\n"; } ?>
Top Ad
banner ad

admin

rss feed

admin's Latest Posts

தமிழ்ப் படம் 2.0

தமிழ்ப் படம் 2.0

இன்னமும் தமிழ் சினிமா சார்ந்த மேடைகளில் பிற நடிகர்களையோ, படங்களையோ பற்றி விமர்சனம் செய்து கருத்துக் கூறுவது அரிது. எதற்கு மல்லாந்து படுத்துக்கொண்டு துப்புவது, கண்ணாடி வீட்டில் கல்லெறிவது என்று காரணம் கூறுவார்கள். நிலைமை அப்படி இருக்கும் போது, பிற படங்களைக் கிண்டல் செய்து எடுக்கப்படும் ஸ்பூஃப் வகைத் திரைப்படங்கள் தமிழில் சாத்தியமா என்ற கேள்வி நெடுநாட்களுக்கு இருந்தது. அதற்கு விடையாக 2010 இல் “தமிழ்ப்படம்” வந்தது. அச்சமயம் குறைந்த செலவில் எடுக்கப்பட்ட அப்படம் வெற்றியடைந்து நல்ல […]

Continue Reading »

ஆசை…

ஆசை…

வண்ணமாய்ச் சிலதும் வம்புக்காய்ச் சிலதும் சின்னதாய் ஆசைகளைச் சிறகடித்துக் கேட்டபாடல்! எண்ணமும் செயலும் இருவேறாகாத நிலை திண்ணமுற வேண்டுமென்ற ஒன்றதுவே நம்மாசை!   நண்பர்கள் பலரும் நயமுடன் பேசுகையில் பண்புடன் ஒருவர் தம்மனது திறந்திட்டார் இன்பமாய் அவர் எப்போதும் எண்ணுவது துன்பங்கள் துறந்த பின்னோக்கிய பயணமாம்!!   கம்பும் நெல்லும் வரகும் விளைத்திடும் வம்பும் வழக்கும் நினைந்திடா விவசாயியாய் அன்பும் அழகும் பூத்துக் குலுங்கிடும் என்பும் பிறர்க்கெனும் மக்கள் நிறைந்திட்ட   ஏரிக் கரையினில் எழிலான கிராமம் […]

Continue Reading »

கேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம்

கேன்சஸ் புலிகள் பாதுகாப்பகம்

உலகில் அருகி வரும் உயிரினமான புலிகளைப் பற்றிய தகவல் ஒன்று நம்மையெல்லாம் ஆச்சரியப்படுத்தக்கூடும். உலகிலுள்ள காடுகளில் உள்ள புலிகளை விட, அமெரிக்காவில் தனியார் வசம் சிக்கியுள்ள புலிகள் அதிகமாம். வெளிநாட்டில் இருந்து வரும் மனிதர்களுக்கு ஆயிரதெட்டுக் கட்டுப்பாடுகள் இருக்கும் நாட்டில் புலிகள் போன்ற காட்டுவிலங்குகளுக்கென பாதுகாப்புச் சட்டங்கள் ஏதும் இல்லை. சட்டவிரோதமாகக் கடத்தப்பட்டு வீடுகளில் செல்லப்பிராணியாகவும், காட்சிப்பொருளாகவும் இவ்விலங்குகள் பல பயன்படுத்தப்பட்டு வருகின்றன. பல இடங்களில் இவற்றால் ஆபத்து ஏற்படுவதும் நிகழ்கிறது. நிலைமை இப்படி இருக்க, சட்டப்பூர்வமாகக் […]

Continue Reading »

ஆறப்போட்ட தோசைக்கல்

ஆறப்போட்ட தோசைக்கல்

’சூடாகிய தோசைக் கல்லை ஆறவிடக்கூடாது’ என்று சொன்னவர் விஜி, மருத்துவர் சம்பந்தத்தின் மனைவி. மருத்துவர் ஜானகிராமனும் மருத்துவர் சம்பந்தமும் ஆளுக்கு அரை மில்லியன் டொலர்கள்  நன்கொடை வழங்கி ஹார்வர்ட் தமிழ் இருக்கையை வெற்றிகரமாக நிறுவியது எல்லோரும் அறிந்ததே. உலக மக்களிடையே ஹார்வர்ட் தமிழ் இருக்கை ஏற்படுத்திய எழுச்சியை நேரில் கண்ட விஜி சொன்னார், ’இந்த எழுச்சி அலை இருக்கும்போதே ரொறொன்ரோ பல்கலைக்கழகத்திலும்  தமிழ் இருக்கையைத் தொடங்கிவிடவேண்டும்.’ அதன்படியே  ஹார்வர்ட் தமிழ் இருக்கை அமைப்பினர் கனடா தமிழ் பேரவையுடன் […]

Continue Reading »

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

சுதந்திர தின வாழ்த்துக்கள்!

அன்பும் அறனும் விளைந்திட, வேண்டும் சுதந்திரம்! ஆசைகள் நல்வழியில் அடைந்திட, வேண்டும் சுதந்திரம்! இல்லறம் இனிதாய் நடத்திட, வேண்டும் சுதந்திரம்! ஈகையும் கொடையும் பெருகிட, வேண்டும் சுதந்திரம்! உற்றார் உறவினை ரசித்திட, வேண்டும் சுதந்திரம்! ஊரார் ஒன்றாகி மகிழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! என்றும் நிறைவாய் வாழ்ந்திட, வேண்டும் சுதந்திரம்! ஏழைகளும் இயைந்து முயன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஐயம் அகன்று தெளிந்திட, வேண்டும் சுதந்திரம்! ஒன்றாய் உலகோர் உழன்றிட, வேண்டும் சுதந்திரம்! ஓங்குபுகழ் நாடாய் விளங்கிட, வேண்டும் சுதந்திரம்! […]

Continue Reading »

ஐந்தாம் தூண்

ஐந்தாம் தூண்

“மக்களால் மக்களுக்கான மக்களின் ஆட்சியே ஜனநாயகம்”. ஜனங்களை (மக்களை) பிரதானமாகக் கொண்ட இந்த ஆட்சிமுறை பின்னர் மக்களாட்சி என்றானது. நிர்வாகக் கிளை (executive), சட்டமன்றம் (legislative), நீதித்துறை (judicial) என்ற மூன்று கூறுகளாக மக்களாட்சி நிறுவப்பட்டது. ஜனநாயகத்தின் தூண்கள் எனப்படும் இந்த மூன்று கூறுகளின் செயல்களைத் திறனாய்வு செய்து விமர்சிப்பதோடு, அரசாங்கத்துக்கும் மக்களுக்கும் ஒரு பாலமாக அமைவதும் செய்தித்துறையின் முக்கியப் பொறுப்பு. பல நூற்றாண்டுகளுக்கு முன்பு, பிரிட்டிஷ் அரசாங்கத்தின் திட்டங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக உருவாக்கப்பட்ட ‘லண்டன் […]

Continue Reading »

புதிர்

புதிர்

படங்களில் பொதுவானது என்ன?

Continue Reading »

வனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம்

வனப்பான வண்ணத்துப்பூச்சி சரணாலயம்

  பலவகை  வண்ணத்துப்பூச்சிகளை பார்த்திட ஓரிடம் கனேடிய கேம்பிரிஜ் சரணாலயம். கோடையில் அமெரிக்க மிச்சிகன் மாநிலத்திலிருந்து ரொறான்ரோ மாநகர் நோக்கி 401 பெருஞ்சாலையில் (highway) செல்லும் போது பரந்த பச்சைப் பசேல் நிலங்கள் இருபுறமும் காணப்படும். இது சனநெருக்கடியான சிமெந்து கட்டடக் காடுகளால் ஆன டெட்ராயிட்  நகரையும் , மத்திய ரொறான்ரோ நகரையும் விட மிகவும் இதமான காட்சி ஆகும். இந்தப் பெருஞ்சாலையில் செல்லும்பொழுது  சாலையோர அறிவுப்புப் பலகைகள் பல வரும். இவற்றில் குவெல்ஃப், வாட்டலு பல்கலை […]

Continue Reading »

சந்தமும் சங்கீதமும்

சந்தமும் சங்கீதமும்

தமிழ்த் திரையிசையுலகை தங்களது வரிகளாலும், இசையாலும் மிகச் சிறப்பாக ஆண்ட இரு மேதைகள் பிறந்த தினம் ஜூன் 24.  இயற்கையின் வியத்தகு படைப்புகளில் மிக உன்னதமான நிகழ்வு இது. இந்தக் காரணத்தால்தானோ என்னவோ இந்த இருவர் கூட்டணியில் உருவான பாடல்களெல்லாம் தமிழர் நெஞ்சங்களில் என்றும் நீங்காத தனியிடத்தைப் பிடித்துவிட்டன. இன்று தமிழ்த் திரையிசை பிரமிப்பூட்டும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. வித விதமான கருவிகள், பலப்பல குரல்கள், அசர வைக்கும் ஒலிப்பதிவு, தொழில்நுட்பம், எல்லைகள் இல்லா இசைச் சுதந்திரம் இப்படி […]

Continue Reading »

மனித வக்ரங்கள்

Filed in கதை, வார வெளியீடு by on June 25, 2018 0 Comments
மனித வக்ரங்கள்

”கணேஷ், நான் கேள்விப்பட்டது உண்மையா?”.. பாரதியின் குரலிலிருந்த கோபத்தை உடனடியாக உணர்ந்தான் கணேஷ். எதைப்பற்றிக் கேட்கிறாள் என்று உள் மனது சொல்ல, வயிற்றிற்கடியில் ஒரு தீப்பந்து உருண்டு தொண்டைவரை வந்ததுபோல் உணர்ந்தான். அதைத் தெரிந்து கொண்டிருப்பாளா என்று மனது பயமுறுத்த, அதுதான் என்று முழுதாகத் தெரியும்வரை, தானாக எதுவும் வாய்விடுவதில்லை என்ற தீர்க்கமான முடிவுடன் இருந்தான்.   “எதப்பத்தி கேக்ற, பாரதி” … குரலில் வழக்கத்திற்கதிகமான குழைவை ஏற்படுத்திக் கொண்டு கேட்டான் கணேஷ். “நோக்கு நன்னாத் தெரியும் […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad