Archive for March, 2014
உழைப்பு

ஏர்பூட்டிச் சோறிட்டு உழைப்பின் பெருமையை
உலகிற்கு உணர்த்தினான் மனிதன் அன்று…
நீரூற்றக் கூட நேரமின்றி இயந்திரத்தின்
உதவியை நாடுகிறான் மனிதன் இன்று…
விமானப் பயணம்

விமான நிலையத்தில், கடைசிக் கதவு வரை சென்று, கண்ணாடி வழியாகப் பயணம் செல்லவிருக்கும் நண்பர்கள் விமானத்தின் உள்ளே ஏறி அமர்ந்து விட்டனரா எனப் பார்த்து, வழியனுப்பிய நாட்கள் நினைவிருக்கிறதா? வயதான பெற்றோர்கள் பயணம் செய்கிறார்கள் என்றால், விமானத்தின் உள்வரை சென்று அமர்த்திய அனுபவம் கூட ஒரு சில முறை ஏற்பட்டதுண்டு. ஏதோ இரண்டு மூன்று தலைமுறைக்கு முன்னர் நிகழ்ந்த நிகழ்ச்சிகளல்ல இவையெல்லாம், சரியாக ஒரு பதிமூன்று வருடங்களுக்கு முன்னர்வரை நிலைமை இப்படித்தான் இருந்தது. இப்பொழுது விமான நிலைய […]
விதி

விவரம்பல அறிந்தவரும் விழுந்திடும் காரணம்
விதியென்ற ஒன்றின் விந்தையான செயலாம்
விபரீதம் பலபுரியும் விதியதன் செய்கை
விளங்கியது இல்லையென விரக்தியில் சொல்வர்
விலகித் தெளிந்து விளக்கம் உணர்ந்த
விடிவெள்ளி தர்மனும் விரும்பிச் சூதாடினனாம்!
வயற்காற்று (பாகம் – 01)

“திக்கற்றோருக்குத் தெய்வமே துணை… “ “முருகா எங்களின்ரை கஷ்ரமெல்லாம் சூரியனைக் கண்ட பனியாய் விலகிப் போக வேணுமப்பா கடவுளே உன்னை விட்டால்எங்களுக்கு ஆரப்பா துணை” செண்பகம் கண்கள் குளமாகிக் கலங்கி அழுது கொண்டிருந்தாள். செண்பகத்தின் கண்கள் சிவக்காத நாட்களே இல்லை. உண்மையில் வெண்பகப் பறவை போல காலம் முழுவதுமே கண்கள் சிவப்பாக இருந்து விடுவாளோ என்ற பயம் அவளுக்குள். தன்னுடைய குடும்பக் குறைகளை அவள் வேறு யாரிடம் தான் சொல்வாள். அல்லது யார்தான் இத்தனை பொறுமையுடன் அதனைக் […]
யாழ் தமிழ் – சென்னைத் தமிழ் (பாகம் – 1)

ஈழத்திலும் தமிழ் நாட்டிலும் பேசப்படும் மொழி தமிழாக இருப்பினும் இரண்டுக்கும் இடையில் பெரியளவிலான உச்சரிப்பு வேறுபாட்டினை அவதானிக்கலாம். ஈழத்திலும் பிரதேசத்துக்குப் பிரதேசம் இந்த மாறுதல் உள்ளது. அதேபோல் தமிழகத்திலும் உண்டு. ஆனால் ஈழத் தமிழுக்கும் தமிழகத் தமிழுக்கும் இடையில் பல சொற்கள் வேறுபட்டு வழங்கக் காணலாம். எனக்கு நன்கு பரிச்சயமான யாழ்ப்பாணத் தமிழுக்கும், சென்னையில் வசித்த காலத்தில் பேசிய சென்னைத் தமிழுக்கும் இடையிலான சில சொல் வேறுபாடுகளைப் புரிதல் விரும்பி இங்கு பதிவிலிடுகிறேன். ”மொழி என்பது ஒன்றை […]
மேய்ப்பனை இழந்த மந்தைகள்

