Archive for August, 2015
அமெரிக்கத் தமிழ் பெற்றோர்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது!! – சுமதிஸ்ரீ

தமிழக இளைய தலைமுறைப் பெண் மேடைப் பேச்சாளர்களில் முக்கியமானவரான திருமதி. சுமதிஸ்ரீ அவர்கள் சமீபத்தில் தனது அமெரிக்கச் சுற்றுப்பயணத்தின் ஒரு பகுதியாக, மினசோட்டா வருகை தந்தார். சிரிக்க வைத்து, கூடவே சிந்திக்கவும் வைக்கும் மேடைப்பேச்சுக்குச் சொந்தக்காரரான இவருக்கு எழுத்தாளர், கவிஞர், சினிமாப் பாடலாசிரியர் என வேறு பல முகங்களும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் மேல், அனைவரிடமும் எளிமையாகப் பழகும் பண்புள்ள பாசமிகு சகோதரி. நமது பனிப்பூக்களுக்கு, இவர் அளித்த பிரத்யேகப் பேட்டி இங்கே. உங்கள் வாழ்வில் மேடைப்பேச்சு எங்கு […]
பேச்சே எங்கள் மூச்சு

உலகத்தில் ஏறத்தாள 77 மில்லியன் மக்களால் பல வட்டார வடிவங்களில் தமிழ் பேசப்படுகின்றது. காலம், புவியியல், மதம், சாதி போன்ற பல்வேறு காரணிகளினால் ஒவ்வொரு பிராந்தியத்திலும் தமிழ் பல்வேறு முறைகளில் உச்சரிப்பு மாற்றத்துக்கு உள்ளாவதை வட்டார வழக்கு என்கிறோம். எங்கள் தமிழ் மொழிக்கென்று மிகச் சிறந்த இலக்கண நூல்கள் உள்ளன. தமிழ் எழுத்துக்களை எப்படி உச்சரிக்க வேண்டும் என்பதற்கான தெளிவான விளக்கத்தினை அவை எமக்குத் தருகின்றன. தமிழை எப்படிச் சரியாக எழுதுவது? எப்படிச் சரியாகப் பேசுவது? என்ற […]
பாபநாசம்

புத்திசாலித்தனம் ஒவ்வொரு நிமிடமும் இழையோடி, முழுவதுமாய்ப் பின்னிப் பிணைந்து, இணைந்து நிற்கும் கதை, அடுத்த நிமிடம் என்ன நடக்குமோ என்று இருக்கையின் நுனிக்கு இழுத்துச் செல்லும் திரைக்கதை, நேர்த்தியான ஒளிப்பதிவு, இயற்கையும், முதிர்ச்சியும் பெரும்பாலான கதாபாத்திரங்கள் தெளிவாய்க் காட்டும் நடிப்பு, தேவையான அளவு உணர்ச்சிப் பிழம்புகளை வெளிப்படுத்தும் அழகான உரையாடல்கள், நெல்லைத் தமிழை மண்மணம் மாறாமல் வெளிப்படுத்தும் சற்றும் மிகைப்படுத்தலில்லாத வசனங்கள், இப்படிப் பல உயர்வான, போற்றுதலுக்குரிய விஷயங்களைக் கொண்ட வெற்றித் திரைப்படம் பாபநாசம். மலையாளத்திலிருந்து இறக்குமதி […]
இருபத்தி நான்கு மணி நேரம் – பகுதி 11

(பகுதி 10) முன்கதைச் சுருக்கம்: கணேஷும், பாரதியும் அவர்களுடன் ஒன்றாகக் கல்லூரியில் பயிலும் இன்னும் சில நண்பர்களும் தேர்வு எழுதுவதற்காகக் காலை நேரத்தில் புறப்பட்டுப் பேருந்தில் சென்று கொண்டிருக்கின்றனர். வழியில் கத்தியால் குத்தப்பட்ட தட்சிணாமூர்த்தியை அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். தட்சிணாமூர்த்தி கணேஷிடம் ரகசியமாக ஒப்படைக்கும் மைக்ரோ எஸ்.டி. கார்ட் ஒன்றில், தங்க நகை செய்யும் கடை வைத்திருக்கும் சபாரத்தினம் ஆசாரியைக் கொலை செய்வது பதிவாகியுள்ளது. அந்த எஸ்.டி கார்டைக் கேட்டு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வர, […]
தும்பிக்கை தரும் நம்பிக்கை

