Archive for February, 2013
கனவுகள் வாழ்கின்றன

தென்றல் காற்று முகத்தில் பட்டுத்தெறித்தது. கண்ணில் பட்ட இடமெங்கும் வெட்டவெளியாக வயல்வெளி பரவிக்கிடந்தது. தென்றலின் இனிய வாசத்தை அள்ளிச் சுவைத்தபடி மூக்கின் வழியே இழுத்து ஆசை தீர வாய்வழியே விட்டு வெளியனுப்பி அனுபவித்தேன். இதமான காலைப்பொழுதில் குளக்கட்டின் வழியே பொங்கிப் பிரவாகிக்கும் வயற்காற்று மருதமர இலைகளை அசைத்து நடனம் பயிற்றிக் கொண்டிருந்தது. நிறைமாதமாய் தளதளத்து முட்டிமோதியது குளத்து நீர். வான் பாய்ந்து அடங்கியதற்கான ஆதாரங்கள் அங்குமிங்குமாக உருக்குலைந்திருந்தன. மூன்றாண்டுகளின் பின் என் சொந்த மண்ணில்… நான் பிறந்து […]
இனிக்கும் இராசவள்ளிக் கிழங்கு

குளிர்பனிக் கூதலை தவிர்க்க இதமான இனிக்கும் இராசவள்ளிக் கிழங்குக் களி அல்லது கஞ்சி. இதன் நிறமோ கவர்ச்சிகரமான் ஊதாநிறம். இவ்வகை கிழங்குகள் பொதுவாக மினசோட்டாவில் இந்திய,சீன, வியட்நாமிய மரக்கறிக் கடைகளில் பிந்திய பனிமாதங்களாகிய் மாசி, பங்குனியில் கிடைக்கும். இவ்விடம் ஊதாக் கிழங்கு அல்லது பெர்பிள் யாம் (Purple Yam) என்றழைக்கப்படும் கிழங்கு, நமது தமிழ்ப் பிரதேசங்களில் மார்கழி, தைதொட்டு நிலத்தில் இருந்து கிண்டி எடுக்கப்படும் சுவையான ஊதாநிறக் கிழங்கு . இது வெவ்வேறு வள்ளிக்கிழங்கு வகைகளிலேயே இராச […]
சமையல் : பிஸிபேளேபாத்

தேவையான பொருட்கள்: அரிசி – 1 கப் துவரம் பருப்பு – ½ கப் வெங்காயம் – 1 தக்காளி – 1 பீன்ஸ் – 10 கேரட் – 1 உருளைக்கிழங்கு – 1 முருங்கைக்காய் – சிறிதளவு புளி – சிறிய எலுமிச்சை அளவு (கரைத்து கொள்ளவும்) மிளகாய்த் தூள் – தேவைக்கேற்ப மஞ்சள் தூள் – சிறிதளவு மசாலா அறைப்பதற்காகத் தேவையான பொருட்கள்: கடலைப் பருப்பு – 2 ஸ்பூன் தனியா – […]
ஒரு ஈழத் தாயின் இன்றைய தாலாட்டு

ஆராரோ ஆரிவரோ
ஆரடிச்சு நீயழுதாய்
அடித்தாரை சொல்லியளு
ஆக்கினைகள் பண்ணி வைப்பேன்
காத்து நுழையாத வீட்டினுள்ளே
காவாலி அவன் நுழைஞ்சான்
பாத்துப்பாத்து கட்டி வைச்ச
செல்வமெல்லாம் கொண்டுபோனான்
பதிவுகள்

வீட்டுக்குள் நுழையும் போதே ஒரே சத்தமாக இருந்தது. ஸ்பின் சைக்கிளில் வாஷிங் மெஷின் வீட்டையே லேசாகக் குலுக்கிக் கொண்டிருந்தது. சமையலறையில் இரண்டு நாட்களில் இட்டிலியாகப் போகும் மாவு அரைபட்டுக் கொண்டிருந்தது. டீ.வி யில், ‘அய்யய்யோ ஆனந்தமே’ என யானையுடன் ஹீரோ ஆடிக்கொண்டிருந்தார். பாத்திரம் தேய்த்துக் கொண்டிருந்த திவ்யா என்னைப் பார்த்ததும் கழுவிய டம்ளரை ‘நங்’கென்று சத்தம் வருமாறு ஸ்டாண்டில் வைத்தாள். ’காப்பி குடிக்கிறீங்களா?’ ’இல்லம்மா.. வேணாம்’. ’அதானே … இன்னைக்கு காப்பி தேவைப்படாதே உங்களுக்கு..’ கிராதகி எப்படித்தான் […]
திரைப்படத் திறனாய்வு – கும்கி

