறுப்புக் கரடி, கழுகு, மற்றும் நீர்ப்பறவைகளையும் காணக்கூடியவைகளாக உள்ளன. இயற்கையாக ஒன்றுடன் ஒன்று என […]







