வார வெளியீடு
‘உட்பரி தேசிஸ்’ இன்பச் சுற்றுலா 2019
வட அமெரிக்காவின் மினசோட்டா மாநிலத்தில் கோடை காலம் என்பது ஜீன், ஜூலை ஆகஸ்ட் மாதங்கள் மட்டுமே. இந்த மூன்று மாதங்களில் மக்கள் கோடை காலத்தைப் பல வழிகளில் கொண்டாடி அனுபவிப்பார்கள். மினசோட்டா மாநிலத்தின் உட்பரி நகரில் வசிக்கும் இந்தியர்கள் ஒன்றிணைந்து ஒரு கூட்டாஞ்சோறு விழாவை ஏற்பாடு செய்திருந்தனர். ஆகஸ்ட் 31ம் தேதி அன்று .உட்பரி நகரப் பூங்காவின் தங்குமனையில் (shelter) இந்தக் கூட்டாஞ்சோறு விழா மிகவும் சிறப்பாக நடைபெற்றது. முதலில் குடும்பப் புகைப்படங்கள் எடுக்கப்பட்டு அனைவரும் வரவேற்கப்பட்டனர். […]
மினசோட்டா மாநிலக் கண்காட்சி 2019
அமெரிக்க மாகாணங்களில் நடத்தப்படும் மாநிலக் கண்காட்சிகள் (State fair) ஊர்த் திருவிழாவாகவே காட்சியளிப்பவவை. மினசோட்டா மாநிலக் கண்காட்சி, ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாத இறுதி வாரத்தில் ஆரம்பித்து செப்டம்பர் முதல் வாரத்தில் வரும் தொழிலாளர் தினம் வரை 12 நாட்கள் நடைபெறும். ‘மினசோட்டாவின் ஒன்று கூடல்’ என்ற செல்லப்பெயரிடப்படும் இவ்விழா வருகையாளர்களின் தினசரி எண்ணிக்கை அடிப்படையில் நாட்டிலேயே முதன்மையானதாகவும், மொத்த வருகையாளர் எண்ணிக்கை அடிப்படையில் டெக்சாசுக்கு அடுத்து இரண்டாவதாகவும் கருதப்படுகிறது இவ்விழாவுக்கான நுழைவுக் கட்டணம், வயதைப் பொறுத்து […]
உங்கள் மனதை படைப்பாற்றல் சிந்தனைக்கு (Creative Thinking) தயாராக்குவது எப்படி?
ஒரு மனிதனின் படைப்பாற்றலை, சிந்திக்கும் திறனை அளவிட பெருநிறுவனங்கள் கருத்துதிர்ப்பு (Brainstorming) முறையை பயன்படுத்துகின்றன. பெரும்பாலும் தமது பணியாளர்களைத் தேர்வு செய்ய இம்முறையைக் கடைபிடிக்கிறார்கள் இவர்கள். இதன்படி தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரை ஒரு அறையில், மேஜையைச் சுற்றி அமரச் செய்து உரையாடச் செய்வர். தங்களது நிறுவனக் குறிக்கோள், கூட்டு முயற்சியின் (Teamwork) முக்கியத்துவம் போன்ற செய்திகள் தாங்கிய சுவரொட்டிகள் அறைகளில் தென்படக்கூடும். எந்தத் தலைப்பில் பேசுவது என்ற தயக்கம் குழுவினிரைடையே நீண்ட நேரம் தென்பட்டால் அந்தக் குழுவில் தங்கள் […]
மினசோட்டாவின் குதூகல அறுவடைக் காலம்
மினசோட்டா மாநிலத்தின் கோடை உக்கிரம் தணிந்து, தாவரங்கள் வர்ணஜால நிறம் மாறும் காலம் இது. இக்காலம் எம் மாநிலத்தின் பெரும் அறுவடைக் காலமும் ஆகும். இந்தாண்டு பெய்த அருமையான கோடை மழை பாரிய அறுவடைகளையும் தந்துள்ளது. இதமான இந்தக்காலத்தை எழிலாக எமது வாசகர்கள் குடும்பத்தோடு அனுபவிக்க, புறநகர்களில் நடைபெறும் சில இலையுதிர் கால நிகழ்வுகளின் அட்டவணை இதோ. என்ன? எங்கே? எப்போது? MN Renaissance Festival Visit this 16th Century European village featuring […]
கரம் நிறைய கனிந்த புளுபெரிகள்
அதி விசையுடன் நகரும் எமது வாழ்வு, எமது உடலோடு ஒட்டிய தொலைத் தொடர்புச் சாதனங்கள் – இயற்கையின் எழிலான இன்ப வாழ்வில் இருந்து எம்மைத் தள்ளி வைக்க முனைகிறது எனலாம். மினசோட்டா மாநிலத்தில் சென்ற, இரு தசாப்தங்களில் குடிமனை கட்டடங்களும், வர்த்தகத் தலங்களும் காடுகளை அழித்து, சனப் பெருக்கம் உள்ள நாடாக்கியவாறு உள்ளன எனலாம். நம்மில் பலர் இது செளகரியந்தானே என்று நினைக்கலாம் ஆயினும் இது சென்ற 200 ஆண்டு அமெரிக்க கிராமிய வாழ்வுக்கு மாறானது. நவீனம் […]
பனிப்பூக்கள் Bouquet – ஆண்டாண்டு கால எதிர்பார்ப்புகள்
காஞ்சிபுரத்தில் நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தண்ணீரிலிருந்து வெளியே வரும் அத்திவரதர், இந்தாண்டு ஜூலை ஒன்றாம் தேதி முதல் பக்தர்களுக்குத் தரிசனம் கொடுத்து வருகிறார். நாற்பது ஆண்டுகளுக்கு ஒருமுறை தான் காண முடியும் என்பதால் கூட்டம் அலைமோதுகிறது. ஸ்பெஷல் தரிசனம், விஐபி பாஸ் என ஊர் கோலாகலமாகிவிட்டது. சரியான ஏற்பாடுகள் செய்யப்படாததால், பலர் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறார்கள். இதுவரை சில உயிர்கள் இந்தக் கூட்டத்தில் சிக்கித் தவறியிருக்கின்றன. இன்னும் சில நாட்களே வெளியே இருப்பார் என்பதால், கூட்டம் தற்சமயம் […]
காற்றில் உலவும் கீதங்கள் – டாப் 5 சாங்ஸ் (ஆகஸ்ட் 2019)
கடந்த இரண்டு மூன்று மாதங்களில் நிறையத் தமிழ்ப்படங்கள் வெளியாகி இருந்தாலும், வெற்றி சதவிகிதம் மிக மிகக் குறைவு. அதனால், பெரிய ஹிட் பாடல்கள் என்று நிறைய வரவில்லை. இந்த லிஸ்ட்டை எடுத்துக்கொண்டாலே, இதில் நிறையப் படங்கள் ஓடவில்லை என்று தெரியும். இனி வரும் மாதங்களில் நல்ல பெரிய ஹிட் பாடல்களும், படங்களும் வரும் என்று நம்புவோம். அயோக்யா – கண்ணே கண்ணே தெலுங்கு டெம்பரின் (Temper) தமிழ் ரீ-மேக்கான இப்படத்தில் இடம்பெற்ற இப்பாடலைப் பாடியது அனிருத். […]
இண்டிபெண்டன்ஸ்
”ஏன்னா… இவா ரெண்டு பேரும் ஒரே எக்ஸைட்டட்… நாளைக்கு ஜூலை ஃபோர்த் ஃபையர் வொர்க்ஸ் ஷிகாகோவில பாக்கப் போறம்னு…” அடுக்களையில் பிஸி பேளா பாத்திற்குக் காய் நறுக்கிக் கொண்டே பேசத் தொடங்கினாள் லக்ஷ்மி. “ஆமாண்டி, இட் வில் பி டிஃபரண்ட் ஃபார் ஷ்யூர்…. ஐம் அல்ஸோ எக்ஸைட்டட்… ஷிகாகோல ஃபெட்னா ப்ரோக்ராம்ஸ் எல்லாம் பாக்கலாம்… சேம் டே…” லேப் டாப்பிலிருந்து தலையை நிமிர்த்தி, அடுக்களையிருந்த பக்கம் பார்த்து, பதிலளித்தான் கணேஷ். “நான் இப்பவே சொல்லிட்டேன்… தமிழ் ப்ரோக்ராம் […]
மேல் பட்டண கலைச் சந்தை (UpTown Art Fair)
56 ஆவது கலைச் சந்தை ஆகஸ்ட் 3 – 4ம் தேதிகளில் மினியாப்பொலிஸ் நகரத்தின் ஹென்னப்பின் தெருவில் நடைபெற்றது. இது w 31 st இல் இருந்து w28 th வீதி வரை வாகனங்களை மறித்து ஹென்னப்பின் வீதி இருபுறமும் கூடாரங்கள் போடப்பட்டிருந்தன. இந்தப் பண்டிகைக்கு வருடா வருடம் சுமார் மூன்றரை லட்சம் மக்கள் வருகைத் தருகின்றனர். இவ்விடம் பல ரக ஓவியர்கள், சிற்பிகள், புகைப்படவியலாளர்களின் கைவண்ணங்கள் மிகுந்திருந்தன. விதவிதமான உணவு, குடிபான வகைகளும் விற்கப்பட்டன. இம்முறை […]
நேர்கொண்ட பார்வை
அமிதாப் நடிப்பில் ஹிந்தியில் வெற்றிப்பெற்ற ‘பிங்க்’ திரைப்படம் தமிழில் அஜித்தின் நடிப்பில் ‘நேர்கொண்ட பார்வை’யாக இந்த வாரம் வெளியாகியுள்ளது. இது அவருடைய வழக்கமான கமர்ஷியல் மசாலா படம் அல்ல என்பதையறிந்து அஜித்தின் ரசிகக் கண்மணிகள் சென்றால் படம் அவர்களைக் கவரும். ஒரு பெண் “இல்லை என்றால் இல்லை” தான் எனும் ஒரு மிக அடிப்படையான கருத்தை, இக்காலக்கட்டத்தில் பெரும்பாலோருக்கு மீண்டும் நினைவுப்படுத்த அஜித் எண்ணியதின் வெளிப்பாடாக இப்படத்தைக் கருதலாம். இன்றைய காலக்கட்டத்தில் இந்த எளிய கருத்தே, ஒரு […]






