\n"; } ?>
Top Ad
banner ad

Archive for September, 2014

தலையங்கம்

Filed in தலையங்கம், முகவுரை by on September 10, 2014 1 Comment
தலையங்கம்

வாசகர்களுக்கு வணக்கம். மினசோட்டாவில் கோடைக் காலம் கிட்டத்தட்ட முடியும் தருவாயை எட்டிக் கொண்டிருக்கிறது. இப்பொழுதுதான் துவங்கியது போலிருந்த கோடைக் காலம், கண் சிமிட்டி முடிப்பதற்குள் முடிவடையும் நிலையை எட்டிவிட்டதாய் அனைவரும் உணர்கின்றோம். வாழ்க்கைச் சக்கரம் மிக வேகமாக உருண்டோடிக் கொண்டிருக்கிறது என்பதை உணர்த்துவதாகவே இது அமைகிறது. பொய்யாமொழிப் புலவன் கூறியது இதுவே; நாளென ஒன்றுபோற் காட்டி உயிரீரும் வாள துணர்வார்ப் பெறின். கண்ணுக்குத் தெரியாத காலம் என்பது ஒரு நாள் போலக் காட்டி உயிரினை அறுக்கும் வாளாகும், […]

Continue Reading »

பயணக் கட்டுரை

Filed in இலக்கியம், கட்டுரை by on September 10, 2014 6 Comments
பயணக் கட்டுரை

சிறு வயதில் ‘கற்கண்டு’ பத்திரிகையில் லேனா தமிழ் வாணனின் பயணக் கட்டுரையைப் படித்து ரசித்ததுண்டு. பல சமயங்களில் அவரின் பயணக் குறிப்பைப் படிக்கையில் இதுபோன்ற அனுபவங்கள் நமக்கும் வருவது எந்நாள் என்று நினைத்ததுண்டு. அவரைப் போன்ற அனுபவமோ, பேரோ, புகழோ வந்திராவிடினும் ஒரு சில பயணங்கள் தந்த அனுபங்களைப் பகிரலாமென்ற எண்ண உந்துதலே இந்தக் கட்டுரையின் காரணம். நம் இந்திய நாட்டின் பலங்களில் ஒன்றான அதே சமயத்தில் பலவீனங்களிலும் ஒன்றானது உறவுகளுக்கு இடையேயான நெருக்கம். இந்த விதத்தில் […]

Continue Reading »

பெற்றோர்க்காக!!

Filed in இலக்கியம், கவிதை by on September 10, 2014 0 Comments
பெற்றோர்க்காக!!

அன்பில் எனை ஈன்றெடுத்து
ஆசையாய் வளர்த்தெடுத்து

இம்மையில் மறுமை சேர்த்து
ஈகையின் பெருமை வார்த்து

Continue Reading »

இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6

Filed in இலக்கியம், கதை by on September 10, 2014 0 Comments
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 6

முன்கதைச் சுருக்கம்:  (பகுதி 5) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு […]

Continue Reading »

உலகச் செம்மொழி – அத்தியாயம் 14

உலகச் செம்மொழி – அத்தியாயம் 14

அத்தியாயம் 13 செல்ல இங்கே சொடுக்கவும் இப்படி ஆதி மனிதன் ஆதாம் ஏவாள் முதல் நோவா வரை தமிழ் மூலப் பெயர்களையே கொண்டுள்ளனர். தமிழைக் கடவுளாகப் போற்றும் மரபு நம்முடையது. ஒரு சில ஆண்டுகளுக்கு முன்பு திரு கலைஞர் கருணாநிதியின் மகள் கனிமொழி ஒரு பட்டிமன்றத்திற்கு வந்திருந்தார். நடுவராகக் கவிப்பேரரசு வைரமுத்து அமர்ந்திருந்தார்.. கனிமொழியைப் பேச அழைக்கும் போது ’தமிழ் அனைவருக்கும் தாய் என்றால் இவருக்கு மட்டும் தந்தை’ என்று கலைஞர் கருணாநிதியைத் தமிழாக உருவகித்தார். தமிழ் […]

Continue Reading »

மனதில் உறுதி வேண்டும்

Filed in இலக்கியம், கதை by on September 10, 2014 0 Comments
மனதில் உறுதி வேண்டும்

மணி என்ன தான் இருக்கும் என்று பக்கத்தில் இருக்கும் டீக் கடையின் சுவர்க் கடிகாரத்தில் பார்த்தாள் கனகா . 11.30 மணி ஆகியிருந்தது . கிட்டத் தட்ட 2 மணி நேரமாய் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்து கால் கடுத்துப்போய் இருந்தது. டீக் கடையில் நல்ல கூட்டம். நிறைய ஆண்கள், அரட்டை அடித்த படியும், பேப்பர் படித்த படியும் நின்று இருந்தார்கள். சிகரெட் புகை வேறு மூச்சு முட்டுவதைப் போல இருந்தது. என்னடா , இதோ வரேன்னு போன […]

