\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

தெய்வமும் மனிதனாகலாம்

தெய்வமும் மனிதனாகலாம்

சோளகக் காற்று தொடங்கிவிட்டதால் இன்று வெப்பம் கொஞ்சம் குறைவாகவே இருந்தது.இயக்கச்சி சோதனைச்சாவடியில் இராணுவப் பரிசோதனைகளை முடித்துக்கொண்டு கைப்பையைத் தோளிலே கொழுவிக்கொண்டு நடக்கத் தொடங்கினேன்.போர் நடந்த ஆனையிறவு முகாம் சூழல் பார்ப்பதற்கு பயங்கரமாகவும், பரிதாபமாகவும் இருந்தது.உடைந்த கட்டடங்களும், எரிந்த வாகனங்களும் யுத்தத்தின் சாட்சியாய் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. இராணுவம், விடுதலைப் புலிகளென ஆயிரக்கணக்கான உயிர்களைப் பலியிட்ட இடம் என்று எண்ணும்போது காலுக்குக் கீழே இரத்தம் பிசுபிசுப்பது போன்ற உணர்வில் உடல் கூசத் தொடங்கிது. மக்களோடு மக்களாய் நடந்து இராணுவத்தின் கண்ணிலிருந்து […]

Continue Reading »

மினசோட்டாவில் 74வது இந்திய சுதந்திர தின விழா

மினசோட்டாவில் 74வது இந்திய சுதந்திர தின விழா

இந்தியாவின் 74வது சுதந்திரத் தினத்தை மினசோட்டாவில் உள்ள ‘இந்தியன் அசோசியேஷன்   ஆஃப் மினசோட்டா’ (IAM) அமைப்பினர், செயின்ட் பாலில் உள்ள மாநில தலைமைக் கட்டிட மைதானத்தில் கடந்த ஆகஸ்ட் 15ம் தேதி நடத்தினர். இப்பொழுது உள்ள சூழ்நிலையில் இந்த வருடம் கலை நிகழ்ச்சிகள் அனைத்தும் ஆன்லைன் மூலமாக நடத்தப்பட்டது. கொடியேற்றம் மட்டும் ஆகஸ்ட் 15ஆம் தேதி நடைபெற்றது அமெரிக்க, இந்தியக் கொடிகள் ஏற்றி வைக்கப்பட்டு இருநாட்டு தேசிய கீதங்களும் பாடப்பட்டன. இந்த விழாவின் சிறப்பு விருந்தினராக […]

Continue Reading »

மினசோட்டாவில் தமிழ்க் கல்வி

மினசோட்டாவில் தமிழ்க் கல்வி

இருமொழி முத்திரை, மினசோட்டாத் தமிழ்ப்பள்ளி பாடத்திட்டம், Pro Lingua விருது, மாணவர் உதவித்தொகை, தமிழ் பி.ஏ. என அமெரிக்காவில் தமிழ் கற்கும் மற்றும் கற்க விரும்பும் மாணாக்கர்களும் பெற்றோர்களும் அறிய வேண்டிய பல தகவல்களை, இந்த பனிப்பூக்கள் “ஃப்ரீயா பேசலாம்” பகுதியில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கத் தமிழ்ப்பள்ளியின் (http://www.mntamilschool.org/) இயக்குனரான திரு. பாலமுருகன் அவர்களும், பாடத்திட்ட இயக்குனரான திரு. சிவானந்தம் அவர்களும் விளக்கிப் பேசியுள்ளார்கள். காணுங்கள்… பகிருங்கள்… தொகுப்பு – சரவணகுமரன்

Continue Reading »

யார் இந்த கமலா ஹாரிஸ்?

யார் இந்த கமலா ஹாரிஸ்?

2020 அமெரிக்கத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் துணை ஜனாதிபதி வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் திருமதி. கமலா ஹாரிஸ் அவர்களின் பின்புலம் குறித்தும், அவர் கடந்து வந்த பாதை குறித்தும் இந்த வலையொலிப் பகுதியில் திரு. ரவிக்குமார் அவர்கள் விவரித்துள்ளார். திருமதி. ஹாரிஸ் அவர்களின் தேர்வுக்கான காரணம் மற்றும் அவருடைய தேர்வு இந்தத் தேர்தல் களத்தில் ஏற்படுத்தியுள்ள அதிர்வுகள் போன்றவை குறித்தும் இந்த உரையாடலில் அலசப்பட்டுள்ளது. வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள்.. உரையாடியவர் – சரவணகுமரன்.

Continue Reading »

2020-இல் அந்த ஏழு நாட்கள்

Filed in கதை, வார வெளியீடு by on August 17, 2020 0 Comments
2020-இல் அந்த ஏழு நாட்கள்

ஞாயிறு  காலை:  சென்னையில் விரல்விட்டு எண்ணுமளவுக்கு பெரிய புள்ளிகளில் ஒருவர். சக்ஸஸ்ஃபுல்லாக பல தொழிற்சாலைகளை நடத்திக் கொண்டிருக்கும் முதலாளி கண்ணன் மற்றும் அவர் மனைவி இருவரும் மருத்துவமனையில் மிகுந்த கவலையுடன் ICU கதவையே பார்த்தபடி நின்று கொண்டிருந்தனர். காரணம், அவர்களின் மகள் சந்தியா நேற்றுக் காலைதான் இங்கு அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவள் கொரோனா என்ற கொடிய நோயினால் பாதிக்கபட்டு, மூச்சுவிடக் கூடக் கஷ்டப்பட்டுக் கொண்டு இருந்தாள். அவளுக்குச் சிறு வயதிலிருந்து ஆஸ்த்மா இருந்தது. இருபத்தி ஏழு  வயது ஆகியும் […]

Continue Reading »

கமலா ஹாரிஸ்

கமலா ஹாரிஸ்

பொதுவாகவே அமெரிக்க அரசியலையும், அரசியல் சார்ந்த நிகழ்வுகளையும் பல உலக நாடுகள் கவனித்து வருவதுண்டு.  அமெரிக்க அதிபர் தேர்தல் சமயங்களில் இது மேலும் பரபரப்படையும். இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்தல், உலக அரங்கில், குறிப்பாக ஆசிய, இன்னும் குறிப்பிட்டுச் சொல்லவேண்டுமெனில் இந்தியர்களின் கவனத்தைப் பெரிதும் ஈர்த்துள்ளது. இதற்கு முக்கிய காரணம், இத்தேர்தலில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயகக் கட்சி சார்பில் அக்கட்சி முன்னிறுத்தியிருக்கும் வேட்பாளரான கமலா ஹாரிஸ். இக்கட்சியின் அதிபர் வேட்பாளரான ஜோசப் பைடனை காட்டிலும் கமலா ஹாரிஸின் […]

Continue Reading »

ஓர் அன்பு வேண்டுகோள்

ஓர் அன்பு வேண்டுகோள்

2020 ஆண்டு ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையில் பிரச்சினை அளிக்கும் ஆண்டாக இருக்கையில், மினசோட்டாவில் வசித்துவரும் விஜயின் குடும்பத்திற்குப் பேரிடி கொடுத்த ஆண்டாக அமைந்துவிட்டது. சென்னையைச் சேர்ந்த 35 வயதான விஜய் சில ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்காவிற்குப் பலரையும் போல கணினி வேலை நிமித்தம், அவருடைய குடும்பத்துடன் வந்தார். அவருடன் அவருடைய மனைவியும், ஐந்து வயதான மகனும் மினியாபொலிஸ் நகரத்தில் வசித்து வருகின்றனர். நான்கு மாதங்களுக்கு முன்பு, அவருக்கு உணவுக் குழாயில் கேன்சர் நோய் இருப்பது கண்டறியப்பட்டு, யூனிவர்சிட்டி ஆஃப் […]

Continue Reading »

மின்னூல் – அ முதல் ஃ வரை – என். சொக்கன்

மின்னூல் – அ முதல் ஃ வரை – என். சொக்கன்

மின்னூல்கள் (Ebooks) பற்றியும், அவற்றை கிண்டில் போன்ற தளங்களில் பதிப்பிப்பது பற்றியும் இந்த உரையாடலில் எழுத்தாளர் திரு. என். சொக்கன் (www.nchokkan.com) அவர்கள் விளக்கமாகப் பேசியிருக்கிறார். காணுங்கள்… பகிருங்கள்… இந்தக் காணொளி உரையாடல் குறித்த உங்கள் கருத்துகளையும் கேள்விகளையும் எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உரையாடியவர் – சரவணகுமரன்

Continue Reading »

இந்தியச் சுதந்திரம் – சில வாதங்களும் விளக்கங்களும்

இந்தியச் சுதந்திரம் – சில வாதங்களும் விளக்கங்களும்

பனிப்பூக்கள் வாசகர்கள் அனைவருக்கும்  பனிப்பூக்களின் இந்தியச் சுதந்திர நாள் வாழ்த்துக்கள். இன்றைய தினத்தில் இந்தியச் சுதந்திரம் குறித்து பொதுத்தளத்தில் வைக்கப்படும் சில வாதங்கள் குறித்து இந்த வலையொலி பகுதியில் திரு. மதுசூதனன் அவர்கள் தனது பார்வையை முன்வைத்துள்ளார். வாசகர்கள் தங்களது கருத்தினை பின்னூட்டப் பகுதியில் வெளிப்படுத்தலாம்.   தொகுப்பு – சரவணகுமரன்.

Continue Reading »

கனடாவில் சுருதி பாலமுரளி இசை

Filed in நிகழ்வுகள் by on August 15, 2020 0 Comments
கனடாவில் சுருதி பாலமுரளி இசை

Sruthi Balamurali will be doing an online live performance on Sunday, August 16th from 11am to 12.30pm EST in support of the establishment of a Chair in Tamil Studies at the University of Toronto. This is a very historical and noble initiative for Tamils around the world and requires everyone’s involvement and support. It would […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad