Archive for March, 2015
குறுக்கெழுத்து – பழமொழி

குறுக்கெழுத்துப் புதிரில் ஒளிந்திருக்கும் பழமொழிச் சொற்களைக் கண்டுபிடியுங்கள்: இடமிருந்து வலம் 1 அளவுக்கு மிஞ்சினால் இது நஞ்சாகும். (5) 2 அடி உதவுகிற மாதிரி அண்ணனும் இவனும் உதவ மாட்டார்கள். (3) 3 உறவில் கணக்குப் பார்த்தால் _______________ தான் மிஞ்சும் (4) 6 சும்மா இருந்ததை ஊதிக் கெடுத்தானாம் ஆண்டி. அது என்ன? (3) 7 இப்படி உக்காந்து தின்றால் குன்றும் மாளாதாம். எப்படி? (3) 9 இவன் கணக்கு பார்த்தா உழக்குக் கூட மிஞ்சாதாம். […]
தலையங்கம்

பேரன்புடையீர் வணக்கம். மார்ச் 2015 க்கான இணைய தள இதழ் உங்களின் கணினியில் தவழ்ந்து கொண்டிருக்கும் நேரமிது. இந்த நல்ல நேரத்தில் எங்களின் மைல் கல் குறித்த செய்தியைப் பகிர்ந்து கொள்வதில் பெருமையடைகிறோம். சென்ற ஃபிப்ரவரித் திங்கள் 21 ஆம் திகதியன்று எங்கள் பனிப்பூக்கள் இதழின் இரண்டாமாண்டு பிறந்த தினம். சரியாக இரண்டு வருடங்களுக்கு முன்னர் இதனைத் தொடங்குகையில் எங்கள் குழுவுக்கு இருந்த பதைபதைப்பு இன்றும் அடங்கியபாடில்லை. ஒவ்வொரு மாதமும் இணைய தள வெளியீட்டு தினத்தையும், அச்சுப்பிரதி […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-12

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-11) சமூக விரோதச் செயல் சமூகம் மீது பிடிப்பில்லாத சுயநலப் போக்கின் விளைவாக, பிறர்மீது கரிசனை, பற்று என்பன இல்லாதுபோக தன்னைத்தானே சீரழித்துத் தன் சமூகத்துக்கும் சீரழிவை ஏற்படுத்தும் வன்முறைகளில் புலம்பெயர்ந்தோரில் சிலர் செயற்பட்டு வருவதனையும், வெளிநாடுகளில் குழுக்களாகச் சேர்ந்து சீட்டாட்டம், போதைப் பொருள் கடத்தல், குடி, குழு மோதல்களில் ஈடுபட்டுச் சீரழிவதையும் சில கவிதைகள் கூறுகின்றன. மைத்திரேயி எழுதிய ‘ஊரிலிருந்து ஒரு கடிதம்’ என்ற கவிதையில் வரும்; “ஊடறுக்கும் குளிரில் வசந்தத்தை […]
தமிழர்களும் விழாக்களும்

நம் வாழ்க்கை வாழ்வதற்கே என்பது அனைவரும் அறிந்த கூற்றே, அந்த வாழ்க்கையை மகிழ்ச்சியாகவும், உற்சாகத்துடனும் வழி நடத்திச் செல்வதில் கொண்டாட்டங்களும் அதை ஏற்படுத்தும் விழாக்களும் முக்கிய பங்கு வகுக்கின்றன. நம் முன்னோர்களின் வழக்கை முறை,பண்பாடு, கலை போன்றவற்றை நாம் அறிவதற்கும், அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்வதற்கும் விழாக்கள் அடிப்படையாக அமைகின்றது. இன்று நாம் கொண்டாடும் பல விழாக்கள், நம் முன்னோர்களின் வேர்களைத் தொட்டு, பல ஆயிரம் ஆண்டுகளைக் கடந்தும், நம் வாழ்வியலோடு தொடர்ச்சியாக வலம் வருகின்றது. கால […]