Archive for July, 2015
உனக்கென உனக்கெனப் பிறந்தேனே…

தன்னை இடித்துத் தள்ளிவிட்டு ஓடிய ஒரு பெண்ணை, முறைத்துக்கொண்டிருந்தான் ஸ்ரீராம். நெற்றியில் சுருக்கம் விழ, ‘யாரிவள்? கொஞ்சம் கூட நாகரிகம் அறியாதவள்’ என்று மனதில் அப்பெண்ணைத் திட்டித் தீர்த்தான். அப்படி என்ன அவசரம் என்று அப்பெண் ஓடிய திசையைப் பார்க்கையில், அங்கோ தடுமாறியபடி சாலையைக் கடக்கக் காத்திருந்த ஒரு வயதான பெண்மணிக்கு, சாலையைக் கடக்க உதவிக்கொண்டிருந்தாள். முதல் முறையாக, பெயர் தெரியாத அப்பெண்ணிடம் மனதில் மன்னிப்பு வேண்டினான். ஒவ்வொரு சந்திப்பிலும், ஒவ்வொரு விதமாக ஸ்ரீராமின் மனதைக் கவர்ந்தாள். […]
புத்தொளி பிறந்தது !

வாசலில் இருசக்கர வாகனத்தின் ஓசை சற்றே உயர்ந்து பின் மெல்ல மெல்லக் குறைந்து பின் மெளனமானது. வண்டியிலிருந்து இறங்கி, கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை ஒற்றை விரலில் நிறுத்தி தட்டாமாலை சுற்றியவாறு வீட்டினுள் அடியெடுத்து வைத்தான் நிவாஸன். கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தை அங்கிருந்த மேசையின் மீது வைக்கக் குனிந்தவனுக்கு, அங்கு ஏற்கனவே இருந்த நோட்டுப் புத்தகத்தைக் கண்டதும் சற்று தூக்கிவாரிப் போட்டது. வேகவேகமாக தன் கையிலிருந்த நோட்டுப் புத்தகத்தையும், மேசை மீதிருந்த நோட்டின் பக்கங்களையும் படபடவென்று திருப்பிப் பார்த்தான். […]
உத்தம வில்லன்

ஒரு ரசிகனின் பார்வை ”அம்மாவும் நீயே அப்பாவும் நீயே” பாடலை அறியாத தமிழர்களே கிடையாது என்று சொல்லிவிடலாம். அந்தப் பாடல் காட்சியில் நடித்த குழந்தையை அறியாத தமிழ்த் திரைப்பட – ஏன் இந்தியத் திரைப்பட ரசிகர்களே இல்லை என்றும் கூறிவிடலாம். குறுகுறுத்த கண்களுடனும், துடிப்பான முகபாவங்களுடனும், வெடுக்கான வசனம் பேசும் தன்மையுடனும் “களத்தூர் கண்ணம்மா”வில் களம் புகுந்து, ஐம்பது ஐம்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாகத் திரைப்படத் துறையில் முடிசூடா மன்னனாய்த் திகழும் நடிகர் கமலஹாசனுக்கு அறிமுகம் தேவையில்லை. நடிக்காத […]
கைப்பேசிக் காதல்

முந்தியெல்லாம் நான்
சிக்கனத்தில் வாழ்ந்த போது
சொப்பனத்தில் மிதந்திருந்தேன்
காசைச் சேர்த்து நல்ல
கனவானாய் வாழ எண்ணிக்
கனவில் மிதந்திருந்தேன்.
கைப்பேசி வந்த பின்னர் – என்
கனவெல்லாம் ஓடிப் போச்சு – இனி
எப்போது பணம் சேர்த்து
பந்தாவாய் நான் வாழ்வேன்?
மாவுப் பண்டம்

அன்று வேலை முடிந்து வீட்டுக்கு வரும் பொழுதே ஒரு யோசனையாக வந்தாள் கலை. வீட்டிற்கு வந்தவுடன் வீட்டின் மையப் பகுதியின் வாசலில் பாண்டி விளையாடிக் கொண்டிருந்த செல்வியை வீட்டுக்கு வருமாறு சைகை செய்தவாறு, மையப் பகுதியின் அருகில் இருந்த சிறிய குறுக்குச் சந்தில் நடந்தாள். வீட்டின் பின் புறம் ஒரு சிறு அறை போல் காணப்பட்ட, அந்த அறையின் கதவினைத் தன்னிடம் உள்ள சாவி கொண்டு திறந்தாள். அந்தச் சிறிய அறை போல இருந்த வீட்டில் உள்ளே […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 10

முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, கணேஷ் அதனைப் […]