வாழ்க்கையே அலை போலே நாமெல்லாம் அதன் மேலே இந்த வரிகளைக் கேட்டால் எல்லோருக்கும் அவரவரது வாழ்க்கையில் நடக்கும் ஏற்றங்களும் இறக்கங்களும் நினைவுக்கு வரும். அதுவே இந்த வரிகளில் உள்ள உண்மைக்கு அத்தாட்சி. எந்த ஒரு காரியம் செய்யும்போதும் சில தடங்கல்கள் வரத்தான் செய்யும். அதைப் பொறுமையுடனும் மனத்தெளிவுடனும் எதிர்க்கொண்டால் தடங்கல்கள் விலகி வெற்றிக்கு வழி கொடுக்கும். பொறுமையும் மனத்தெளிவும் எளிதில் எல்லோருக்கும் கிட்டுவதில்லை. தெய்வபக்தி இதற்கு பெரிய அளவில் உதவுகிறது. எந்த ஒரு காரியம் துவங்குவதற்கு முன்னர்ப் […]
வானவில்லின் மறுபக்கம்

“நீ இன்னும் மேல மேல பறந்துகிட்டே இருக்கணும்மா.. எழுந்திரு ..” அமெரிக்காவில் மேற்படிப்புப் படிக்க வாய்ப்புக் கிடைத்த விஷயம் அறிந்தவுடன் அவளது அக்கா சாந்தி அவளை ஆசிர்வதித்துச் சொன்னது ராஜியின் மனதில் ஓடியது. எவ்வளவு பெருமைப்பட்டார்? ‘எங்க வம்சத்தில யாருமே வெளிநாட்டுக்குப் படிக்கப் போனதில்லை .. இவ அமெரிக்கால நாலு காலேஜுக்கு அப்ளை பண்ணா .. நாலு காலேஜ்லேயிருந்தும் சேரச் சொல்லி லெட்டர் அனுப்பியிருக்காங்க .. எங்க சேர்றதுன்னு அவ தான் டிசைட் பண்ணணும்..’ கிட்டத்தட்ட திருவான்மியூர் […]
மெல்லிதழ் முத்தம்

பனிக்கால மினசோட்டா நதிகளாய்
இறுகிப் போன முகத்துடன்
கண்ணாடி வீட்டில் இருந்து
கல்லெறிய முயல்கிறான்…
கிடைத்த ஒரு முத்தத்தைச்
சரிசமமாகப் பகிர்ந்து கொண்டபின்
மீண்டும் முடியாது என
அடம்பிடித்து முறித்துக் கொண்டவளிடம்
சொற் சதுக்கம் – விடைகள்

ஆடி தடி கடல் வடம் வனம் கடம் கவனம் தடம் தகவல் கல் கடி கனம் தனம் ஆடல் கடினம் கடிதம் தகனம் வதனம் ஆவல் வதம்
ஸ்பைசி மசாலா சாய் – ஒரு கலக்கல் கலாட்டா

“ஸ்பைசி மசாலா சாய்” என்ற நிகழ்வைக் கேட்டதும் என்னதான் டீ ஆத்தறாங்க என பார்த்துவிட ஆர்வம் தொற்றிக் கொண்டது. சனிக்கிழமை ஆகஸ்ட் 1 மாலை 5:30 மணி U O M Rarig centerல் நிகழும் காட்சிக்கு 5 மணிக்கெல்லாம் போய்ச் சேர்ந்த எமக்கு பெரும் வியப்பு. இந்த நிகழ்வுக்கு நுழைவுச் சீட்டுபெறும் வரிசை மட்டும் சாலை வரை நீண்டுகொண்டே போனது. காட்சி நேரத்திற்குச் சரியாக அனுமதிக்கப் படுவோமா என்ற ஐயம் ஒருபுறம், இந்த நிகழ்வை ரசிக்க […]
எசப்பாட்டு – இரண்டாம் காதல்

உசுருக்கு உசுரா ஆச வச்சோம்
உறவா மாறிப்போக ஆச வச்சோம்
உடனே சேந்துவாழ ஆச வச்சோம்
உடலு வேற உயிரொண்ணுனு ஆச வச்சோம்
உலகம் சுத்திவர ஆச வச்சோம்
உலவும் தென்றலாக ஆச வச்சோம்