Archive for February, 2014
எசப்பாட்டு – காதல்

காதல்.. கனவில் நினைந்து கண்ணில் மலர்ந்து கருத்தில் கலந்து கல்லறைவரை தொடர்ந்தது… காதல்… கன்னியை நினைந்து கருத்துடன் மணந்து கட்டிலில் இணைந்து கருக்களாய் மலர்ந்தது… காதல் களவினில் மலர்ந்து கவிபல புனைந்து கண்ணியம் கலந்து கல்யாணத்தில் முடிந்தது…. -வெ. மதுசூதனன் ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~ காதல் கண்ணில் கனிந்து கருத்தில் கனத்து கானமாய் இசைந்து கானலாய் கரைந்தது. காதல் கனவில் மலர்ந்து காஞ்சனமாய் கவர்ந்து காந்தமாய் இழுத்து காலையில் மறைந்தது. காதல் காவியமாய் துளிர்த்து காமத்தில் எரிந்து காலமாகி பொய்த்து […]
தவிக்கும் தமிழன்

சனிக்கிழமைக் காலை ஜன்னலின் வழியே அத்துமீறி உள்ளே நுழைந்த சூரியன் முகத்தில் ஒளிர்வதால், தூக்கத்திலிருந்து எழுந்தேன். இரவில் தூங்கப் போவதற்குமுன் கர்ட்டெய்னை மூடாமல் படுத்ததற்காக என்னையே திட்டிக் கொண்டு, சோம்பல் முறித்துக் கொண்டே படுக்கையை விட்டு எழுந்து உட்கார்ந்தேன். இடதுபுறம் திரும்பிப் பார்த்தால், நமது சகதர்மிணி கண்ணயர்ந்து தூங்கிக் கொண்டிருக்கிறாள், பாவம் நேற்று இரவு வீட்டிற்கு வந்திருந்த விருந்தினர்களுக்காக உணவு சமைத்து விருந்துபசாரம் செய்து கிட்டத்தட்ட இரண்டு மணிவரை விழித்திருந்த களைப்பில் தூங்குகிறாள்.. தூங்கட்டும் என விட்டுவிட்டு, […]
கண்ணதாசனின் தத்துவமும் காதலும் – பகுதி 4

கனிபோன்ற காதல் காதலைப் பாடுவதில் தனக்கு எவரும் நிகரில்லாத தனிப்பெருமை பெறுகிறார் கண்ணதாசன். உலகத்து உயிர்கள் அனைத்திலும் நிறைந்து நிற்கின்ற இயற்கையுணர்வு காதல். கவிதைகளுக்கும், கலைகளுக்கும் வற்றாத ஊற்றாக இருந்து வளம்தருவது காதல். காதல் கொண்ட ஒரு மனம் தனது துணையைப் பற்றி காணும் கனவுகளும், கற்பனைகளும் எத்தனை எத்தனை? இது போன்ற கற்பனைகள் தனது காதலையும், தான் காதலிப்பவரையும் எப்படியெல்லாம் வர்ணித்து அழகு செய்கின்றன? காதல் கொண்ட சாமானியனுக்கே கவித்துவம் பிறக்குமென்றால், கவியரசரின் புலமையையும், கற்பனையையும் […]
காதலர் தினம்

1996 ஆம் ஆண்டு, ஃபிப்ரவரித் திங்கள் 14 ஆம் திகதி மாலை சுமார் ஆறு மணி.. அண்ணா சதுக்கம் பேருந்து நிலையம். நிறைமாதக் கர்ப்பிணிப் பெண்ணின் வயிறு போல் ஃபுட்போர்டு முழுவதும் பிதுங்கி இருந்த கும்பலுடன் அம்பத்தூரிலிருந்து புறப்பட்டு வந்த 20C பல்லவன் பேருந்து வந்து நிற்கிறது. முதல் நிறுத்தத்திலேயே ஏறியிருந்ததால் நல்ல வசதியான இருக்கையில் ஒருவருடன் ஒருவர் உரசிக் கொண்டு அமர்ந்திருந்தனர் கணேஷும், லக்ஷ்மியும். பொறியியற் கல்லூரி முடித்து இரண்டு வருடங்களாகச் சென்னையிலேயே வேலை செய்து […]
பாலு மகேந்திரா – ஜோ தேவ் ஆனந்தனின் பார்வையில்

