Archive for March, 2015
உலகச் செம்மொழி – அத்தியாயம் 16

(அத்தியாயம் 15 செல்ல இங்கே சொடுக்கவும்) கொடுந்தமிழாயிருந்த மூலமொழி பின் திராவிடமொழிகளாய்த் திரிந்துவிட்டது. மூலத்தமிழிலிருந்து முதலில் பிறிந்த முதல் மொழியாக பாவாணரால் கருதப்படுவது தெலுங்கேயாகும்.அது திரிந்த காலம் ஏறத்தாழ கிமு 1500ம் ஆண்டாகும். தெலுங்கு நாட்டிற்கு கீழ் தென்பகுதி முழுவதும் தமிழ் என்னும் ஒற்றை மொழியே வழங்கி வந்துள்ளது. தமிழிலிருந்து திரிந்த திராவிட மொழிகளை வடதிராவிடம், நடு திராவிடம் , தென் திராவிடம் என்று மூன்று பிரிவுகளாகப் பிரிக்கலாம். பனம்பாரனாரும் தொல்காப்பியரும் ஒரே கல்விச்சாலை மாணாக்கர்கள் […]
புனித வெள்ளி

கிறிஸ்துவ மறை நெறியில் தவக்காலம் மற்றும் புனித வாரம் சேர்த்து 46 நாட்கள் மிகவும் முக்கியமான காலம். இயேசுநாதருடைய தியாகம், பிறருக்காக வாழ்தல் போன்ற நற்பண்புகளை அனைவரும் கடைபிடிக்கவும், ஒவ்வொரு கிறிஸ்துவரும் தன்னுடைய எண்ணங்கள் மற்றும் செயல்பாடுகளில் தனிமனித சுயபரிசோதனை செய்து கொள்ளவும், நிதானமான ஆன்மீகச் சிந்தனை மற்றும் அதற்கான செயல்வடிவம் கொடுக்கவும் உகந்த நாட்களாக இந்தத் தவக்காலம் அனுசரிக்கப்படுகிறது. சாம்பல் புதன் அல்லது விபூதி புதன் (Ash Wednesday) தவக்காலத்தை விபூதி புதன் அன்று கிறிஸ்தவர்கள் […]
வசீகர வஞ்சி

கன்னல் மொழி பேசும் காரிகை
கவிஞன் எழுதிடப் பிறக்கும் பேருவகை
கரும்பென இனித்திருக்கும் அவள் இடை
கைதேர்ந்த ஓவியன் காமுறும் தூரிகை
வாய்திறந்து பேசிட உதிர்ந்திடும் நன்முத்து
மழலைதரும் மதுபோதை

உம்மாவில் ம்மழுந்தயென் கன்னத்தில் முத்தமிட்டாள்
உள்ளங்கால் உச்சிமட்டும் கணமதிலே மாய்த்திட்டாள்
முட்டியிலே கைவைத்து முழுகாலை நான்பிசைந்தால்
முனகியவள் மெய்மறந்து கிறங்கியே கிடந்திருந்தாள்
பார்த்திருந்த பொழுதினிலே உமிழதனை இதழுகுத்தாள்
எசப்பாட்டு – அக்கரை பச்சை

காசு பணம் அதிகமாக கைகளிலே புரளுமுன்னு காடு கழனி எல்லாம் விட்டு காத்துப் போல பறந்து வந்தோம் அசல் நாட்டு வாழ்க்கையிலே அமைதிக் கொரு பஞ்சமில்ல அன்பாகப் பழக வுந்தான் ஆளுக்கொரு குறைவும் இல்ல கொஞ்ச நாள்ல போயிரவே நெஞ்சு முழுசும் ஆசையிருக்க பிஞ்சுப் புள்ளைகள நினைக்கயிலே அஞ்சும் நம்மனசு மறுக்கவில்ல நம்மப் பெத்தவுக நடுத்தெருவுல நிக்க விட்டு நாம பெத்தவுக நலம் நெனக்கும் செய்கையிதோ? – வெ. மதுசூதனன். […]
துருவக்கரடித் தோய்தல் (Polar Bear Plunge)

