\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for November, 2015

ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17

Filed in இலக்கியம், கட்டுரை by on November 30, 2015 0 Comments
ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-17

(ஈழத்தமிழர்களின் புலப்பெயர்வு – பகுதி-16) சுதந்திர வேட்கை சுதந்திரம் என்பது மனிதர்களின் பிறப்புரிமை. அது மறுக்கப்பட்ட நிலையில் வாழும் ஈழத் தமிழர்கள் தமது விடுதலை உணர்வின் வேட்கையினை மனதுக்குள் போட்டுப் பூட்டி வைத்து மௌனியாகி வாழாவிருக்கின்றனர். சோகங்களில் மூழ்கி வாழ்வினைத் தொலைத்த போதிலும் நம்பிக்கை ஒன்றே வாழ்வின் மூலதனமாக நின்று செயற்படுவதாகத் ‘தமயந்தி’ எழுதிய “நம்பிக்கையான மௌனம்” என்ற கவிதை குறிப்பிடுகின்றது. “துளிர்ப்புக் காலத்தை எதிர்நோக்கி தவமிருக்கும் பனிப்புலத்து இலையுதிர் மரங்களைப் போல் மெளனமாய் எங்கள் இருத்தல் […]

Continue Reading »

மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

Filed in அன்றாடம், ஜோசியம் by on November 30, 2015 0 Comments
மன்மத வருட மாத பலன் – மார்கழி மாதம்

(இது தமிழ்ப் பஞ்சாங்கத்தைத் தழுவி,  வட அமெரிக்கப் பகுதிகளுக்காகக் கணிக்கப்பட்டுள்ளது) தமிழ் மார்கழி – ஆங்கிலத்தில் நவம்பர் –  டிசம்பர் மேடம் (மேஷம்)  – இடையூறுகள் மத்தியிலும் சாந்தமான வாழ்வு. கைக் காரிய இடையூறுகள் தொடரலாம், ஆயினும் நலமான சந்தோசம் தரும் முயற்சிகள் நிறைவேறும். தாழ் மனம், துச்ச குணமுடைய சகபாடிகளால் தலையிடியும் ஆகலாம். இடபம் (ரிஷபம்) –  இம்மாதம் சற்று உடல் ரீதியிலான காயங்கள் வராது பார்த்துக் கொள்ளுதல் முக்கியம். குடும்பத்தார்,சுற்றியுள்ள இனசனங்களால் தொந்தரவு மற்றும் […]

Continue Reading »

நிறம் தீட்டுக

நிறம் தீட்டுக

Continue Reading »

சொற்சதுக்கம் – விடைகள்

Filed in பலதும் பத்தும் by on November 30, 2015 0 Comments
சொற்சதுக்கம் – விடைகள்

  மதி கதி தலை கலை மலை வலை திடல் கடல் மடல் மதில் தழல் வழலை கழலை மழலை திவலை கவலை தகவல் தில்லை கழல் வடல்

Continue Reading »

சொற்சதுக்கம் – 2

சொற்சதுக்கம் – 2

கீழே கட்டத்துக்குள் இருக்கும் ஒன்பது எழுத்துக்களைக் கொண்டு சொற்களை உருவாக்குங்கள். சொற்கள் இரண்டெழுத்தாகவோ அல்லது அதற்கு மேற்பட்டதாகவோ இருக்கலாம். ஒரே எழுத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் பாவிக்கலாம். சொற்கள் பொருள் பொதிந்தவையாக இருக்க வேண்டும். இருபது சொற்களுக்கு மேல் உருவாக்கினால் நீங்களே தமிழ்ப் புலி என்ற பட்டமளித்துக் கொள்ளலாம். தொகுப்பு: ரவிக்குமார். (சொற் சதுக்கம் – விடைகள்)

Continue Reading »

இறைவனிடம் கையேந்துங்கள்

Filed in இலக்கியம், கதை by on November 30, 2015 0 Comments
இறைவனிடம் கையேந்துங்கள்