மைனா திரைப்பட வெற்றிக்குப் பிறகு வழக்கமான இயக்குனர்கள் போல், பெரிய நடிகர்களை இயக்கி அவர்களுக்கு விதிக்கப்பட்ட வரையரைக்குள் சிக்கி கொள்ளாமல், தனக்கென பாதை வகுத்துக் கொண்டதற்கு பிரபு சாலமனை முதலில் பாராட்ட வேண்டும். மார்த்தாண்டம் பகுதியில் ஆதிகாடு எனும் கிராமம். இங்கு காட்டு யானைகளால் துயரப்படும் கிராமத்தினர், அரசாங்கம் உதவி செய்யாததினால் தாங்களாகவே பொருள் சேர்த்து, காட்டு யானையை விரட்ட, கும்கி யானை ஒன்றை கொண்டு வர முயல்கின்றனர். சந்தர்ப்ப வசமாக, கும்கி யானைக்கு பதிலாக கதாநாயகன் […]
தமிழ்ப் பாடல்

வள்ளுவன் என்றோர் வரகவி வந்து
வாழ்வியல் நெறிகளைத் தரமுடன் தந்து
துள்ளும் தமிழின் நடையதை உணர்ந்து
தூய்மை நிரம்பும் மொழியாய்ச் செய்தான்!!
இளங்கோ என்பவன் பின்வந்து உதித்து
ஈர்க்கும் சிலம்பெனும் காவியம் படைத்து
பனிக்கட்டிக் கண்காட்சி (ICE CASTLES)

வீட்டின் முன்புறத்தில் செலுத்து வழியில் படிந்திருக்கும் பனிக்குவியலை அகற்றுபவர்களுக்கு பனிக்காலம் ஒரு பெரிய தண்டனைக் காலமாகவே படும். எப்போது இந்தப் பனிப்பொழிவு நிற்கும் எனக் காத்திருப்பார்கள். ஆனால் பிரெண்ட் கிரிஸ்டென்ஸனுக்கு (Brent Christensen) பனிப்பொழிவு ஒரு வரப்பிரசாதமாகப் படுகின்றது. ‘சிலை என்றால் அது சிலை; வெறும் கல்லென்றால் அது கல் தான்’ எனும் வழக்குக்கு ஏற்றாற் போல், நமக்கெல்லாம் சுமையாகத் தோன்றும் பனிக்குவியல் பிரெண்டுக்கு பணக் குவியலாகக் காட்சியளித்துள்ளது. பொதுவாக பனிக்காலம் என்பது மந்தமான, சோம்பலூட்டும் காலம். […]
மினசோட்டா வசந்தகாலம்

மினசோட்டா மாநிலத்தில வசந்தகாலத்தின் ஆரம்பத்தை செவ்வோக் (Red Oak) மரமானது கடந்த வருட வளரும் பருவகாலத்திலிருந்து இவ்வளவு காலமும் தக்க வைத்திருந்த காய்ந்த மண்ணிற இலைகளை ஒவ்வொன்றாக வெண்பனித்தரையில் உதிர்ப்பது மூலம் அவதானிக்கலாம். அதே சமயம் பண்டைய எரிமலை உருக்கி உறைந்த செங்கரும் பாறைகளானவை வசந்த கால ஆரம்ப வெட்பதட்ப உறைபனி உருகலினால் மெதுவாகப் பாறைகளில் இருக்கும் பாசிகளும், லைக்கன்களும் விழித்து எழும். இதே சமயம் பீவர் (Beaver) உயிரினமானது உறைபனியின் உள்ளே தமது உலர்ந்த மரம், […]