admin
admin's Latest Posts
SPB நினைவலைகள்
‘பாடும் நிலா’ திரு. எஸ்.பி. பாலசுப்பிரமணியம் அவர்கள் குறித்த நினைவலைகளை நம்மிடம் பகிர்ந்துக்கொள்கிறார், மினசோட்டாவைச் சேர்ந்த இசை ஆர்வலர் திரு. செந்தில்குமார்.
ரம்மியமான ராகங்கள் – சண்முகப்பிரியா
கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் குறித்து மினசோட்டாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் திருமதி. லக்ஷ்மி அவர்கள் இந்த “ரம்மியமான ராகங்கள்” நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துகிறார். நிகழ்ச்சியின் இரண்டாம் பகுதியான இதில் சண்முகப்பிரியா ராகம் பற்றியும், அந்த ராகத்தில் உருவான திரைப்படப்பாடல்களைப் பற்றியும் கேட்கலாம். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள். இந்த நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டப் பகுதியில் பகிருங்கள். தொகுப்பு – சரவணகுமரன்
தொழிலாளர் தினம்
“உங்களது பணிநேரம் உங்கள் வாழ்க்கையின் பெரும்பகுதியை நிரப்புகிறது. வாழ்வில் மகிழ்ச்சியுறும் ஒரே வழி சிறந்த வேலை என்று நீங்கள் நம்புவதைச் செய்வதே ஆகும். அதை வெற்றிகரமாகச் செய்திடும் ஒரே வழி நீங்கள் செய்யும் பணியை நேசிப்பதே ஆகும்.” – ஸ்டீவ் ஜாப்ஸ் உலகின் பெரும்பான்மை நாடுகள் மே மாதம் முதல் தேதியைத் தொழிலாளர் தினமாகக் கொண்டாடி வந்தாலும், அத்தினம் உருவாக முக்கியக் காரணமாகயிருந்த அமெரிக்கா, செப்டம்பர் மாத முதல் திங்கட்கிழமையைத் தொழிலாளர் தினமாக மேற்கொண்டது. 1830 […]
ரத ஆலயம் (Gundicha Mandir)
வட அமெரிக்காவில் மினசோட்டா மாநிலத்தில் மேப்பிள் குரோவில் உள்ள இந்துக் கோவிலில் தேர் நிறுத்துவதற்கு என்று தனியிடம் அமைத்து அதற்குண்டான கோபுர வழிபாடுகள் சென்ற மாதம் ஆகஸ்ட் 22ஆம் தேதி, விநாயகர் சதுர்த்தியன்று விழாவாக நடைபெற்றது. விநாயகருக்கு சிறப்பு பூஜை செய்த பின்பு சிறுவர்களின் கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்றன. கோவில் நிர்வாகம் ஒருங்கிணைத்த இந்த விழாவில், டாக்டர் டேஷ், தலைமையில் கலசத்திற்குச் சிறப்பு பூஜை நடைபெற்றது. வழிபாடுகள் முடிவடைந்து டாக்டர் டேஷ் அவர்களுக்கு பரிவட்டம் கட்டப்பட்டது. கோபுரக் […]
காமன் டிபி கலாச்சாரம்
கடந்த சில ஆண்டுகளாகக் காமன்டிபி (Common DP) கலாச்சாரம் என்று ஒன்று தொடங்கி வெகு விமரிசையாக நடந்து வருகிறது. டிவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகத் தளங்களில் இருக்கும் பயனர் புகைப்படத்தை (Display Picture) சுருக்கமாக டிபி (DP) என்கிறார்கள். ஏதேனும் ஒரே நிகழ்வை ஒட்டி, பெரும்பாலோர் அந்த நிகழ்வு சம்பந்தமான ஒரு புகைப்படத்தைத் தங்களது பயனர் படமாக வைத்துக்கொள்ளும்போது, அது நல்லதொரு கவனத்தைப் பெறும் என்பதால், அதற்கான புகைப்படத்தை நன்றாக வடிவமைத்து அனைவரிடமும் பகிர்ந்து, […]
வெற்றிவேல் வயிற்றை விளங்கவே காக்க!
