admin
admin's Latest Posts
பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல் 2019
பல்வேறு ஆசியக் கலைக்குழுக்கள், கலைஞர்கள் கலந்துகொண்ட பான் ஏசியன் ஆர்ட்ஸ் ஃபெஸ்டிவல், ப்ளுமிங்டனில் இருக்கும் மால் ஆஃப் அமெரிக்கா பேரங்காடியில் மே 4ஆம் தேதியன்று நடைபெற்றது. காலை பதினொரு மணியிலிருந்து இரவு எட்டு மணி வரை இந்த நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்திய, சீன, ஜப்பானிய இசைக்குழுக்களும், நடனக்குழுக்களும் இதில் பெருந்திரளாகக் கலந்துகொண்டனர். பரத நாட்டியம், காவடி, கரகம் போன்றவற்றுடன், தமிழ் திரைப்பாடல்களுக்கும் தமிழ்க்குழுக்கள் நடனமாடின. நிகழ்ச்சிக்காக வந்திருந்த பார்வையாளர்களுடன், பேரங்காடிக்கு வந்தவர்களும் பார்வையாளர்களாக மாறி நிகழ்ச்சியைக் கண்டுக்களித்தனர். […]
மாடர்ன் மதர் !
மங்கிய விளக்கொளி…. சிறியதான மேடை… அந்த மேடையின்மேல் இரண்டு மூன்று சிறிய இரும்புக் கம்பங்கள் பொருத்தப் பட்டிருந்தன. மேடையைச் சுற்றி நிறைய நாற்காலிகள் போடப் பட்டிருந்தன. அவற்றில் சில ஆண்கள் அமர்ந்திருந்தனர். மேடையிலிருந்து சில அடிகளில் தொடங்கி, அந்த அரங்கம் முழுவதும் பல டேபிள்களும், சேர்களும் அமைக்கப்பட்டு அவற்றில் பெரும்பாலானவற்றில் மனிதர்கள் அமர்ந்திருந்தனர். தொண்ணுத்தி ஒன்பது சதவிகிதம் ஆண்களும், ஒன்றிரண்டு பெண்களும் அமர்ந்திருந்தனர். பல வெய்ட்டர்களும், சர்வர்களும் சுற்றிச் சுற்றி வந்து அனைவரையும் ‘கவனித்துக்’ கொண்டிருக்க, சாராயக் […]
துணுக்குத் தொகுப்பு – வெள்ளை யானை பூமி
பொதுவாக ‘வெள்ளையானை’ என்ற சொல்லுக்கு, இன்றைய வழக்கில், நம்மிடம் இருக்கும் அதிக பயனில்லாத, அதன் மதிப்பை விட, அதனைப் பாதுகாக்க அதிகப் பிரயத்தனப்படவேண்டிய ஒரு பொருளைக் குறிக்க சொல்லப்படுகிறது. சில நாடுகளில் பண்டிகைக்கால ஒன்றுகூடல்களில் வேடிக்கையாக நடைபெறும் பரிசு பொருள் பரிமாற்றங்களை ‘வெள்ளையானை பரிசு’ (White Elephant Gift exchange) என்கிறார்கள். பெறுபவருக்குப் பயனளிக்காது என்று தெரிந்தாலும், வந்திருப்போர் அனைவரும் கேலிபேசி மகிழ்வுறும் வகையில் இந்தப் பரிசு பரிமாற்ற நிகழ்வுகள் நடைபெறுவதுண்டு. பரிசாகப் பெற்றதினால் தூக்கிப்போட மனம் […]
சொற்சதுக்கம் 9 – விடைகள்
1. கரம் 2. ரதம் 3. மந்தி 4. தந்தி 5. சந்தி 6. சுடர் 7. கதிர் 8. சதிர் 9. வரம் 10. கதர் 11. சுவர் 12. சமர் 13 தனம் 14. வனம் 15. தவம் 16. தங்கம் 17. சுங்கம் 18. சங்கம் 19. வங்கம் 20. கடகம் 21. திட்டம் 22. வட்டம் 23. கட்டம் 24. வதந்தி 25. வசனம் 26. தகனம் 27. வதனம் 28. […]
சொற்சதுக்கம் 9
கீழே கட்டத்துக்குள் இருக்கும் பதினாறு எழுத்துக்களைக் கொண்டு, குறிப்புகள் சுட்டிக்காட்டும் சொற்களைக் கண்டுபிடியுங்கள். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். ஐம்பது சொற்களையும் கண்டுபிடித்தால் எங்களுக்குத் தெரியப்படுத்துங்கள்! தி வ த் ம த ர் ச ந் ம் ர ட ங் ட் சு ன க தமிழகத் தேர்தலில் வேட்பாளர்கள் இரு _____ _____ _____ கூப்பி வாக்கு சேகரிப்பார்கள் அரச குடும்பத்தினர் […]
தீவிரவாதத்துக்கு தீர்வு?
உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தபின், ஓரளவுக்கு அமைதி நிலவிய இலங்கையில் ஏப்ரல் மாதம் 21ஆம் நாள், ஈஸ்டர் தினத்தன்றும் அதன் பின்னரும் நடந்த தொடர் குண்டு வெடிப்புகள், உலகமே மனிதர் வாழத் தகுதியற்ற இடமாக மாறி வருவதை உணர்த்துகிறது. இயேசு உயிர்த்தெழுந்த தினத்தில் நாடெங்கும் அமைதியும், மகிழ்ச்சியும் தவழ்ந்து, மக்கள் சுபிட்சமாக வாழ்ந்திட வேண்டுமெனப் பிரார்த்திக்க தேவாலயம் சென்ற பலர் உயிரிழந்துவிட்டனர். ஆண்டவர் நம்மைக் காப்பார் என்று வேண்டிக் கொண்டிருந்தவர்களின் உதிரச் சிதறல், அந்த ஆண்டவரின் சிலையில் […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்
புராணம், இதிகாசம், சீர்த்திருத்தம் எனப் பல பரிமாணங்களைக் கடந்து வந்த தமிழ்த்திரையுலகம் ஐம்பதுகளின் துவக்கத்தில் அரசியல் தாக்கத்தைப் பெற்றது. குறிப்பாக மந்திரிகுமாரி, பராசக்தி, மனோகரா போன்ற படங்கள் மக்களிடையே ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தின. அறுபதுகளில் C.V. ஸ்ரீதர், A. பீம்சிங், B.R. பந்துலு, T.R. ராமண்ணா, A.C. திருலோகச்சந்தர், K.S. கோபாலகிருஷ்ணன், K. பாலச்சந்தர் போன்றோர் காதல் மற்றும் குடும்பப் பின்னல்களின் பின்னணியில் படங்களை நகர்த்திச் சென்றனர். ஒரு கட்டம் வரை, தனது வாள் சண்டை திறமை […]
அமெரிக்காவும் அதன் அகால ஆசையும்
தமிழில் அகால மரணம் என்பது இயற்கையான இறப்பு இல்லை என்று பொருள்படும். தமிழ் மக்களில் ஈழத்து மக்களும், மலேசிய மக்களும் துப்பாக்கியின் பரிவிளைவுகளை அவர்கள் வாழ்நாட்களில் பார்த்தவர்கள், பார்த்துக்கொண்டு இருப்பவர்கூட. இன்று வட அமெரிக்க மண்ணில் வாழும் தமிழரும் அவ்வப்போது காணும் நிர்ப்பந்தத்திற்கு ஆளாகி விட்டனர் எனலாம். கடந்தவாரம் கூடி கொலராடோ மாநிலத்தில் 10 வருடங்களிற்கு முன்னர் நடைபெற்ற அகோரக் கொலம்பைன் பள்ளிக்கூடச் சூட்டுச் சம்பவம் நடந்த இடத்திற்கு ஏழே ஏழு மயில்களிற்கப்பால் மீண்டும் இரண்டு மாணவர்கள் […]
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா
மினசோட்டாத் தமிழ்ச்சங்கப் பள்ளியின் 11ஆவது ஆண்டு விழா ஏப்ரல் 20ஆம் தேதி ஐசன்ஹோவர் சமூகக்கூடத்தில் நடந்தது. மதியம் 2 மணிக்கு தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கிய விழா, மாலை ஆறரை மணிவரை நடைபெற்றது. பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் ஆகியோரது பங்களிப்புடன் பல்வேறு வகை நிகழ்ச்சிகள் மேடையேற்றப்பட்டன. பாடல், நடனம், நாடகம், இசை, பேச்சு என அனைத்துப் பிரிவுகளிலும் மாணவர்களது திறன் அங்கு வெளிப்பட்டது. நிகழ்ச்சிக்கு வந்தோரை வரவேற்று பேசிய பள்ளியின் இயக்குனர் திரு. பாலமுருகன் ராமசாமி, பள்ளியின் […]