Continue Reading »

மினசோட்டா மாநில இலையுதிர்கால இன்ப விழாக்கள்

மினசோட்டா மாநில இலையுதிர்கால இன்ப விழாக்கள்

என்ன? எங்கே? எப்போது? Renaissance Festival மறுமலர்ச்சிப்பண்டிகைஉங்கள் கற்பனையை மாத்திரம் கொண்டு வாருங்கள் ஐரோப்பியப் போர்வீரர்,பழைய ராசா, ராணி வாழ்க்கையைப் பார்த்து மகிழ ! Shakopee சனி,ஞாயிறுAugust 16-Sept 28 Sponsel’s மினசோட்டா அறுவடைப் பண்டிகைபூசணிக்காய்,ஆப்பிள்,சோள வயல் புதிர், வைக்கோல் வண்டிச்சவாரி, குதிரை ஏற்றம், சிறுவர் விளையாடும் ஆட்டுக்குட்டி, பசு, கன்று மான்குட்டி,முயல் போன்றவையுள்ள விலங்குச்சாலை [தாவர போசனம் உண்டு – Vegetarian Food Available] Jordan திங்கள் -வெள்ளி10 மணி – 5 மணி சனி,ஞாயிறுகாலை […]

Continue Reading »

மினசோட்டா மாநில எல்லைக்குள் இருக்கும் பெரும் ஏரிகள்

Filed in இலக்கியம், கட்டுரை by on September 10, 2014 0 Comments
மினசோட்டா மாநில எல்லைக்குள் இருக்கும் பெரும் ஏரிகள்

எமது மாநிலமானது 10,000 க்கும் மேற்பட்ட ஏரிகள் கொண்டு செழிப்புற்றுக் காணப்படும் மாநிலம் என்று பெருமைப்படுவோம். உண்மையில் மாநில வனக்காப்புத் திணைக்களம் (Department of Natural Resouces  – DNR) 2008ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி நமது மாநிலம் 11,842 ஏரிகளை உள்ளடக்கியுள்ளது. எனினும் சில வரலாற்றுப் பத்திரங்கள் ஒரு காலத்தில் 15,291 ஏரிகள் நிலப்பரப்பளவில் 10 ஏக்கர்களிலும் பெரிதாக இருந்துள்ளன என்கின்றன. மினசோட்டா என்ற சொல்லே பூர்வீக வாசிகளால் சூட்டப்பட்ட சொல்லொன்றாகும். மினி Minni என்பது […]

Continue Reading »

மூளையும் நனவு உணர்ச்சியும்

Filed in இலக்கியம், கட்டுரை by on September 10, 2014 0 Comments
மூளையும் நனவு உணர்ச்சியும்

நீங்கள் வீதியீல் ”நடமாடும் பிரேதத்தை”க் (Zombie) கண்டீர்களானால் அது நனவு அற்றது என்று உங்களால் உறுதியாகக் கூறமுடியமா? முடிந்தால் உங்கள் பதில்களை யோசித்தவாறு படிக்க ஆரம்பியுங்கள் இந்தக் கட்டுரையை. தற்போது ஹாலிவுட்டில் இருந்து நமது தமிழ்ச் சினிமாக்களிலும் சரி பல நடமாடும் பிரேதங்கள், குருதி குடிக்கும் வாம்பயர்கள் (vampires) எனக் குரோதமான, திகிலான (Horror Thrillers) படங்கள் வெளிவந்தவாறுள்ளன. அந்தப் படங்களில் எல்லாம் நடமாடும் பிரேதங்களை  ரசிகர்கள்பார்த்து அடையாளம் தெரிந்து கொள்ளத் தயாரிப்பாளர் பின்னிசை, நிறங்கள், நிழல்கள் […]

Continue Reading »

மொகஞ்சதாரோவின் மதுரா

மொகஞ்சதாரோவின் மதுரா

ஒரு ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு காலை அழகிய அல்லிப்பூப் போல மலர்ந்தது. சேவல்கள் கூவின, பறவைகள் பாடின, பசுக்கள் கதறி கன்றுகளை அழைத்தன. ஆகா காலை நேரம் குழந்தைகளும், பெரியவர்களும் இலேசாகச் சோம்பல் முறிந்து எழுந்து கொண்டனர். குட்டி மதுரா தனது தாய் தந்தையினர் எழும்ப முதல் எழுந்துவிட்டாள். அவளும் செங்களுநீர் மொட்டுகள் போல அழகிய மழலை முகமுடையவள். காலையில் குயில் கூவலையும், கதிரவன் செங்கதிர்கள் வீட்டின் மரத்தூண்களினால் ஆன முகட்டுத் துவாரங்களினூடு தனது கட்டிலிற்கு […]

Continue Reading »

ad banner
Bottom Sml Ad