\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for February, 2013

தலையங்கம்

Filed in தலையங்கம், முகவுரை by on February 21, 2013 1 Comment
தலையங்கம்

அக்னிக் குஞ்சொன்று கண்டேன் – அதை
அங்கொரு காட்டினில் பொந்திடை வைத்தேன்
வெந்து தணிந்தது காடு – தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ!!!
-மகாகவி சுப்பிரமணிய பாரதி

அன்றாட வாழ்வில் நாம் கணக்கற்ற அக்னிக் குஞ்சுகளைச் சந்திக்கின்றோம். எழுத்துத் திறமை, பேச்சுத் திறமை, ஓவியம் வரைதல், கதை சொல்லுதல், பாட்டுப் பாடுதல், அகழ்வாராய்ச்சி, வரலாற்று உண்மைகளின் தெளிவு, நிகழ்வுகளைத் திறனாய்தல் என ஏதோவொரு துறையை கை வந்த கலையாகக் கொண்ட அக்னிக் குஞ்சுகள் பல நம்மில், நம் நண்பர் குழாத்தில், நம் ஊரில், நமக்குத் தெரிந்தவர்களின் மத்தியில் என பல பிணைப்புகளிலும் கலந்து வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அந்த அனைத்து அக்னிக் குஞ்சுகளையும் சமுதாயமென்ற காட்டிடை ஒளிரச் செய்யும் பொந்தாக அமைவதே இந்த சஞ்சிகை.

Continue Reading »

வண்ணம் தீட்டுக (மன்னன்)

Filed in சிறுவர் by on February 21, 2013 0 Comments
வண்ணம் தீட்டுக (மன்னன்)

வண்ணம் தீட்டுக

Continue Reading »

வண்ணம் தீட்டுக (இளவரசி)

Filed in சிறுவர் by on February 21, 2013 0 Comments
வண்ணம் தீட்டுக (இளவரசி)

வண்ணம் தீட்டுக

Continue Reading »

மினசோட்டாவின் ஏரிக்கரை துலூத் நகரம்

மினசோட்டாவின் ஏரிக்கரை துலூத் நகரம்

அறிமுகம் துலூத் நகரமானது சுப்பீரியர் பெரும் ஏரிக்கரைத் தொழிற்படும் துறைமுகமாகவும் பருவகால உல்லாச வலயமாகவும் இருந்து வருகின்றது. இந்நகரில் மினசோட்டா மாநிலப் பல்கலைக் கழக துலூத் பகுதியும், மற்றும் செயின்ட் ஸகொலாஸ்டிக்கா என்னும் கத்தோலிக்கத் தனியார் பல்கலைக்கழகமும், மற்றும் சில தொழிநுட்பப் கல்விக்கூடங்களும் உண்டு. துலூத் நகரானது தன் இரணைப் பிறவியாக செயின்ட் லூயிஸ் ஆற்றின் மறுபுறம் இருக்கும் துறைமுக நகரமான சுப்பீரியரையும் சேர்த்துக் கொள்ளும். சுப்பீரியர் நகரமானது அண்டை மாநிலமான விஸ்கான்ஸினைச் சேர்ந்தது. சுற்றுலா இடங்கள் […]

Continue Reading »

பனிக்கோலம்

Filed in இலக்கியம், கவிதை by on February 21, 2013 0 Comments
பனிக்கோலம்

சீவ நதி வற்றி போகும் – வறட்சி இல்லை
பட்ட மரம் மலர் சொரியும் – மாயம் இல்லை

துளையிட்டு மீன் பிடிப்போம் – பசியும் இல்லை
ஒல்லியனும் குண்டாவான் – கொழுப்பும் இல்லை

Continue Reading »

புதுமை

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 1 Comment
புதுமை

அது ஒரு மார்கழி மாத அதிகாலை நேரம். சூரியன் முழுவதும் எழுந்திராத துணிவில், மூடுபனி படர்ந்து கடல் அலையையும் அதனையடுத்த மணற்பரப்பையும், தலைவர்களின் சிலைகளையும் மூடி ஆட்கொண்டிருந்த காலம். மூடுபனியை ஊடுருவிக் காணும் அழகை ரசித்த இளஞ்சூரியன் அந்த அழகு கெடாமல் சிறிது நேரம் இருக்கட்டுமென தனது சூடான கிரணங்களைச் சுருட்டி மறைத்தது போல ஒளி குன்றியிருந்தான்…… அவன் ஒளி குன்றியிருப்பது தலைவர்களின் சிலை மீது பறவைகள் கழித்த எச்சத்தை வெளிச்சம் போட்டுக் காட்டாமலிருப்பதற்காகக் கூட இருக்கலாம்… […]

