admin
admin's Latest Posts
அம்மா
தன்னகத்தே இன்னும் ஓருயிராய் தவப்புதல் கொண்டு பெண்ணகத்தே உண்டான பெருமிதம் கொண்டு கண்ணகத்தே காக்கின்ற இமைபோல என்னை உன்னகத்தே காத்தருளினாய்! கால்பதிவுகள் முதலில் உன் கருவறையில் தொடங்கி உன்னை உதைக்கும் போதிலும் கண்ணே! மணியே என்றென்னை தடவிக் கொடுத்து கதைகள் பேசி மொழி பயிற்றுவித்து விதையிட்ட நற்செயல் யாவும் உன் கருவறையிலேயே தொடங்கிவிட்டாய்! வலிமை சேர்த்து வலியைத் தாங்கி என் இதயத்தைத் தனியாய் இயங்க வைத்தாய்! நடைபயிலும் போதெல்லாம் நான் பிடிக்கும் உன் விரல்கள் பசியாறும் வேளையெனில் […]
சிலுவையின் காதல் கடிதம்
அன்புள்ள நித்ரா, என்றும் உன் நலன் விரும்பும் சிலுவை எழுதுவது. நலமாக இருப்பாய் என நம்புகிறேன். இந்தக் காலத்தில் கடிதம் எழுதுவதெல்லாம் பைத்தியக்காரத்தனமாகத் தெரியலாம். இப்போது கூட நீ இதை ஒரு சின்ன சிரிப்போடு தான் படித்துக்கொண்டிருப்பாய். இதை படித்து முடிக்கும் போது உன் கருத்து மாற வாய்ப்பிருக்கிறது புகைப்படம் போல கடிதமும் காலத்தின் ஆவணம். அன்பின் வார்த்தைகளை, பிரியங்களை, அக்கறை கலந்த கண்டிப்புகளைத் தாங்கி வரும் கடிதங்கள் எந்தக் காலத்திலும் தொலையப்போவதில்லை இல்லையா? நமக்கு மிகப் […]
விடியல் ..
ஒவ்வொரு காலையும் இதழோடு முட்டிக் கொண்டதன் ஈரம் காணாத சூடான கதகதப்பில் குடுவையில் அடைத்த தேன் துளிகள் போல பருகப் பருக இன்பமாய் முகரும் மூக்கின் நுனியில் வாசம் படர்ந்திடும் இயற்கையின் விடியலாய் ஒவ்வொரு முறையும் பருகுகையில் விழிகள் அழகாய் விழித்திடும் தூக்கத்திலிருந்து! நானருந்தும் தேநீர்! – ந. ஜெகதீஸ்வரன்
செயின்ட் பாட்ரிக்ஸ் தினம் – 2018
மதுரை மாநகரில், சித்திரை திருவிழாவில் அழகர் என்னென்ன வண்ணங்களில் உடை அணிகிறார் என்பதைப் பொறுத்து அந்த வருடம் எப்படி அமையுமென அறிந்து கொள்ளலாம் என்றொரு நம்பிக்கையுண்டு. அது போல் மனிதர்கள் பச்சை வண்ணத்தில் உடை, ஆபரணங்கள், தொப்பி அணிகிறார்கள் என்றால் அன்றைய தினம் செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பதை அறிந்து கொள்ளலாம். செயின்ட் பாட்ரிக்ஸ் தினம் என்பது ஐரிஷ் நாட்டு மக்களின் கொண்டாட்ட தினமாகும். ட்வின் சிட்டிஸ் எனப்படும் மினியாபொலிஸ் மற்றும் செயின்ட் பால் நகரங்களிலும், அதன் […]
தேனீ அறியாத தேன்
அமெரிக்க ஊத்தப்பமான பேன் கேக்கில் (Pan Cake) தொட்டுக்கொள்ள அமெரிக்கர்கள் பயன்படுத்துவது மேப்பிள் சிரப் (Maple Syrup) எனப்படும் ஒரு தேன் போன்ற சமாச்சாரத்தை. சுவையாக, தேன் போன்ற தித்திப்புடன் இருக்கும். இது தேனீயிடம் இருந்து பிடுங்கிய தேன் இல்லை. மேப்பிள் என்ற மரத்திடமிருந்து எடுக்கும் தேன். குளிர் பிரதேசங்களில் இருப்பவர்கள் மேப்பிள் மரத்தைப் பற்றி அறிந்திருப்பார்கள். மிகவும் அழகாக இலைகளைக் கொண்ட மரம். கனடா நாட்டின் சின்னமாக, அதிகாரப்பூர்வ அரசாங்கச் சின்னமாக மட்டுமில்லாமல், கனடா நாட்டின் […]
ஈஸ்டர் முட்டை வேட்டை திருவிழா 2018
ஈஸ்டர் என்பது இயேசுநாதர் மறைந்தபின் உயிர்த்தெழுந்ததைக் குறிக்கும் திருவிழா. இவ்விழாவை ஒட்டி நடைபெறும் ஈஸ்டர் முட்டை வேட்டை (Easter Egg hunt) குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த நிகழ்வாகும். இந்நிகழ்வு, ஈஸ்டரை ஒட்டி அமெரிக்காவில் பல இடங்களில் நடைபெற்று வருகிறது. (http://www.easteregghuntsandeasterevents.org/MN.php). நேற்று மினசோட்டா மாநிலத்தின். வுட்பரி நகரில் இந்நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. மூன்று பிரிவுகளில் பல குழந்தைகள், முட்டை வேட்டை திருவிழாவில் பங்கேற்றனர். வுட்பரி நகர அமைப்பினர் இந்நிகழ்வை ஏற்பாடு செய்திருந்தனர். பல வண்ண பிளாஸ்டிக் முட்டைகளில், […]
மோர் பான்கேக் ஆப்பம் (Buttermilk Pancake)
வட அமெரிக்காவில் மீண்டும் இலை துளிர் காலம் ஆரம்பிக்கவுள்ளது. மினசோட்டா , ஒன்ராரியோ மற்றும் அயல் வடகிழக்கு நிலங்களில் இது சர்க்கரை மேப்பிள் மரங்கள் இனிக்கும் இரசங்களை வடிக்கும் காலம். மேப்பிள் இரசச் சேகரிப்பு பூர்வீக வாசிகளும், ஸ்கந்திநேவியக் குடியேறிகளும் மகிழ்வுடன் பங்கு பெறும் ஒரு சில வாரக் குதூகலம் ஒன்றுண்டு. அது எதுவென்று கேட்கிறீர்களா? அது பஞ்சு மெத்தை போன்ற மோர் பான் கேக்கும் அதன் மேல் மெதுவாக ஊற்றிக் குழந்தைகளும், பெரியவர்களும் சுவைத்து மகிழும் […]
விளம்பரக்கார உலகமடா
பக்கத்து வீட்டு கிட்டு மாமாவைத் தெரியாதவங்க யாரும் இருக்க முடியாது. அடையாறு , மத்ய கைலாஷ், வட பழனி ஏரியாக்களில் ரொம்ப பிரபலம் அவர். ஏதோ அரசியல் பிரமுகரோ , சினிமா பிரபலமோ, எழுத்தாளரோ இல்லை. ஆனாலும். பழக்கடை வியாபாரி முதல், பெட்டிக் கடை முதலாளிகள், தள்ளு வண்டி விற்பனையார்கள் , இப்படி எல்லோருக்கும் அவர் பரிச்சயம். அவர் என்ன வேலை செய்கிறார்னு யாருக்கும் தெரியாது. ஒரு நாள் மத்ய கைலாஷ் கோயிலைப் பெருக்கிக் கொண்டு இருப்பார் […]
குளிர்காலமா? குளிக்கலாமா? (துருவக்கரடித் தோய்தல் Polar Bear Plunge 2018)
குளிர் காலத்தில் சுடுதண்ணீரில் குளிப்பதற்கே ஒரு விதமான அலுப்பு! அதுவும் மினசோட்டாக் குளிரில் மக்கள் உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துகிறார்கள் என்றால் நம்ப முடிகிறதா? மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம். மேலும் விபரங்களுக்கு பனிப்பூக்களில் வெளியான இந்தப் படைப்பைப் பார்க்கவும்: https://www.panippookkal.com/ithazh/archives/5522 2018ஆம் ஆண்டு நடந்த இந்த நிகழ்வின் புகைப்படங்கள் […]
ப்ளாக் பேந்தர் (Black Panther)
ஹாலிவுட்டில் சூப்பர் ஹீரோ படங்களுக்கு எப்போதும் பஞ்சமிருக்காது. சூப்பர் ஹீரோ படங்களில் ரசிகர்கள் சலிப்புறாமல் இருக்க இவற்றை வெவ்வேறு வகையிலும், புதுப் புதுப் பரிமாணத்திலும் காட்டப் பிரயத்தனப்படுகிறார்கள். சூப்பர் ஹீரோ எல்லையில்லா சக்தி கொண்டவன் என்பதில் இருந்து இறங்கி, அவனும் அல்லது அவளும் நம்மைப் போல ஆசாபாசம் கொண்டவர்கள் தான் என்றும், அவ்வப்போது அடியும் வாங்குவார்கள் என்றும் கடந்த சில வருடங்களாக இவர்களின் கதாபாத்திரங்கள் இந்திய செண்டிமெண்ட் படங்களுக்குக் குறைவில்லாமல் படைக்கப்படுகின்றன. ஏன் சூப்பர் ஹீரோ […]