சேலத்திலிருந்து வந்த தனியார் பேருந்து பழனி பேருந்து நிலையத்தை வந்தடைந்தது. பேருந்திலிருந்து எல்லோரும் இறங்கிய பிறகு, இராஜமாணிக்கமும் கதிர்வேலனும் இறங்கினர். இருவர் தோள்களிலும் முதுகு பை மற்றும் கைகளில் ஒரு பயணப்பை. இருவருக்கும் ஐம்பது வயதிற்கு மேலிருக்கும். “என்னடா கதிர், நம்ப சேலம் பஸ் ஸ்டாண்ட் பரவாயில்ல போல! ஓரே குப்பையா இருக்கு பழனி பஸ் ஸ்டாண்டு!” “இறங்கி இன்னும் இரண்டு அடிக்கூட எடுத்து வைக்கல! அதுக்குள்ள புலம்ப ஆரம்பிச்சுட்டாயா? ஒரு நாளைக்கு பல ஆயிரம் […]
சூடு
புகழினி கல்லூரி படிப்பை முடித்திருந்தாள். அடுத்து அவளுக்கு ஒரு நல்ல வரனைத் தேடி கல்யாணத்தை முடித்து, தனது கடமையை சீக்கிரம் முடித்து விட வேண்டும் என்று மாப்பிள்ளை பார்க்கும் படலத்தில் தீவிரமாய் இறங்கி இருந்தார் அவளது தந்தை சாமிநாதன். தினமும் தரகர்கள் தன் பையில் சில ஜாதகக் கட்டுகளைச் சுமந்து கொண்டு அவள் வீட்டிற்கு வருவதும் போவதுமாய் இருந்தனர். மறுபக்கம் மகளுக்கு வாழ்க்கை துணையாக நல்ல குணம் படைத்த ஒருவன் அமைந்து விட வேண்டுமென்ற ஆதங்கத்தில் அவள் […]
ரம்மியமான ராகங்கள் – மாயாமாளவகௌளை
கர்நாடக ராகங்களின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட திரையிசைப் பாடல்கள் குறித்து மினசோட்டாவைச் சேர்ந்த இசைக் கலைஞர் திருமதி. லக்ஷ்மி அவர்கள் இந்த “ரம்மியமான ராகங்கள்” நிகழ்ச்சியில் வரிசைப்படுத்துகிறார். நிகழ்ச்சியின் முதல் பகுதியான இதில் மாயாமாளவகௌளை ராகம் பற்றியும், அந்த ராகத்தில் உருவான திரைப்படப்பாடல்களைப் பற்றியும் கேட்கலாம். வாருங்கள்.. கேளுங்கள்.. பகிருங்கள். இந்த நிகழ்ச்சி குறித்த உங்கள் கருத்துகளை, பின்னூட்டப் பகுதியில் பகிருங்கள். தொகுப்பு – சரவணகுமரன்
எரிந்த பனைகள்
‘அண்ணே உங்களுக்கு ஃபோன்! நம்ம வேலா அண்ணன்…’ ‘என்னது? வேலா அண்ணனா? அவன் செத்து எவ்வளவு காலம்… ஏன்டா? உனக்கேதும் கிறுக்குப் பிடிச்சிருக்…?’ என்று நான் கேள்வியை முடிக்கவில்லை. அதற்குள் என்னை முந்திக்கொண்டு ‘இல்ல… வேலாண்ணன்ட மனுஷி பேசுறான்டுதான்.. சொல்ல வந்த நான்’ என்று உடனடியாக பதில் கூறிவிட்டான் அந்த மடையன். எனக்கு அவன் மீது பற்றிக்கொண்டு வந்தது. ‘இந்தாங்க பிடிங்கண்ணே!’ என்று செல்ஃபோனை என்னிடம் தந்துவிட்டு நான் மறைந்திருக்கும் பாதுகாப்பான நிலவறைப் பதுங்குகுழியை விட்டு சட்டென […]







