Archive for October, 2015
சொற்சதுக்கம்

கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். ல உ க ப ம் ட ஓ டு த தொகுப்பு: ரவிக்குமார். (சொற் சதுக்கம் – விடைகள்)
சுய மரியாதை

மதியம் மூன்று மணியாகிக் கொண்டிருந்தது. காலையில் இருந்து ஏதோ பர பர வென்று இருந்தது உதயாவிற்கு. பிள்ளைகள் இருவரும் பள்ளியில் இருந்து வரும் நேரம் ஆகி விட்டது. இன்னும் அரை மணி நேரத்தில் அவர்களைச் சென்று அழைத்து வர வேண்டும். அவளது கணவன் பரத் அன்று சீக்கிரம் வருவதாகச் சொல்லி இருந்தான். வீட்டின் வேலைகாரம்மா அன்பு அன்று நேரம் கழித்து வந்து அப்பொழுதுதான் வீட்டை சுத்தம் செய்து துடைத்துக் கொண்டு இருந்தாள். தன்னுடைய அலமாரியில் புடவைகளை அடுக்கி […]
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-15) போரினால் விளைந்த அவலங்கள் – 1983ஆம் ஆண்டிற்குப் பின்னர் ஈழயுத்தம் தீவிரமடைய தொடங்கியபோது, ஆரம்பத்தில் அது பல்லாயிரக்கணக்கானோரை வெளிநாடுகளுக்குப் புலம்பெயர வைத்தது. தேசங்கள் தோறும் சிதறிஓட வைத்தது. இந்தப் புலம்பெயர்வு ஆரம்பத்தில் பணவரவினூடான வாழ்வினைத் தந்தாலும் காலப்போக்கில் வலியைத் தரத்தொடங்கியது. ஈழத் தமிழரின் அன்றாட வாழ்வில் யுத்தம் பெருமளவிலான பாதிப்பினை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. இது அங்கு வாழ்ந்து கொண்டிருப்பவர்களை மட்டுமன்றி புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உடன் பிறப்புக்கள், உறவுகள் மீதும் தாக்கத்தை விளைவிக்கத் தொடங்கி […]
கண்மாய்க் கரையும் களத்து மேடும்

இலையுதிர் காலம் வந்தால் மினசோட்டாவில் பெரிதும் கொண்டாடப் படுவதில் ஒன்று இயற்கை காட்டும் வண்ண விளையாட்டு. மற்றொன்று ஆங்காங்கே நடத்தப்படும் அறுவடைக் கொண்டாட்டங்கள். வைக்கோல் கட்டுகளைத் திறந்த வண்டியில் அடுக்கி அதன் மீது அமரச் செய்து ஊர்வலம் கொண்டு செல்லும் வைக்கோல் சவாரி (Hay Ride) மற்றொரு புறம். பரங்கிக்காய்களை அறுவடை செய்து ஆங்காங்கே கிடத்தி விளையாட வைக்கும் பரங்கித் திட்டுகள் (Pumpkin Patch) இன்னொரு புறம். இந்தக் கொண்டாட்டத்தை எனது பிள்ளைகளோடு சென்று கண்டு களித்த […]