admin
admin's Latest Posts
நான் நானில்லை

நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! வரிக்கிறீர்களே என்னைப்பற்றி அதுவல்ல நான்! வசப்பட்டதில் வசித்துக்கொண்டிருக்கிறேனே அதுவுமல்ல நான்! என் சிறகுகளை பார்த்திருக்க முடியாது நீங்கள். ஏனெனில் அவை முழுமையாய் விரிக்கப்பட விடவேயில்லை! ஒருவேளை கட்டுக்களை விடுவித்து என் சிறகுகளை விரித்திருந்தால் நான் யாரென பாதியாவது தெரிந்திருக்கும்! நினைத்துக் கொண்டிருக்கிறீர்களே நீங்கள் அதுவல்ல நான்! – ருக்மணி
வாட்ஸ்அப் தசாப்தம்

வாட்ஸ்அப் மொபைல் செயலி அறிமுகப்படுத்தப்பட்டு 10 ஆண்டுகள் ஆகிறது. யாஹு நிறுவனத்தில் இருந்து விலகிய ப்ரையனும், ஜேனும் 2019 ஜனவரியில் ஆப்பிள் ஆப்ஸ்டோரில் மெசெஜிங் செயலிக்கு இருக்கும் வெற்றிடத்தை நிரப்ப, வாட்ஸ்அப் கொண்டு வந்தனர். பத்தாண்டுகளுக்கு முன்னர் இதே போன்ற ஒரு ஃபிப்ரவரியில், சரியாகச் சொல்வதென்றால் 2009 பிப்ரவரி 24ஆம் தேதியன்று கலிஃபோர்னியாவில் வாட்ஸ்அப் நிறுவனம் அவர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் அவர்களது செயலி ரொம்பவே மக்கர் செய்தது. அடிக்கடி நின்று போகும். இருந்தாலும், இடைவிடாமல் முயன்று அதை […]
துணுக்குத் தொகுப்பு

வட, தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படக்கூடிய ‘ஹம்மிங் பேர்ட்’ எனும் ரீங்காரச் சிட்டு, பளபளக்கும், வண்ணச், சிறகுகளுடைய சிறிய பறவை. நொடிக்கு ஏறத்தாழ 80 முறை சிறகை அடிக்கும் திறனைப் பெற்ற இந்த அபூர்வப் பறவை, சிறகடிக்கும்பொழுது ஏற்படுத்தும் விர்ரென்ற ரீங்கார (ஹம்மிங்) ஒலியால் இப்பெயர் பெற்றது. இப்பறவையின் மெல்லிய கீச்சொலியைக் கேட்பது மிகவும் அரிது. ஒசனிச் சிட்டு, ஞிமிர்சிட்டு, முரல் சிட்டு என பல பெயர்களால் அழைக்கப்படும் இந்தப் பறவையின் அறிவியல் பெயர் ‘Trochilidae’. […]
இந்திய நாட்டின் கறுப்புத் தினம்

நாடு முழுதும் அன்பைப் பரிமாறிக் கொண்டிருந்த வேளையில், ஜம்மு காஷ்மீரில், புல்வாமா மாவட்டப்பகுதியில் பயங்கரவாத இயக்கத்தைச் சார்ந்தவர்கள் நடத்திய தாக்குதலில், மத்திய ஆயுதக்காவல் படையைச் சேர்ந்த நாற்பத்தி நான்கு ராணுவ ஜவான்கள் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். நாட்டில் சட்ட ஒழுங்கை நிலை நிறுத்துவதும், தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவதும், போர் கால ஆக்கிரமிப்புகளை தடுத்து முறியடிப்பதும் இப்படையினரின் முதன்மை குறிக்கோள். போர் முறைகளையும், அறங்களையும் முழுக்க அறிந்து பயிற்சி பெற்ற வீரர்கள் இவர்கள். இவர்களின் வீரத்துக்கு முன், நேர் நின்று […]
லவ் பேர்ட்ஸ்

2019 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரி மாதம், பதினான்காம் தேதி… மாலை ஐந்து மணி……… பாக்மேன்ஸ் ஃப்ளவர் ஷாப்…. அலுவலகத்திலிருந்து வீடு திரும்பும் வழியில், மனைவி லக்ஷ்மிக்கு வேலண்டைன்ஸ் டே ரோஸஸ் வாங்கிக் கொண்டு செல்லலாம் என்று திட்டம். பாக்மேன்ஸ் பார்க்கிங்க் லாட்டுக்குள் நுழைந்தால், எங்கெங்கு காணினும் கார்களடா எனும் வகையில், தேர்க் கூட்டம், திருவிழாக் கூட்டம். பார்க்கிங்க் லாட்டில், இரண்டு மூன்று முறை சுற்றி, ஒரு வழியாக கடையின் எண்ட்ரன்ஸிலிருந்து வெகு தொலைவில் ஒரு ஸ்பாட் கிடைத்து, […]
அழகிய ஐரோப்பா – 13

(அழகிய ஐரோப்பா – 11/அறை எண் 316) போகும் வழியில் ஹோட்டலில் கிடைத்த காலை உணவில் பிள்ளைகள் அவ்வளவாக ஆர்வம் காட்டவில்லை. அதனால் போகும் வழியில் எங்காவது இந்தியன் ரெஸ்டாரெண்ட் இருக்கிறதா என என் மனைவி கூகிளில் தேடி ஒருவழியாகக் கண்டுபிடித்தாள். காலை 10:30க்கு எல்லாம் ரெஸ்டாரெண்ட் வாசலுக்குச் சென்றுவிட்டோம். ஆனால் ரெஸ்டாரெண்ட் திறக்க 11:00 ஆகுமென எழுதியிருந்தது. சுற்றியிருந்த கடைத் தொகுதிகளைப் பார்வையிட்ட பின் 10:50 அளவில் மீண்டும் உணவகத்தின் வாசலில் சென்று நின்றோம். வரவேற்க […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (பிப்ரவரி 2019)

2019 வருடம் தொடங்கி வெளியாகிய படங்களில் நல்ல சதவிகிதத்தில் ஹிட் பாடல்கள் இதுவரை வரத் தொடங்கியுள்ளது. படங்களின் வரத்தில் ஒரு முறைமையைக் காண முடிகிறது. பெரிய படங்கள் என்றால் ஒன்றோ, இரண்டோ மட்டும் வெளியாகிறது. அதற்காக ஒத்தி வைக்கப்பட்டிருக்கும் மத்திம, சிறு படங்கள் அடுத்தச் சில வாரங்களில் கூட்டங் கூட்டமாக வெளியாகின்றன. படத்தின் அறிமுகத்திற்காக மட்டும் பாடல் வெளியீட்டு விழாக்கள் நடைபெறுகின்றன. அதற்குச் செலவு செய்யத் தயாராக இல்லாத நிறுவனங்கள் யூ-ட்யூப் வழியே, ட்வீட்டர் வழியே பிரபலங்கள் […]
இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா விழா

இந்தியன் அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா (IAM) அமைப்பு அவர்களுடைய புதிய நிர்வாக அலுவலகத்தை எடைனா நகரத்தில் உள்ள பிரான்ஸ் தெருவில் உள்ள கட்டடத்தில் கடந்த வெள்ளியன்று திறத்தனர். இந்த அலுவலகத்தை எடைனா சேம்பர் ஆஃப் காமர்ஸ் நிர்வாகத்தினர் (Edina Chamber of Commerce) , சிகாகோவிலிருக்கும இந்திய தூதரக அதிகாரி, நீடா பூஷன் (Consulate General of Chicago), Dr.தாஷ் (USA Laboratories) மற்றும் இந்திய அசோஷியேஷன் ஆஃப் மினசோட்டா நிர்வாகத்தினர் சேர்ந்து திறத்து வைத்தனர். இந்த […]
திகைப்பூட்டும் திரைப்படப் பாடல்கள்

மனிதர்கள் முதன் முதலில் புரிந்து கொள்ளத் தொடங்கிய முதல் மொழி காதல்தான் எனலாம். காதல் என்ற சொல்லுக்கு அன்பு, இச்சை, வேட்கை, பக்தி, நேசம் எனப் பேரகராதிக் குறிப்புகள் பல பொருள் தந்தாலும், அதில் ஆட்படும் ஒவ்வொருவருக்கும் புதுவிதமான உணர்வு தரும் அபாரச் சக்தி காதல். ‘யாயும் ஞாயும் யாரா கியரோ’ எனும் குறுந்தொகைப் பாடல் தொடங்கி தலைவன் தலைவியின் அகவாழ்வு – காதல் – குறித்து எழுதப்பட்ட பாடல்கள் பல கோடி. எழுத்திலக்கியங்கள் குறைந்து, திரைப்படங்கள் […]
ஆசையில் ஒரு கடிதம்

வேகமாக வண்டியைத் திருப்பி வீடு நோக்கிச் செலுத்தினாள் கயல். வண்டியின் கைச் சக்கரத்திற்கு பின் மணி ஆறு எனக் காட்டியது . சாலையில் கூட்ட நெரிசல். ஏதோ கட்டுமானப் பணி நடந்து கொண்டு இருப்பதால் இரு பகுதிகள் ஒன்றாக ஆக்கப்பட்டு இருந்தன. மெல்ல ஊர்ந்த வண்டிகளுக்குள் கயலும் தன் வண்டியைச் செலுத்தினாள். பாட்டு கேட்பதற்கு மனம் செல்லவில்லை. பரபரவென்ற வாழ்க்கை வெறுப்பாக இருந்தது. சின்னக் குருவி, பசுமையான தோட்டம், அம்மா கைகள், அழகிய மருதாணி, கருவேப்பிலைச் செடிகள், […]