அன்றாடம்
பாகற்காய்க் கறி
கசப்பான பாகற்காய், நீரிழிவு நோயையும் தவிர்க்கும் அற்புதமான காய். பாகற்காய் தமிழகம் மற்றும் இலங்கையில் 10-12 அங்குல நீளமான வகைகளாகக் காணப்படுகிறது. தவிர மலைப்பிரதேச லாவோஸ், தாய்லாந்து நாடுகளில் சிறிய வகைகளும், சீன நாட்டில் இளம் பச்சை வகைகளாகவும் பல்வேறு வகைகளில் பயிராகிறது. மினசோட்டா மாகாணாத்தில் இந்த வகைப் பாகற்காய்கள் அத்தனையும் கிழக்காசிய சமூகச் சந்தைகளில் கிடைக்கின்றன. பாகற்காயின் கசப்பை நீக்க மக்கள் பல்வேறு வகைகளில் பக்குவப்படுத்திச் சுவையாகச் சமைப்பர். சிலர் கடல் உப்புச் சேர்த்துச் சூரிய […]
மின்னசோட்டாவில் நீயா? நானா?
தமிழகத் தொலைக்காட்சிகளில் பல்வேறு சினிமாத் தொடர்பான நிகழ்ச்சிகள் பரவலாகப் பார்க்கப் படுவதுடன், வியாபார விளம்பரங்களை அதிகம் குவிப்பதும் அவைதான். தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைப்படத்துறையின் ஒரு நீட்டிப்பாகத்தான் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது, மீறிப்போனால் குடும்ப உறவுகளை நாசமாக்கும் நெடுந்தொடர்கள் அவை கற்றுக்கொடுப்பதெல்லாம் ஆணவத்தையும், பழிவாங்குதலையும் தான். இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாகக் கருத்து மோதல் நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் மக்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய நிகழ்ச்சிதான் விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா? நானா? என்கிற விவாத நிகழ்ச்சி. எந்த […]
பாலுமகேந்திரா ஒரு சகாப்தம்
1939 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் ஈழத் திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் “அமிர்தகழி” என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலநாதன் மகேந்திரன் என்பதாகும். சிறு வயது முதலே படப்பிடிப்பில் ஆர்வம் மிக்க இவர் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து பின்னர் திரைப்பட ஒளிப்பதிவுக்கலை பற்றிய படிப்பில் 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார். தனது பட்டப் பின் படிப்புக்காக முழுவதும் இயற்கை ஒளியைக் கொண்டு வடிவமைத்த திரைப்படமே […]
இலகுவான மீன் குழம்பு
மீன் துண்டுகளை நன்றாகக் கழுவி பின்னர் மஞ்சள், பாதி கறி மிளகாய்த்தூள், சிறிதளவு உப்பு சேர்த்து ஒருபக்கத்தில் வைத்துக்கொள்ளவும். பழப்புளியை சற்று சூடான ½ கோப்பை நீரில் குழைத்து, புளிச்சாறை வடித்துக்கொள்ளவும்.
ஒரு தட்டையான சட்டியில் மிதமான சூட்டில் சற்று மிளகு, வெந்தயம்,கடுகு,சீரகம் போன்றவற்றைப் பாதி கறிவேப்பிலை சேர்த்து 1-2 நிமிடம் வறுக்கவும். பின்னர் சமையல் எண்ணெய் சேர்த்துக்கிளறி, மீன் துண்டுகளை அதன் மேலை வைக்கவும். 30 நாழிகளில் மீன் துண்டுகளை மறுபுறம் திருப்பி விடவும். மேலும் 30 நாழிகளில் இதர பொருட்களை எல்லாம் சேர்த்து கொதிக்க வைக்கவும். மீன் துண்டுகள் குழம்பில் மூழ்கி இருப்பது முக்கியம்.
செட்டிநாட்டு சம்பாஷணை
”அக்கா சொகமா இருக்கீயளா”….. வெள்ளை மனத்துக்குச் சொந்தகார செகப்பி, நடந்து வரும் வழியில் எதிரில் வரும் தெவ்வானை அக்காவைச் சந்தித்துக் குசலம் விசாரிக்கிறாள். “வாடி என்னயப் பெத்த ஆத்தா, நா நல்லாருக்கேனப்பு.. நீ எப்படி இருக்க? ஏது இந்தப்பக்கம் அதிசயமா காத்தடிக்குது?” அதே கரிசனத்துடன் பதிலளித்துக் கேள்வி கேட்கிறாள் தெய்வானை. “ஒண்ணுமில்லயக்கா, நம்ம பெரியாஸ்பத்திரி வரக்கும் ஒரு எட்டு போயாரலாமுன்னு”….. “அடியாத்தி, என்னாச்சுடி, உடம்புக்கு எதுவுஞ் சொகமில்லையா?” “எனக்கெதுமில்லயக்கா, நல்லாக் குத்துக் கல்லாட்டமாத்தேன் இருக்கேன். நம்ம கெளவிக்கு […]
மா விளக்கு
மாவிளக்கானது தமிழ்க்கிராமப்புற பாரம்பரியம் கார்த்திகை முருகனிற்கும், ஊர் அம்மனிற்கும், புரட்டாதியில் எள்ளெண்ணெய் எரித்தலின் போதும் செய்யப்படும். தேவையானவை பச்சை அல்லது தீட்டாத புதிய அரிசி பனங்கட்டி நல்லெண்ணெய் செய்யும் முறை – அரிசியை ஊறவைத்துப் பின்னர் சற்று உலர்த்தி அரைக்கவும், அரைத்த அரிசியுடன் பனங்கட்டித் துருவல்கள் சேர்த்துப் பசையாக அரைத்துக்கொள்ளவும். பின்னர் உள்ளங்கை வெப்பத்தில் கோழைகளாக உருட்டி, நடுவில் பெருவிரலால் அழுத்தி எண்ணெய் விடக்கூடிய அளவு ஒரு பள்ளத்தை உண்டாக்கவும். பள்ளத்தில் நல்லெண்ணெய் அல்லது நெய் திரிவைத்து […]






