\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for March, 2014

அதித்தி ராவ்

அதித்தி ராவ்

Continue Reading »

நிறம் தீட்டுங்கள்

நிறம் தீட்டுங்கள்

Continue Reading »

எரிபொருட்கல சாலையூர்திகள் (Fuel-Cell Vehicles – FCVs) மெய்மை

எரிபொருட்கல சாலையூர்திகள் (Fuel-Cell Vehicles – FCVs) மெய்மை

தற்காலமாகிய இருபத்தியோராம் நூற்றாண்டின் இரண்டாவது தசாப்தத்தில் பயணியூர்திகள் எரிபொருட்கலங்களை வைத்து ஓடும் என்றால் யாவரும் சகசமாக நம்பக்கூடிய விடயம். காரணம் நாம் ஏற்கனவே சாலையில் புதிய ஃபோட் (Ford) , டொயோட்டா (Toyota), ஹொண்டா (Honda) போன்ற உற்பத்தியாளர்களிடம் இருந்து கலப்பின (hybrid) வாகனங்கள் பாதி நில எண்ணெய் பாதி எரிபொருட்சேமிப்புக்கலங்கள் கூடிய வாகனங்களை ஓட்டுவதும், இல்லை தெரிந்தவர்கள் ஓட்டுவதை அவதானித்துள்ளமையே. எரிபொருட்கலங்கள் சாதாரண விடயமாக தற்போதைய தலைமுறை நினைப்பினும் இந்த முன்னேற்றம் ஏறத்தாழ நூறாண்டுகளுக்கு மேல் […]

Continue Reading »

எசப்பாட்டு – நடிகன்

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 4 Comments
எசப்பாட்டு – நடிகன்

எவனோ கதையெழுத எவனோ படமெடுக்க எவனோ கவியெழுத எவனோ இசையமைக்க எவனோ பாடிவைக்க எவனோ ஆடவைக்க எவனோ எழில்கொடுக்க எவனோ உடையமைக்க

Continue Reading »

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-5

ஈழத் தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-5

(பகுதி 4) இன-நிறவெறித் தாக்கம் தமிழர்கள் புலம்பெயர்ந்து சென்ற அனேகமான நாடுகள் வெள்ளையர்களினால் ஆளப்படுபவை. இந்நிலையில் இன-நிற அடிப்படையிலான பாகுபாடுகள், அதனால் வெளிப்படுகின்ற தாழ்வுச் சிக்கல் மற்றும் அந்நிய உணர்வு முதலானவையும் புலம்பெயர்ந்தவர்களின் கவிதைகளில் பரவலாகப் பேசப்பட்டன. “திரைகடல் ஓடித் தம்முயிர் பேணத் திரிந்தவர் தமக்கோ எங்கணும் அவலம் கரியவர் அயலர் எனவசை கேட்போர் கவலைகள் நீயும் உணர்வையோ நாராய்”8 “கற்றுக்கொள் கறுப்பு நாயே சாகப் பிறந்த பன்றியே தொழுவத்தை விட்டு ஏன் வந்தாய் வெளியே? கறுப்பர் […]

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம்– பகுதி 4

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம்– பகுதி 4

பகுதி 3  முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. ஒரு மர்ம நபர் மருத்துவமனையில் போலிஸ் […]

Continue Reading »

அந்நியன்

Filed in இலக்கியம், கதை by on March 23, 2014 0 Comments
அந்நியன்

க்ளோவர் ஃபீல்ட் நிலையத்திலிருந்து பேருந்து மெதுவாகக் கிளம்பி நகர்ந்தது. இந்துவின் கண்கள் பிரேம் எங்காவது தென்படுகிறானா என்று தேடி அலைந்தது. யாரோ ஓடி வருவதைப் பின் கண்ணாடி வழியாக பார்த்து விட்டு ஓட்டுனர் வண்டியை நிறுத்தியபோது,. அவனாக இருக்குமோ என்ற ஆதங்கத்தில் அவசரமாகத் திரும்பிப் பார்த்தாள். வேறு யாரோ ஒரு பெண் அவசரமாக ஓடி வந்து “தேங்க்ஸ் ..ஜோ …” என்று சொல்லியவாறு ஏறிக் கொள்ள பேருந்து நகர்ந்து, பிரதான சாலையில் திரும்பி வேகமெடுத்தது. காலை ஏழரை […]

Continue Reading »

கண்ணதாசனின் கவிதைகள் – பகுதி 5

கண்ணதாசனின் கவிதைகள் – பகுதி 5

தென்றலான காதல் சில காலங்களுக்கு முன்பு வரை காதலுக்கென சில அடிப்படைக் கூறுகள் இருந்தன. ஆசை, பயம், நாணம், வெட்கம், பிரிவு, ஏக்கம், தூது, ஊடல், துயர், விரகம், காமம் போன்றவை காதலின் கூறுகளில் சில. பழங்கால இலக்கியங்களில் இந்த தலைப்புகளில் பல பாடல்களைக் காண முடியும். காலப்போக்கில், விஞ்ஞான வளர்ச்சியால், பிரிவு, ஏக்கம், தூது என்ற கூறுகள் தொலைந்து போக, இயந்திர கதியாகிப் போன உலகில் பயம், நாணம், வெட்கம், துயர் என்பவையும் அமுங்கிப் போய்விட்டன. […]

Continue Reading »

கணவரை இழந்த பெண்ணே

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 2 Comments
கணவரை இழந்த பெண்ணே

வெள்ளைப் புடவையில் வீட்டுக்குள்
வதங்கிக் கிடக்கிறாயே!
வண்ணப் புடைவையில் வானத்தில் நீ
வட்டமிட வேண்டாமா?
அந்நியமாய் வந்தவன்
ஐயோ எனப் போய்விட்டான்

Continue Reading »

தீங்கற்ற வீட்டு விலங்கு

Filed in இலக்கியம், கவிதை by on March 23, 2014 0 Comments
தீங்கற்ற வீட்டு விலங்கு

நான் முதலில் மூச்சு விட ஆரம்பித்த போது
என் தந்தையிடம் கூறினீர்கள்…
“சேமிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது ஐந்து வயதில் கூறினீர்கள்…
“எழுதப் படிக்கப் பழகிக்கொள்” என்று,
எனது பத்து வயதில் கூறினீர்கள்…

Continue Reading »

banner ad
Bottom Sml Ad