Archive for August, 2015
கோடை மகிழ்வுலா

ஆகஸ்ட் 8 ஆம் தேதியன்று 2015க்கான கோடை மகிழ்வுலாவை (Summer Picnic), மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஹைலேண்ட் ஏரிப் பூங்காவில் ஏற்பாடு செய்திருந்தது. ஏரிக்கரையோரம், மரக்கூடாரம், புல்வெளி மைதானம் என ரம்மியமான லொக்கேஷன் பிடித்திருந்தார்கள். சூரிய வெளிச்சத்தில், புல்வெளியின் பச்சை மின்னிக் கொண்டிருந்தது. காலை பதினொரு மணிவாக்கில் இருந்து, மினசோட்டாத் தமிழர்கள் அங்கே கூடிக் கொண்டிருந்தனர். எண்பதுகளின் இளையராஜா பாடல்களை, ஏரிக்கரைக் காற்றில் கரைய விட்டு, சங்கத்தின் நிர்வாகிகளும், தன்னார்வலர்களும் வந்தவர்களைச் சிறு இனிப்பு மிட்டாய் கொடுத்து […]
மினியாபோலிஸ் ஸ்கைவே – சமத்துவ நடைபாதை

சென்ற வருடம், ஆகஸ்ட் மத்தியில் வேலை மாற்றம் காரணமாக மினசோட்டா வந்தேன். அது ஒரு ஞாயிற்றுக்கிழமை. அடுத்த நாள், முதன்முதலாக இங்குள்ள அலுவலகத்திற்குச் செல்கிறேன். அலுவலகம் இருக்கும் இடம், மினியாபோலிஸ் நகர மத்தியில் டவுண்டவுனில். ஞாயிற்றுக் கிழமை சாயந்திர வேளையில், அடுத்த நாள் செல்லப்போகும் அலுவலகத்தைப் பார்த்துவிட்டு வரலாம் என்று காரை எடுத்துக்கொண்டு சென்றேன். ஜி.பி.எஸ் வழி காட்ட, அலுவலகம் அருகே சென்று, பிறகு பக்கத்தில் இருக்கும் ஒரு பார்க்கிங்கில் காரை பார்க் செய்து விட்டு, மீண்டும் […]
உலகச் செம்மொழி – அத்தியாயம் 17

(அத்தியாயம் 16 செல்ல இங்கே சொடுக்கவும்) இன்றைய தமிழுக்கும் கொடுந்தமிழுக்கும் சற்றே வித்தியாசங்கள் இருப்பினும், பழையன கழிதலும், புதியன புகுதலும் என்னும் தமிழ் மறபிற்கு ஏற்ப பல புதியவைகள் உள்வாங்கப்பட்டும், சில கழிக்கப்பட்டும் தமிழ் இன்றைய நவீனத் தமிழாக உருப்பெற்று உள்ளது. இது மற்றைய திராவிடம் போல் பிற மொழிகளுடன் கலந்து தனித்தியங்கும் தன்மை போகாமல் மூலமொழியின் சாரத்தோடே பல்லாயிரம்ஆண்டுகளாய் இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளமையான மூத்த மொழி தமிழ் மொழி. இந்திய துணைக்கண்டத்து மொழிகள் அனைத்தையும் […]
இலட்சிய சிகரம்

நான் ஏறிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது இலட்சிய சிகரம், என் இறைவா? நான் தோண்டிக் கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அறிவுப் புதையல், என் இறைவா? நான் பெருங்கடலில் நீந்திக்கொண்டே இருக்கிறேன், எங்கு இருக்கிறது அமைதித் தீவு, என் இறைவா? இறைவா நூறு கோடி மக்கள் இலட்சிய சிகரத்தையும், அறிவுப் புதையலையும் இன்ப அமைதியையும் உழைத்தடைய அருள்வாயாக !!! பாரத ரத்னா, அறிவியல் அறிஞர், அரசியல் வாதி, தமிழ்க் கவிஞர், இளந்தலைமுறையினருக்குச் சிறப்பான ஒரு வழி […]
சொற் சதுக்கம்

பொழுதுபோக்காய் உங்களது சொல் வங்கியை வளப்படுத்தும் ஒரு குதூகல விளையாட்டு. கீழே கட்டங்களில் இருக்கும் எழுத்துக்களைக் கொண்டு குறைந்த பட்சம் 15 சொற்களையாவது உருவாக்க முயலுங்கள். எழுத்துக்களை எப்படி வேண்டுமானாலும் கோர்க்கலாம்; ஒரே சொல்லில் அதே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். சொற்கள் எத்தனை எழுத்துக்கள் கொண்டவையாகவும் இருக்கலாம். எடுத்துக்காட்டு : ஆடி, கடல் ஒரே நிபந்தனை சொற்கள் தமிழ்ச் சொற்களாக, பொருள் அமைந்தவையாக இருக்க வேண்டுமென்பதே. விளையாடித் தான் பாருங்களேன்! (சொற் சதுக்கம் – […]