காட்டுமிராண்டித்தனமாகவும் நயவஞ்சகமாகவும்
எம் முன்னோர்கள் தோற்கடிக்கப்பட்ட பின்னர்
அனைத்துமே மாறிப்போனது.
மக்கள் அனைவரும்
கொடிய விலங்குகளிடையே
சிறைப்பட்டுக் கொண்டனர்.
முருங்கைக்காய்க் கறி

நாட்டுப் புறமாயிருந்தால் என்ன, நகரப் புறமாயிருந்தால் என்ன முருங்கையின் மகிமையைத் தமிழர் அகத்திய குணப் பாடம் தொட்டு தற்காலம் வரை போற்றி மகிழுவர். தற்காலத்தில் உணவகங்களில் சாம்பாரில் மிதக்கும் ஒரு துண்டு காய்கறியாகக் காணப்படினும் அது முருங்கையின் தனிப்பட்ட சுவையை, மகிமையை ஒருபோதும் தரமாட்டாது. “செறிமந்தம் வெப்பந் தெறிக்குந் தலைநோய் வெறிமூர்ச்சை கண்ணோய் விலகும் – மறமே நெருங்கையிலை யொத்தவிழி நேரிழையே நல்ல முருங்கையிலையை மொழி” – என்கிறது அகத்தியர் குணபாடம் தமிழகத்திலும் ஈழத்திலும் சுண்ணாம்புக் கற்பாறை […]
முத்தான பழைய திரைப்படங்கள் மற்றும் குறும் படங்கள் – 1

தமிழில் இப்பொழுது வாரத்திற்கு நான்கு ஐந்து திரைப்படங்கள் வெளி வருகின்றன. அதில் முக்காவாசி பார்ப்பதற்குச் சகிப்பதில்லை.. நல்ல தரமான படங்களும் வருகின்றன மறுப்பதற்கு இல்லை. சில தரமான திரைப்படங்களும் வணிக ரீதியாக தோற்றுப் போகின்றன. ஒரு பொதுப் பார்வையாளனாகப் பார்க்கும் போது, நல்ல படம் எடுக்கத் தெரியாமல் பணத்தைத் தண்டம் செய்கின்றார்கள் என்று தோன்றுகிறது. அதே சமயம் மிகத் தரமான படங்கள் எடுத்து பண விரையம் செய்பவர்களும் உண்டு. நம்முடைய படைப்பாளிகளின் தரமும் உயர்த்தப் பட வேண்டும், […]
தமிழனென்று சொல்லடா!! தலை நிமிர்ந்து நில்லடா!!!

”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த மொழி..” – தமிழ் மொழி ”கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்த குடி..” – தமிழ்க் குடி.. காலங்கலாமாய் பலரும் மேடையேறி முழங்கும் வசனம் இது. கல் மற்றும் மண் தோன்றுவதற்கு முன்னரே தோன்றிய மொழி தமிழ் மொழியாம். உருவகமாய்க் கூறப்பட்ட இதன் அர்த்தம், தமிழ் மொழியும், தமிழ் இனமும் மிகவும் பழமையானது என்பதே. உலகத்தின் தொன்மையான மொழிகளில் ஒன்று என்பதை […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 11

அத்தியாயம் 10 செல்ல இங்கே சொடுக்கவும் போன அத்தியாயத்தை எழுதி முடித்த பொழுது நான் தாய்லாந்தில் பேசப்படும் “தாய்” மொழி பற்றி பார்க்கலாம் என்று முடித்திருந்தேன். அதை முடிச்சதுக்கு அப்புறம் நான்கு ஐந்து நாட்களுக்கு எனக்கு தூக்கமே வரலை. தாய்லாந்து என்ற வார்த்தையில ஒரு பாதியான ”தாய்” நல்ல தமிழ்ல இருப்பதாகவும் மற்றொரு பாதி லாந்து(land) என்ற வார்த்தை ஆங்கிலத்தில் இருப்பதாகவும் பட்டது. எனக்கு அப்படி இருப்பதற்கான சாத்திய கூறுகள் குறைவு என்று மட்டும் பட்டது. இதுவும் […]