Archive for October, 2015
சொற் சதுக்கம் – விடைகள்

ல உ க ப ம் ட ஓ டு த விடைகள்: கபம் ஓடம் தடம் கடம் படம் ஓலம் ஓதம் ஓடு உதடு உலகம் கலகம் கலம் தலம் பலம் படலம் கபடம் கடகம் கதம்பம் கம்பம்
நடிப்புலகச் சக்கரவர்த்தினி

”சிக்கலாரே, எப்டி இருக்கீய…. சொகமா இருக்கீயளா……….. அடி ஆத்தி…. இந்த நாயனத்துல வாசிச்சுக் காட்டுங்க…… ஏஏஏஏஏஏன்…..” தில்லானா மோகனாம்பாளில் எல்லா நாதஸ்வரத்திலும் அதே சங்கீதம்தான் வருகிறதா, அல்லது சிக்கல் சண்முகசுந்தரம் (நடிகர் திலகம் சிவாஜி கணேசன்) வாசிக்கும் நாதஸ்வரம் மட்டும் சிறப்பாகச் செய்யப்பட்டதா என்று கேள்வி கேட்கும் நேரத்தில், ஒரு நிமிடம் சிவாஜி என்ற மாபெரும் ஜாம்பவான் அதே காட்சியில் இருக்கிறார் என்பதே நமக்கு மறந்துவிடுமளவுக்கு அதிகமான ஆளுமையுடன் நடிப்பதற்கு இயன்ற ஒரு சில நட்சத்திரங்களில் மிகவும் முக்கியமானவர். […]
மினசோட்டாவின் கதை

ஏறத்தாழ ஒரு மில்லியன் வருடங்களிற்கு முன்னர் இருந்து மினசோட்டாவின் கதையை ஆரம்பிக்கலாம். பனிப்பாறைகள் பூகோளத்தின் கால் பகுதியைக் கவர்ந்து காணப்பட்டது. இதுவே ஆழ்ந்த உறைபனியின் வடதுருவம் மாத்திரமல்ல அதன் வட நிலப்பரப்பின் பெரும்பாலான பகுதிகளும் மூடப்பட்டிருந்தது. இக்காலம் பனியுகம் எனப்படும். அக்காலத்தில் வடதுருவமானது பலதட்டுப் உறை பனிப்பாறைகளினால் ஆயிரமாயிரம் ஆண்டுகள் மூடப்பட்டிருந்தன. அதன் பின்னர் பனியுருகி நீர்த்தேக்கங்களும்,காடுகளும், விலங்குகளும் செழித்தன. ஆயினும் இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளின் ஆழ்ந்த உறைபனி மீண்டும் திரும்பி உயிர்த்த யாவற்றையும் குளிரில் உறைத்து […]
மன்மத வருட மாத பலன் – கார்த்திகை மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி, வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் கார்த்திகை – ஆங்கிலத்தில் ஆக்டோபர் – நவம்பர் மேடம் (மேஷம்) – உடுப்பு ஆபரணங்கள் வருகை, நினைத்தவை கைகூடுதல், சந்தோசம். எதிரி பயங்கள் உண்டாதல், மாத இறுதியில் பயம் நீக்கம். குடும்ப மனத்தாபங்கள், வீட்டில் பிள்ளைகளினால் சிரமங்கள் ஆகலாம். இடபம் (ரிஷபம்) – மனம் மகிழ்வுதரும் மாதம், உடல் ஆரோக்கியம் குன்றலாம். தொழிலில் இடையூறு, காணி, நிலம் சொத்துக்களால் ஆதாயம் வரலாம். மனதில் தாழ்ந்த […]
யார் அந்த இராவணன் பகுதி – 1

வலவன் ஏவா வான ஊர்தி விமானம் அல்லது வானூர்தி என்பது புவியின் வளிமண்டலத்தின் உதவியுடன் பறக்கக்கூடிய ஓர் உந்துப்பொறியாகும். இது காற்றை உந்தியும் பின் தள்ளியும் பறக்கிறது. புவியீர்ப்பு விசையை மீறி வானில் பறக்கக் காற்றிதழின் நிலை ஏற்றத்தையோ இயக்க ஏற்றத்தையோ பயன்படுத்துகிறது. சுமார் 1890களில் தொடங்கி 1903 ஆம் ஆண்டு ஆர்வில் ரைட் (Orville Wright) வில்பர் ரைட் (Wilbur Wright) என்னும் இரு உடன்பிறந்தார்கள் (Wright brothers) முதன் முதல் பறக்கும் ஒரு இயந்திரத்தைப் […]
ஆட்டிஸம்