உறைபனி ஏரியில் பனிக்கட்டியைத் துளைபோட்டு வெட்டியெடுத்து வெறும் நீச்சலுடையுடன் நீருக்குள் பாய்ந்து கடும் குளிரில் நீந்துவதா? யார்தான் இப்படிச் செய்வார்கள் என்று வெப்பவலயத் தக்கிணபூமியில் பிறந்த தமிழன் யோசிக்கக் கூடும். ஆனால் எமது மினசோட்டா மாநிலத்தில் வாழும் ஐரோப்பியச் சந்ததியினரில் சிலருக்கு இது பனிக்காலச் சாகசப் பொழுது போக்குப் போட்டி, கூத்துக் கும்மாளம் எனலாம். இந்தப் போட்டிகளும், கொண்டாட்டங்களும் உறைபனி அதிகமாக உள்ள மினசோட்டா மாநில ஏரிகளிலும், ஆறுகளிலும் மற்றும் சில ஐரோப்பிய நாடுகளில் நடைபெறும் நிகழ்வாகும். […]
மார்லன் பிராண்டோ

1973ஆம் ஆண்டு, மார்ச் 27ஆம் நாள் லாஸ் ஏஞ்சலிஸ் நகரிலுள்ள டோரோதி சான்ட்லர் அரங்கம் (Dorothy Chandler Pavilion) – 45வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா. சிறந்த நடிகர் விருதுக்காக நியமனமாகியிருந்த ஐந்து பெயர்களை நடிகை லீவ் உல்மன் வாசித்து விட்டார். நடிகர் ரோஜர் மூர் வெற்றியாளரின் பெயரை அறிவித்தார். அரங்கம் முழுதும் பலத்த கரகோஷம். ‘சிறந்த நடிகரு’க்கான விருதைப் பெற ஒரு ‘பெண்’ மேடையேறினாள். பார்வையாளர்களுக்குக் குழப்பம். ரோஜர் மூர் ஆஸ்கர் விருதினை அந்தப் […]
ஊட்டச்சத்தும் ஊகங்களும் – 2

மார்ச் மாதம் ஊட்டச் சத்து மாதம். இதையொட்டி சென்ற இதழில் நம்முடலுக்குத் தேவையான உணவுக் கூறுகளைப் பற்றி, குறிப்பாக பெருவூட்டப் பொருட்களான மாச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்தினைப் பற்றி பார்த்தோம். இந்த இதழில் சிறுவூட்டப் பொருட்களான உயிர்ச்சத்துகள் பற்றி பார்ப்போம்.
உயிர்ச்சத்துகள் (Vitamins)
நம்முடலுக்கு சக்தியளிப்பது வைட்டமின்கள் எனப்படும் உயிர்ச்சத்துகள் தான். இயற்கை உணவுகளில், குறைவான அளவில் காணப்படும் உயிரினக் கலவை தான் உயிர்ச்சத்து. மிக குறைவான அளவில் தேவைப்பட்டாலும், வளர்சிதை மாற்றங்களுக்கு (metabolism) உயிர்ச்சத்து மிக அவசியமானது. பெரும்பாலும் நாம் உண்ணும் உணவுகளிலிருந்து மட்டுமே இவை பெறப்படுகின்றன. உடல், உள்ள ஆரோக்கியத்திற்கு உயிர்ச்சத்துகள் மிகவும் அத்தியாவசியமானவை. இவை மற்ற பெருவூட்டச் சத்துக்களுடன் சரி விகிதத்தில் சேர்ந்தால் மட்டுமே நமக்குத் தேவையான ஆரோக்கியம் கிடைக்கும். கண் பார்வை, தோல், இதயம், நரம்புகள் மற்றும் எலும்புகளின் நலனை நிர்ணயிப்பது உயிர்ச்சத்துகளே. உயிர்ச்சத்தின் குறைபாடு, நோய் எதிர்ப்புச் சக்தியைக் குறைத்து நாம் எளிதில் நோய்வாய்ப்படும் வாய்ப்பை அதிகரிக்கிறது.
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 8

முன்கதைச் சுருக்கம்: (இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 7) கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணா மூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணா மூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், கடை வீதியில் தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. […]
தொலைந்து போன சுகங்கள்

காலை வேளையில் பனிமூட்டம் சுகம்
சாலை வளைவில் பூந்தோட்டம் சுகம்
மாலைத் தென்றலில் முகிற்கூட்டம் சுகம்
சாரல் மழையின் நீரோட்டம் சுகம்.