Continue Reading »

பாமரனின் புரிதல்கள்

பாமரனின் புரிதல்கள்

“அச்சம் இல்லாதவன் அம்பலம் ஏறுவான்” கூறும் சூழ்நிலை: தைரியமாக சாதிக்க வேண்டிச் சொல்வது! பொருள் : துணிந்து செய்யும் செயல் நிச்சயம் வெற்றி பெறும். அம்பலம் என்பது பொதுமக்கள் நிறைந்திருக்கும் சபை. அது போன்ற சபைகளில் அச்சமின்றி பேசுபவர்கள் புகழ் பெறுவார்கள். “அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது” கூறும் சூழ்நிலை: சரியான முனைப்பின்றி காரியம் செய்வோருக்கு சொல்வது. பொருள் : சரியான முனைப்பும், தலைமையும் இருந்தால் மட்டுமே செய்யும் செயல் வெற்றி பெறும். இல்லாவிட்டால் அச்சாணி […]

Continue Reading »

உறவுகள்

Filed in இலக்கியம், கதை by on February 21, 2013 3 Comments
உறவுகள்

அது ஒரு சனிக்கிழமை. நவம்பர் மாத மினசோட்டாக் காற்று அந்த இளங்காலையைத் தொடர்ந்து குளிரூட்டிக் கொண்டிருந்தது. சற்றுத் தூக்கம் கலைந்தும் கலையாத ஒரு மோன நிலை. அடுக்களையில் மாலினி வெண்பொங்கலுக்குத் தாளித்துக் கொண்டிருந்த வாசனை எழுந்திருக்கச் சொல்லி வற்புறுத்திக் கொண்டிருந்தது. இருந்தாலும் அந்தச் சனிக்கிழமை காலையை வீணடிக்க மனமின்றி, ரஜாயை நன்றாக இழுத்துப் போர்த்தித் தாளிக்கும் வாசம் மூக்கைத் தாக்காதவாறு திரும்பிப் படுத்தேன்.   ‘ஏங்க.. எழுந்திருங்க .. ’, மாலினியின் குரல் கேட்டது.   ‘கொஞ்ச […]

Continue Reading »

அகரவரிசையில் அழகிய மினசோட்டா

அகரவரிசையில் அழகிய மினசோட்டா

அ – அல்பெர்ட் லீ (Albert Lea); ஃபிரீபோர்ன் (Freeborn) மாவட்டம் தென் மினசோடா – இவ்விடம் பெருவிவசாயத் தொழிலை மையமாக வைத்து அமைந்த சமூகம். அல்பெர்ட் லீ போகும் வழியில் பெருஞ்சாலை தெற்கு 35 இல் பெரும் மலிவு கடைச் சந்தைகள் உள்ளன. அல்பெர்ட் லீ நகரம் ஏறத்தாழ 300 ஏக்கர்களில் 41 பூங்கா, விளையாட்டு, மற்றும் சுற்று வெளி அரங்கு வசதிகளைக் கொண்டது. இவை யாவும் வருவோர்க்கு இலவசம். இவ்விடம் பிரதான உல்லாசப் பயணிகள் […]

Continue Reading »

கனவு மெய்ப்பட வேண்டும்

Filed in இலக்கியம், கவிதை by on February 21, 2013 2 Comments
கனவு மெய்ப்பட வேண்டும்

உழுவோர் ஊணுண்டு செருக்குற
நிலமிது வளம்பெற வேண்டும்!
உழைப்போர் உரிமையுடன் ஓய்வுற
நிலவது வசப்பட வேண்டும்!

தவிப்போர் தாகம் தீர்த்திட
தடையறு தண்ணீர் வேண்டும்!
அணைப்போர் அணைந்தே ஒழிந்திட
அடைமழை பொழிந்திட வேண்டும்!

Continue Reading »

banner ad
Bottom Sml Ad