வாழ்க்கையில் இதற்கு முன் கேட்டிராத வார்த்தை… கேட்ட முதல் முறை எனக்குத் தோன்றிய உணர்வு, “இது கடைசி முறையாக இருக்காது என்பதே”… புதிதாக ஒன்றைக் கற்றுக் கொள்வது சுவாரஸ்யமான ஒன்றே, ஆனாலும் கற்றுக் கொண்டு சாவதானமாய் அடுத்த விஷயத்திற்குப் போய்விடும் ஒரு வார்த்தையல்ல “ஆடிஸம்” என்பதை நானும் எனது மனைவியும் மிகவும் விரைவிலேயே உணர்ந்தோம். எங்களின் வாழ்வின் ஒவ்வொரு கணமும், ஒவ்வொரு நாளும், இரண்டறக் கலக்கவிருக்கும் ஒரு வார்த்தை, ஒரு வாழ்க்கை என்பதை முதல் முறையாகக் கேட்கையில் […]
நிலாவரை

யாழ்ப்பாணத்தில் உள்ள நவக்கிரி கிராமத்திற்கு அருகில் அமையப் பெற்று உள்ள நிலாவரைக்கும் கடலுக்கும் தரைக்கீழ்த் தொடர்புண்டு என மக்கள் நம்புகின்றனர். நிலாவரையில் ஒரு எலுமிச்சங் காயைப் போட்டால் அது கீரிமலைக் கடலில் மிதக்கும் என்றனர். இது சதுரக் கேணி போன்று அமைந்து பயத்தை தரக் கூடிய வகையில் கருமை படர்ந்த நிறத்தோடு கூடிய தண்ணீரைக் கொண்டது. ஆழங்காணாத இக்கிணற்றில் விழுந்து தற்கொலை செய்தவர்கள் பலர். இது வற்றாத கிணறாகக் கருதப்படுகின்றது. கி. பி. 1824 இல் சேர் […]
காமத்தின் தொடக்கம்

அமிழ்து ஊறித் ததும்பும் அதரங்கள்
அன்பு எனும் ஊற்றின் பிறப்பிடம்
அழகாய் விரிந்து ஓடிய ரேகைகள்
அற்புதம் தீட்டிய கோலங்கள் அறிவீரோ?
செயற்கைச் சாயப் பூச்சாய் இருப்பினும்
செழிப்பான இயற்கைக் கோலம் எனினும்
செக்கச் சிவந்ததோ செரிய கருமையோ
செல்வோரை வலியத் திருப்புமென அறிவீரோ?
மினசோட்டா மக்கள் அறிகுறி

உங்கள் பக்கத்து ஐஸ்கிரீம் கடை செப்டெம்பர் மாதத்திலிருந்து அடுத்த மேமாதம் வரை மூடியிருந்தால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் சில சமயம் ஷாட்ஸ் போட்டுக் கொண்டு ஜாக்கட்டு அணிந்து ஒரே தரம் வெளியே போய் வரப் பாவித்தீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்கள் பயணங்களை மணித்தியாலக் கணக்கில் மாத்திரமே ஒப்பிடுவீர்களேயானால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக இருக்கலாம் உங்களுக்குத் தெரியாதவர் தவறாகத் தொலைபேசியில் அழைத்தும் பலமணி நேரம் முகம் முறிக்காது பேசியுள்ளீர்கள் ஆனால் நீங்கள் மினசோட்டாவைச் சார்ந்தவராக […]
காட்டுப்பன்றி சின்ன வெங்காயப்பிரட்டல்

தமிழரின் பாரம்பரியங்களில் காட்டுப் பன்றி வேட்டையானது வில்லேந்தும் வேந்தனில் இருந்து, சேனைப் பயிர் செய்த செவ்விளங்காளைகள் தொட்டு, வேட்டையாடும் வன்னியர் வரை யாவரும் விரும்பிச் செய்த கருமம். தக்கிண பூமியில் இந்தியக் கண்டம் தொட்டு இலங்கை வரை பரந்து வாழ்ந்த வளமான வயல் காட்டு, நாட்டரிசியும், வாயூறும் வகை வகையான வனவிறைச்சிகளையும் சுவைக்கும் தமிழர் யாவரும் உட்கொண்ட உணவு பன்றி. இன்று மினசோட்டா மாநிலத்தில் தென்மேற்குப் பகுதியிலும், அயல் விஸ்கான்சின் மாநிலத்திலும் இருந்தும், கனேடிய ஒன்டாரியோ மாகாணத்தின் […]