\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for November, 2015

ஒரு IT ஆண் மகனின் சோகக்  கதை

Filed in இலக்கியம், கதை by on November 30, 2015 3 Comments
ஒரு IT ஆண் மகனின் சோகக்  கதை

காலை அலாரம் அடித்தது. ஒரு சோம்பலுடன் புரண்டு படுத்து அதை அமர்த்தினான் தினேஷ்.  சமையல் அறையிலிருந்து ஒரு குரல் கொடுத்தாள் கலை. “எழுந்திருங்க, இன்னிக்கு உங்க turn வர்ஷாவைக் குளிக்க வைக்கறது” “ஹ்ம்ம்” காலை 3 மணிக்குத் தான் படுத்திருந்தான். கண்கள் எரிந்தன. நேற்று முழுவதும் offshore டீமுடன் மண்டையை உடைத்து என்ன தவறு நடந்தது என்று குடைந்தாகி விட்டது. இன்று client இடம் பதில் சொல்லி ஆக வேண்டும். யாருடைய தவறு என்று கண்டு பிடிக்க […]

Continue Reading »

எசப்பாட்டு – வெள்ளம்

எசப்பாட்டு – வெள்ளம்

தண்ணீர் தண்ணீரென்றே
தாகத்தோட அலைஞ்சோம் நாங்க
தரையத் துளைச்சாலும்
தாளாது இறைச்சாலும் வர்ல

Continue Reading »

மனங்கொத்தி

Filed in இலக்கியம், கவிதை by on November 30, 2015 0 Comments
மனங்கொத்தி

சற்றே கலைந்த கேசம்
சற்றே சாய்ந்த வதனம்
சற்றே பரந்த நுனலும்
சற்றே வளைந்த புருவம்

Continue Reading »

முப்பரிமாணப் பிம்பப் படிமப் பிரதிபலிப்பு

Filed in இலக்கியம், கட்டுரை by on November 30, 2015 0 Comments
முப்பரிமாணப் பிம்பப் படிமப் பிரதிபலிப்பு

முப்பரிமாணப் பிம்பத் தொழில்நுட்பம் ஒருவர் மறைந்த பின்னும் அவர் விட்டுச்சென்ற எண்ணங்களுடன் தொடர்பு கொண்டு உரையாட உதவலாம் இரண்டாயிரத்து நாலாம் ஆண்டு இறுதியில் இந்திய உபகண்ட இந்து சமுத்திரத்தில் ஏற்பட்ட கடற்கோளில் மரித்த மக்கள் பலர். இதில் தமிழ்ப் பிரதேசங்களில் பலமக்கள் மடிந்தனர். வரலாற்றுப் படிமங்களிலிருந்து எமது சந்ததிகள் ஆயிரமாயிரம்  ஆண்டுகளுக்கு முன்னரே  கடற்கோள் பற்றி அறிந்திருந்தும், பெரிய அளவில் கடற்கோள் நிகழாததால்,  தற்கால சந்ததியினர் ஒருவருக்கும்  ஞாபகத்தில் வரவில்லை. இதனால் ஒரு வகையில் பார்த்தால் எம்மக்களுக்கு […]

Continue Reading »

மிளகு வான்கோழிப் பிரட்டல்

மிளகு வான்கோழிப் பிரட்டல்

வழக்கமான செட்டிநாட்டுக் கோழிச் சமையல் முறையை வட அமெரி்க்க நவம்பர் மாதப் பண்டிகைசமயங்களில் சமைக்கப்படும் வான்கோழிச் சமையலாக மாற்றியமைக்கப்பட்டுள்ளது. தேவையானவை 2.5 – 3 இறாத்தல் வான்கோழி 0.5 மேசைக்கரண்டி மஞ்சள் வாசனைத் திரவியங்கள் 2 மேசைக் கரண்டி பெருஞ்சீரகம் 2 மேசைக் கரண்டி சீரகம் 3 மேசைக் கரண்டி மல்லி 3-5 கிராம்பு 1 மேசைக் கரண்டி ஏலக்காய் விதைகள் 1 கறுவாப்பட்டை – இரண்டாகப் பிளந்து எடுத்துக் கொள்ளவும் 2 மேசைக் கரண்டி மிளகையும் […]

Continue Reading »

ஆட்டிஸம் – 2

Filed in இலக்கியம், கட்டுரை by on November 30, 2015 0 Comments
ஆட்டிஸம் – 2

(ஆட்டிஸம் – 1) ஆட்டிஸம் என்பதை ஒரு நிலை என்று விளக்குவதே சரியாக இருக்குமென நினைக்கிறேன். இது குழந்தையின் வளர்ச்சிக் குறைவு, பொதுவாக, குழந்தையின் மூன்று வயதுக்குள் தோன்றுகிறது. குறைபாடுகள் ஒவ்வொரு குழந்தைகளுக்கும் பல வகைகளில் வேறுபடுகின்றன. சில குழந்தைகள் மற்றவரிடம் தான் தெரியப்படுத்த விரும்புவதைக் காட்ட இயலாத நிலையில் இருக்கலாம். வேறு சில குழந்தைகளால் சிறிய இயக்கங்களைச் செய்ய இயலாத நிலை – அதாவது ஒரு சின்ன கரண்டியையோ, பொம்மையையோ எடுத்து நகர்த்தி வைக்க இயலாத […]

Continue Reading »

திருவிவிலிய கதைகள்  –  நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?

