Archive for February, 2014
முறிந்த மொட்டுக்கள்

தெருக் கோடியில் அட்டை பிடித்து நிற்கிறார் மூத்தவர்
நரைத் தாடியில் சட்டைக் கிழிந்து நிற்கிறார் மூத்தவர்
இளம் வயதில் படை வீரனாய் ஓட்டினார் கப்பலை
இன்று வீதியில் கடும் வெய்யிலில் நிற்கிறார் மூத்தவர்
வறுமை வசந்தமாகிறது!

தொலைந்த நாட்களுக்குக் கிடைத்தபரிசுதான்
தொங்கிப் போன தாடியும்
சுருங்கிப் போன சட்டையும்
மனம் இருந்திருந்தால்
சுயமானத்தை இழந்திருக்க மாட்டேன்
இன்னும் என் கண்ணில் உள்ளது
ஒளி
வாழ்த்து மடல் – தரணி

மினசோட்டாவில் உள்ள பனிப்பூக்கள் தமிழ்நாட்டில் உள்ள வள்ளுவர் கலைக்கல்லூரியில் கலைப்பூக்களாக பூத்துக் குலுங்குகிறது. இணையதளத்தில் வள்ளுவர் கல்லூரிக்கு வாய்ப்புகளை வழங்கும் பனிப்பூக்களுக்கு இதயப்பூர்வமான நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். பனிப்பூக்கள் இணையதளத்தில் வள்ளுவருக்கு எப்படி மாணவர்களின் திறமையை ஊக்குவிக்கிறது என்பதனை உங்கள் முன் பகிர்ந்து கொள்கிறோம். பனிப்பூக்களானது நாணயத்தின் இருபுறமும் உள்ளது போல் செயல்படுகிறது. ஒருபுறம் கலை, கட்டுரை, கவிதை, சிந்தனை போன்ற வளரும் குழந்தைகளின் திறமைகளை ஊக்குவிக்கிறது. மறுபுறம் அன்பு, அரவணைப்பு என கட்டித் தழுவுகிறது. அமெரிக்காவில் உள்ள […]
பசி! வீடில்லேன்! (Hungry! Homeless!)

வறுமை எந்தப் பருவத்தும் வந்து சேரும்! – அந்த
வறுமை, ஆண் பெண்ணென்று பார்ப்ப தில்லை!
பெருமையெலாம் பிரிந்தேகும்! நாணம் போகும்! – பெற்ற
பெருங்கல்விப் பட்டமெலாம் பின்னுக்(கு) ஏகும்!.
எம்.ஜி.ஆர்.

தமிழ்த்திரை உலகிலும், பின்னர் அரசியலிலும் சகாப்தம் படைத்தவர் எம்.ஜி.ஆர். மருதூர் கோபாலமேனன் ராமச்சந்திரன் எனும் பெயரே, தமிழகத்தின் லட்சக்கணக்கான மக்கள் மட்டுமின்றி, உலகெங்கும் உள்ள பலர் மனதில் எம்.ஜி. ஆர். எனும் மூன்று எழுத்துக்களாக நிலை பெற்று விட்டது. இவரது பெற்றோர் கோபாலமேனன், சத்யபாமா. கோபாலமேனன் அரூர், திருச்சூர், கரூர், எர்ணாகுளம் முதலிய ஊர்களில் மாஜிஸ்திரேட்டாகப் பணியாற்றி வந்தார். அநீதிக்கு துணை போக மறுத்ததால் பல இடங்களுக்கு மாற்றல் செய்யப்பட்டு இறுதியில் அவர் தனது வேலையை துறந்து குடும்பத்துடன் இலங்கை சென்றார். […]
பாலுமகேந்திரா ஒரு சகாப்தம்

1939 ஆம் ஆண்டு மே மாதம் 19 ஆம் நாள் ஈழத் திருநாட்டின் மீன்பாடும் தேனாடாம் மட்டக்களப்பில் “அமிர்தகழி” என்ற சிற்றூரில் பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் பாலநாதன் மகேந்திரன் என்பதாகும். சிறு வயது முதலே படப்பிடிப்பில் ஆர்வம் மிக்க இவர் லண்டனில் தன்னுடைய இளநிலைக் கல்வி படிப்பினை முடித்து பின்னர் திரைப்பட ஒளிப்பதிவுக்கலை பற்றிய படிப்பில் 1971ல் தங்கப்பதக்கம் பெற்றார். தனது பட்டப் பின் படிப்புக்காக முழுவதும் இயற்கை ஒளியைக் கொண்டு வடிவமைத்த திரைப்படமே […]