அன்றாடம்
பாலுமகேந்திரா ஒரு சகாப்தம்
1939 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் ஈழத் திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் “அமிர்தகழி” என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலநாதன் மகேந்திரன் என்பதாகும். சிறு வயது முதலே படப்பிடிப்பில் ஆர்வம் மிக்க இவர் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து பின்னர் திரைப்பட ஒளிப்பதிவுக்கலை பற்றிய படிப்பில் 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார். தனது பட்டப் பின் படிப்புக்காக முழுவதும் இயற்கை ஒளியைக் கொண்டு வடிவமைத்த திரைப்படமே […]
இலகுவான மீன் குழம்பு
மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி பின்னர் மஞ்சள், பாதி கறி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து ஒருபக்கத்தில் வைத்துக்கொள்ளவும். பழப்புளியை சற்று சூடான ½ கோப்பை நீரில் குழைத்து, புளிச்சாறை வடித்துக்கொள்ளவும்.
ஒரு தட்டையான சட்டியில் மிதமான சூட்டில் சற்று மிளகு, வெந்தயம்,கடுகு,சீரகம் போன்றவற்றைப் பாதி கறிவேப்பிலை சேர்த்து 1-2 நிமிடம் வறுக்கவும். பின்னர் சமையல் எண்ணெய் சேர்த்துக்கிளறி, மீன் துண்டுகளை அதன் மேலை வைக்கவும். 30 நாழிகளில் மீன் துண்டுகளை மறுபுறம் திருப்பி விடவும். மேலும் 30 நாழிகளில் இதர பொருட்களை எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும். மீன் துண்டுகள் குழம்பில் மூழ்கி இருப்பது முக்கியம்.
செட்டிநாட்டு சம்பாஷணை
”அக்கா சொகமா இருக்கீயளா”….. வெள்ளை மனத்துக்குச் சொந்தகார செகப்பி, நடந்து வரும் வழியில் எதிரில் வரும் தெவ்வானை அக்காவைச் சந்தித்துக் குசலம் விசாரிக்கிறாள். “வாடி என்னயப் பெத்த ஆத்தா, நா நல்லாருக்கேனப்பு.. நீ எப்படி இருக்க? ஏது இந்தப்பக்கம் அதிசயமா காத்தடிக்குது?” அதே கரிசனத்துடன் பதிலளித்துக் கேள்வி கேட்கிறாள் தெய்வானை. “ஒண்ணுமில்லயக்கா, நம்ம பெரியாஸ்பத்திரி வரக்கும் ஒரு எட்டு போயாரலாமுன்னு”….. “அடியாத்தி, என்னாச்சுடி, உடம்புக்கு எதுவுஞ் சொகமில்லையா?” “எனக்கெதுமில்லயக்கா, நல்லாக் குத்துக் கல்லாட்டமாத்தேன் இருக்கேன். நம்ம கெளவிக்கு […]
மா விளக்கு
மாவிளக்கானது தமிழ்க்கிராமப்புற பாரம்பரியம் கார்த்திகை முருகனிற்கும், ஊர் அம்மனிற்கும், புரட்டாதியில் எள்ளெண்ணெய் எரித்தலின் போதும் செய்யப்படும். தேவையானவை பச்சை அல்லது தீட்டாத புதிய அரிசி பனங்கட்டி நல்லெண்ணெய் செய்யும் முறை – அரிசியை ஊறவைத்துப் பின்னர் சற்று உலர்த்தி அரைக்கவும், அரைத்த அரிசியுடன் பனங்கட்டித் துருவல்கள் சேர்த்துப் பசையாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் உள்ளங்கை வெப்பத்தில் கோழைகளாக உருட்டி, நடுவில் பெருவிரலால் அழுத்தி எண்ணெய் விடக்கூடிய அளவு ஒரு பள்ளத்தை உண்டாக்கவும். பள்ளத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் திரிவைத்து […]
தமிழ்ச் சங்கக் கோடைச் சுற்றுலா – பெற்றோர் நேர்காணல்
கோடையில் மினசோட்டாத் தமிழ்ச்சங்கம் நடத்திய சுற்றுலாவில், பனிப்பூக்கள் குழுவினர் சிலர் பங்கேற்றோம். பொழுதுபோக்கும் விளையாட்டுகளில் உற்சாகத்துடன் குழந்தைகளும் பெற்றோரும் கலந்துக் கொள்ள அமெரிக்காவில் வாழும் பிள்ளைகளையும், பேரக் குழந்தைகளையும் காண வந்திருந்த மூத்தவர்கள் பரவசத்துடன் அவர்களைக் கண்டு மகிழ்ந்திருந்தனர். அமெரிக்க நாட்டை பற்றியும், குறிப்பாக மினசோட்டாவிலுள்ள தமிழர் கலாச்சாரம், வாழ்க்கை முறை பற்றிய அவர்களது கருத்தையறிய மினசோட்டாவில் தங்களது மகள் மற்றும் மருமகன் வீட்டிற்கு வந்திருக்கும் திரு. கண்ணன், திருமதி. மோகனா அவர்களை எங்களது பனிப்பூக்கள் இதழுக்காக […]
ஆரம்பம்
தமிழ்த் திரைப்படங்கள் மேற்கத்திய திரைப் படங்களைப் போல பிரம்மாண்டமான முறையில் வர ஆரம்பித்துக் காலங்கள் பல ஆகிவிட்டன. ஒரு நூறு மைல் வேகத்தில், தடையேதுமில்லாத அகலமான நெடுஞ்சாலைகளில், பல கார்கள் பறந்து செல்வதும், அதன் மத்தியில் கதா நாயகனும், வில்லனும் துப்பாக்கி குண்டுகளுக்கு மத்தியில் ஒருவரை ஒருவர் காரில் துரத்திக் கொண்டு பயணிப்பதும் சர்வ சாதாரணமான காட்சிகள். இந்தியா ஏழை நாடு, சுமார் முன்னூறு மில்லியன் மக்கள் நாளுக்கு ஒரு டாலருக்கும் குறைவான சம்பளத்தில் வாழ்க்கை நடத்துகின்றனர் […]