திருவிவிலிய கதைகள்  –  நான் என்ன, என் சகோதரனுக்குக் காவலாளியோ?

“தம்பி உடையான் படைக்கு அஞ்சான்”  என்பது தமிழர்கள் நாம் அனைவருக்கும்  மிகவும் பழக்கமான கூற்று. இது சகோதரப் பிணைப்பைப் பாராட்டுவதாகும். சமுதாயத்தை அன்போடு பிணைத்துக் காப்பது சகோதர பாசமே. ஆனாப் பாருங்க,   இன்னைக்கு நேற்று  இல்ல,  ஆதி காலத்திலிருந்து  அண்ணன், தம்பி சண்டை இருக்கத்தானே செய்யுது. சரி  இப்ப, ஆதி மனிதனான ஆதாமுடைய குடும்பத்தில  சகோதரர்களுக்கு இடையே நடந்த ஒரு நிகழ்வைப் பார்க்கப்போறோம். கிருஸ்துவ மறையின் புனித நூல் திருவிவிலியம் (Bible) ஆகும். இது புதிய ஏற்பாடு, […]

Continue Reading »

மினசோட்டாவின் கதை – பாகம் 2

Filed in இலக்கியம், கட்டுரை by on November 30, 2015 0 Comments
மினசோட்டாவின் கதை – பாகம் 2

(மினசோட்டாவின் கதை பாகம் 1) முதல் மனிதன் வட அமெரிக்காவிற்குக் குறிப்பாக மினசோட்டா மாநிலத்திற்கக்கு வாந்தான் அல்லது வந்தாள் என்று சரியாகத் தெரியாது. எனினும் மனித இனம் ஆசியாவிலும், ஆபிரிக்கக் கண்டங்களிலும் குடியேறியிருக்கும் அதே காலகட்டத்தில் அமெரிக்கக் கண்டத்தில் காணப்படவில்லை என்று இதுவரை வட மற்றும் தென்கண்டங்களில் நடந்துள்ள அகழ்வு ஆராய்ச்சித் தரவுகள் தெரிவிக்கின்றன. தற்பொழுது மினசோட்டாப்பகுதி மற்றும் வட அமெரிக்கவிற்கு வந்தவர்கள் ஆசியக் கண்டத்தில் இருந்து ருஸ்ய-சைபீரியாவுடாக பெரிங் நீரிணையைக் கடந்து; பெரும் பனியுகம் பின்தாங்கத் தொடங்கியபின்னர் […]

Continue Reading »

எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2

Filed in இலக்கியம், கட்டுரை by on November 29, 2015 1 Comment
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 2

(எங்கேயும் எப்போதும் MSV  – பகுதி 1) ஜாஸ் (Jazz) என்பது ஐம்பதுகளின் மத்தியில் பிரபலமடையத் தொடங்கிய ஒரு இசை வடிவம். ஆப்பிரிக்க அமெரிக்கர்களின் வாழ்வியல் இசையாகக் குறிக்கப்படும் இது பல உட்பிரிவுகளைக் கொண்டு விளக்குவதற்குச் சற்றுக் கடினமாக இருந்தாலும் ப்ளூஸ் (Blues) எனும் பிரிவின் படி மனித வாழ்வியலில் இழையோடும் சோகத்தைக் குறிப்பதாகக் கொள்ளலாம். அமெரிக்காவின் நியூ ஆர்லியன்ஸ் மாகாணத்தில் இது அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பிரபலமடையத் தொடங்கியது. அக்காலங்களில் இங்கு சவ ஊர்வலங்களில் இவ்வகை இசை […]

Continue Reading »

கலைவாணர்

கலைவாணர்

”சிந்திக்கத் தெரிந்த மனித குலத்துக்கே  சொந்தமான கை இருப்பு, வேறு ஜீவ ராசிகள் செய்ய முடியாத செயலாகும்  இந்த சிரிப்பு” என்ற பாடலைக் கேட்டிராத, ரசித்திராத சென்ற தலைமுறையைச் சேர்ந்த தமிழர்களே இருந்திருக்க இயலாது என்று நினைக்கிறேன். இந்தப் பாடலுக்குக் குரல் கொடுத்து, நடித்து அதற்கு முழு உயிரும் கொடுத்த நகைச்சுவை நடிப்பின் மாமேதை கலைவாணர் என். எஸ். கிருஷ்ணனுக்கு அறிமுகம் தேவையில்லை. இந்தப் பாடலே அவரின் சிந்தனைக்கும் ஒரு எடுத்துக்காட்டு என்று கூறலாம். நகைச்சுவையில், சமூக […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad