Archive for March, 2014
புகைத்தல் மது அருந்துவதையும் தூண்டுவிக்குமா?

நிக்கொட்டீன் (Nicotine) போதைப்பொருளானது புகைத்தலின் போது உட்கொள்ளப்படும் போதைப்பொருளாகும். இது மன அழுத்தம், உளைச்சலை உண்டு பண்ணும் உடல் உட்சுரப்பிகளில் (Hormones) உடன் கலந்து மூளையின் இரசாயன அமைப்பை மாற்றி மதுபானம் அருந்துவதை ஊக்குவிக்கிறது. தலைப்புச் செய்தி – புகைப்பிடித்தல் மதுபானத்தையும் அருந்தத்தூண்டும் என்று உறுதியாகக் கண்டுபிடித்துள்ளனர். நவீன மயமான இருப்பத்தியோராம் நூற்றாண்டில் மனித வர்க்கம் புதுமை பலவற்றைச் சாதிப்பினும் சுகாதார ரீதியில் பார்க்கும் போது பழமையான சில கடைப்பிடிப்புக்களில் இருந்து விடுபடவும் தொடர்ந்தும் பாடுபடுகிறது எனலாம். […]
பிள்ளைக் கனி அமுதே

பள்ளி வாசலில் இருந்து வண்டியை எடுத்த சௌமியாவிற்க்கு மனம் ஒரு நிலையில் இல்லை. அலுவலக வேலைக்கு நேரம் ஆகிற அவசரத்தில் வேறு வழி இல்லாமல் கிளம்பினாள். வண்டி ஒட்டியபடி தொலைபேசியில் இந்தியா எண்ணை அழுத்தினாள். மறுமுனையில் எடுத்தது அவளது தம்பி அரவிந்த், “டேய் அரவிந்த் எப்படிடா இருக்க?” “சொல்லு சௌமி இங்க எல்லோரும் நல்ல இருக்கோம். குட்டிப் பையன் இக்ஷ்வாக் என்ன பண்றான்?” “ம். அவன் இருக்கானே, சரியான வாலு. இப்பதான் ஸ்கூல்ல விட்டுட்டு கிளம்பினேன்.” “சின்னப் […]
பாமா ராஜன்

சங்கமம் 2014 தெருக்கூத்தின் உடை வடிவமைப்பாளர் மினசோட்டாத் தமிழ் சங்கம் நடத்திய சங்கம் 2014 ஆம் ஆண்டு நிகழ்ச்சியில மூவேந்தர் கலைக்குழாம் நடத்திய தெருக்கூத்து நிகழ்சியின் உடை வடிவமைப்பாளர் திருமதி பாமா ராஜன் அவர்களிடம் தொலைபேசி வாயிலாக ஒரு பேட்டிக் கண்டோம். அவர் வடிவமைத்திருந்த ஆடைகள் அந்த நிகழ்ச்சியின் தரத்தை ஒருபடி அதிகரித்துக் காட்டியது என்று சொன்னால் அது மிகையாகாது. மினசோட்டாவில் கிடைக்கின்ற பொருட்களை வைத்துக்கொண்டு நம் பாரம்பரியம் மாறாமல் வடிவமைத்திருந்த விதம் மிக அருமை. கேள்வி […]
தொலைத்து விட்ட நாட்கள்

ஆடித்திரிந்த வண்ணத்துப் பூச்சி
அழகாய் விரித்த இறகினில்
அடையாய்ப் பொழிந்த மழையிலும்
அழியா திருந்த ஓவியத்தில்
அகலா திருந்த மனம் ….
ஒரு சகாப்தத்தின் முடிவு (கே.எஸ்.பாலச்சந்திரன் ஒரு பார்வை)

ஒவ்வொரு காலகட்டத்திலும் அதன் தேவை கருதி ஒருவன் உருவாகுகிறான். தனது உறவுகள், சூழல் என்பவற்றிலிருந்து வேறுபட்டு ஒரு இலட்சியத்தை நோக்கி ஒரு புதிய பாதையில் பயணிக்கின்றான்.அப்படி உருவான ஒரு அற்புதக் கலைஞன்தான் கே .எஸ் .பாலச்சந்திரன் என்ற சமூகப் போராளி .1950 க்கு பின் ஆங்கிலப் புலமை பெற்ற ஒரு தலைமுறை உரிமை வேண்டி தமிழர்களுக்கும் தமிழுக்குமாகப் போராடியது . தங்களின் அரைகுறை ஆங்கிலத்தை வைத்துக் கொண்டு இன்னொரு கூட்டம் மக்களைப் படாதபாடு படுத்தியது .மக்களோடு நேரடியாகத் […]
இதுவும் ஒரு அஸ்வமேதம்

சுப்பு ஐயர் செத்துப்போனது உங்களுக்கெல்லாம் தெரிந்திருக்கும். நல்ல மனுஷன். ஒரு ஈ, எறும்புக்குக் கூடக் கெடுதல் நினைக்காதவர். காசு பணத்தால் அவரால் உதவ முடியாது. ஆனால் ஆரோக்கியம் இடம் கொடுத்தாலும் கொடுக்காவிட்டாலும் உடலால் அடுத்தவர்களுக்கு உதவி செய்வதில் முதலில் நிற்பார். வசதி இல்லாமலோ அல்லது அனாதையாக யாராவது செத்துப் போனால் முதல் தகவல் சுப்பு ஐயருக்குத்தான் போகும். சடங்குகள், சவசம்ஸ்காரம் ஆகியவைகளை முன்னிருந்து நடத்துவார். ஊர்க்குக் கோடியில் ஒரு சாவடி இருக்கும். வழிப்போக்கர்கள், ஏழைகள், பிச்சைக் காரர்கள் […]
செயிண்ட் பாட்ரிக்ஸ் தினம்

நம் ஊரில் ரோஸ் நிற உடையணிந்து எவரேனும் சென்றால், ‘இப்படியா கண்ணைப் பறிக்கிற மாதிரி உடையணிவாய்’ என்று கிண்டலடிப்போம். ஆனால் ஊரில் முக்கால்வாசி மனிதர்கள் ‘பச்சை கலரு ஜிங்குச்சான்னு’ உடை மட்டுமல்லாது தொப்பி, கண்ணாடி, கழுத்து மாலை, செருப்பு என அனைத்தும் பச்சை நிறத்தில் அணிந்து வந்தால்? அமெரிக்கா வந்த புதிதில் இதைப் பார்த்துவிட்டு, எனக்கு ஒரு நாற்பத்தியிரண்டு நாள் முன்னர் அமெரிக்கா வந்த நண்பன் கதிரிடம் கேட்க ‘செயிண்ட் பாட்ரிக்ஸ் அப்படின்ற வெள்ளைக்கார தொர நடத்தற […]