எங்களால் மகேந்திரன் என்று பாசத்துடன் அழைக்கப்பட்ட பாலு மகேந்திரா, யாழ்ப்பாணக் கல்லூரியின் மாணவர். அந்தக் கல்லூரியிலுள்ள விடுதியில் தங்கிப் படித்து வந்தார். அக்காலத்தில், என்னுடன் பணி செய்த தேவு குலதுங்கவும் நானும் சேர்ந்து அறுபதுகளில் தயாரித்த ”நீயும் நானும்” என்ற நாடகத்தில் ஒரு கதாபாத்திரத்தில் பாலு மகேந்திரா நடித்திருந்தார். அவர் மிகச் சிறந்த நடிகர் மற்றும் பாடகர், தனது நடிப்பாற்றலால் ரசிகர்களைக் கட்டிப் போட்டிருந்தார் அவர். ஒரு சில வருடங்களுக்குப் பிறகு, கொழும்பு வெள்ளவத்தை கடற்கரைக்கருகே, புகைவண்டி […]
மின்னசோட்டாவில் நீயா? நானா?

தமிழகத் தொலைக்காட்சிகளில் பல்வேறு சினிமாத் தொடர்பான நிகழ்ச்சிகள் பரவலாகப் பார்க்கப் படுவதுடன், வியாபார விளம்பரங்களை அதிகம் குவிப்பதும் அவைதான். தொலைக்காட்சி நிறுவனங்கள் திரைப்படத்துறையின் ஒரு நீட்டிப்பாகத்தான் தமிழகத்தில் செயல்பாட்டில் உள்ளது, மீறிப்போனால் குடும்ப உறவுகளை நாசமாக்கும் நெடுந்தொடர்கள் அவை கற்றுக்கொடுப்பதெல்லாம் ஆணவத்தையும், பழிவாங்குதலையும் தான். இந்தச் சூழ்நிலையில் கடந்த ஆறாண்டுகளுக்கும் மேலாகக் கருத்து மோதல் நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் மக்களைச் சிந்திக்க வைக்கக்கூடிய நிகழ்ச்சிதான் விஜய் தொலைக்காட்சியில் வரும் நீயா? நானா? என்கிற விவாத நிகழ்ச்சி. எந்த […]
ஒரு அபலையின் அழுகுரல்

உதைபட்ட பந்தாக உருண்டோட
உறவினரால் நிலைகுலைந்து போனேன்!
எதைச் சொல்லி நான் அழுவேன் இன்று
வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தேன்
என்னை விட்டுச் சென்றவர் வருவார் என்று
வாடிய என் முகத்தில்
கண்ணீர் கூட இல்லை அழுதுவிட
சிறுமி – பெரியவர்

அண்ட ஒரு இடமில்லையோ?
அன்னமிடக் கையில்லையோ ?
ஆதரிக்க உறவில்லையோ?
ஆதரவே சிறு பலகை தானோ?
தாத்தா – பெண்

இயற்கை அழகை எல்லாம்
அள்ளிப் பருகி – ஒளி இழந்து
இன்று அமைதியாய்
அடங்கிப் போனது விழிகள்!
நம்பிக்கை

உனக்கும் எனக்கும் ஒரே ஊர்
அமெரிக்கா
உனக்கும் எனக்கும் ஒரே மொழி
ஆங்கிலம்
உனக்கும் எனக்கும் ஒரே ஆடை
கந்தலாடை