“இறைவன் உங்களுக்கு உதவி செய்வானாகில் உலகில் எந்தச் சக்தியும் உங்களை வென்றிட முடியாது.. உங்களுக்குச் சேர வேண்டிய எதையும் தடுத்திட முடியாது.. வாய்மையான இறை நம்பிக்கையாளர்கள்..” பீயிங் .. பீயிங் என்று சிணுங்கியது லேப்டாப் அலாரம். புத்தகத்தை மூடி வைத்துவிட்டு எழுந்தான் அமித். 113 ‘வேக் அப் கால்’ என்று காட்டியது கணினி. மணி ஏழாகி விட்டிருந்தது. அறை எண்ணில் தங்கியிருக்கும் லிண்டாவுக்கு ஃபோன் செய்து எழுப்பி விட்டான். ‘வேனோஸ் தியஸ் அமிகோ’ என்று சொல்லியபடி உள்ளே […]

Continue Reading »

உன்னிமேனனுடன் உரையாடல்

Filed in அன்றாடம், பேட்டி by on November 30, 2015 0 Comments
உன்னிமேனனுடன் உரையாடல்

கேள்வி: நீங்க மூவாயிரத்துக்கும் மேல பாடல்கள்  பாடி இருக்கீங்க. இதுல பாடாத பகுப்புகள் (Genre) ஏதாவது இருக்கா? பதில்: நிறைய இருக்கு. இசைல அதன் பகுப்புகளுக்கு அளவே  கிடையாது. அதுவும், இப்ப நாம உலகிலுள்ள பல இசைகளைக் கேட்கிறோம். சாட்டிலைட் சேனல்ஸ், சோஷியல் மீடியா வழியா  பல வகை இசையைக் கேட்கிறோம். இன்னும் நிறைய பாட ஆர்வமா இருக்கேன். இந்த மூவாயிரம் பாடல்களைப் பல மொழிகளில் பாடியுள்ளேன். இது மட்டும் இல்லாமல், பக்தி  பாடல்கள் கொண்ட ஆல்பங்கள் […]

Continue Reading »

காகிதத்தின் வாக்குமூலம்

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments
காகிதத்தின் வாக்குமூலம்

எந்த நிறத்தையும்
ஏற்கும் சமரசப்பிறவி
காகிதம் !!!

வேறுபட்ட கருத்துகளைத்
தன்னுள் விழுங்கி…
மக்களின் பார்வைக்கு
எவ்விதப் பாகுபடின்றிக் கொடுத்துத் …
திறம்படத் தன் பணி
செய்பவன் …..
எவனோ …..அவனே
காகிதம் …!!!!

Continue Reading »

சாமக்கவி

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments
சாமக்கவி

வாயு தேவனும் வருண பகவானும் சங்கமித்து இசை பயிலும் ஒரு பனிக்கால இரவின் முன்சாமப் பொழுதொன்றில் கட்டிலில் சாய்ந்தபடி கவிதை எழுதத் தொடங்கினேன். கவிதை நீண்டு கதையாகிப் பின் தொடர்கதையாய் நீண்டது. சாளரம் திறந்து எட்டிப் பார்த்தேன். தீபாவளிக்கு இல்லாத விடுமுறை திருக்கார்த்திகையில் வந்ததால் வானத்து விண்மீன்கள் நிலாவைத் துணைக்கழைத்தன விளையாட . ஆழ்மனதில் ஒரு கவிதை தோன்றியபோது எழுந்து விளக்கை அணைத்தேன் வீணை மீட்டியபடி பாடத் தொடங்கினேன் ஒரு சாமகானம். ஊரவன் –  

Continue Reading »

நானே ராசா நானே மந்திரி

Filed in இலக்கியம், கட்டுரை by on November 30, 2015 0 Comments
நானே ராசா நானே மந்திரி

நமது சிற்றூர்களில் சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் வரை பொழுது, சாயும் வேளையில் கட்டை வண்டிகள் கடகட மடமட என ஓடி வருவதைக் கேட்டிருப்போம். சரக்கு ஏற்ற கட்டை வண்டி இருந்ததைப் போல, சொகுசுப் பயணம் செய்ய அலங்கரிக்கப்பட்ட வில் வண்டிகள் பல  இருந்தன. ஆனால் இன்று காலவோட்டத்தில் புகையைக் கக்கி, காதைக் கிழிக்கும் எந்திர வண்டிகள் எங்கும் பரவி, கட்டை வண்டிகளை ஓரம்  கட்டி விட்டன. நமது பயன்பாட்டில் இல்லை என்றாலும் நமது நினைவுச் சாலையில் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad