Archive for February, 2013
பதிப்புரை

உச்சத்தில் உறைபனிக்குளிர் எம்மை ஊடுருவும் தருணத்திலும் வருகிறது வசந்தகால ஆரம்பங்கள். இதை வரவேற்கின்றன நம்மாநிலத்தில் மலரும் பனிப்பூக்கள். வெண் பனியின் விரிதொடரில் வியப்பான வண்ணங்களில் வளமாக விளைகின்றன ரோக்கஸ் பூக்கள். இதே போன்று தரமான தகவல்களுடன் தங்கள் கைகளில் துளிர்கிறது தமிழ் இதழ் பனிப்பூக்கள்.
மாந்தை – Mantai

பண்டைய தமிழ்த் துறைமுகம் மாந்தை இலங்கை அகழ்வாராய்ச்சி ஆய்வுகளில் மாந்தை அல்லது மாந்தோட்டை மணல்மேடு தமிழ் மக்களின் சரித்திரத்தைப் பொறுத்தளவில் முக்கியத்துவம் வகிக்கின்றது. மாந்தையானது சைவர்கள் போற்றும் திருக்கேதீச்சரம் ஈசன் தலத்தை ஒற்றியும் அமைந்தது எனலாம். திருக்கேதீச்சரம் ஆனது திரு+கேது+ஈச்சரம் என்னும் தமிழ் சொற்களின் ஒன்றிணைப்பே ஆகும். மாந்தை இலங்கை நாட்டின் வடமேற்கில் தலை மன்னாரிற்கு நேர்ப்புறமாக கடற்கரையோரத்திலுள்ள ஒரு நகரம். . இதன் பிரதான அம்சம், 22 அடிகளுக்கு (6.7 மீட்டர்) மேல் கடலில் இருந்து […]