Archive for January, 2016
மழலை

நம்முகம் பார்த்து
நயமுடன் நகைக்கையில்
நானிலம் முழுவதும்
நம்வசம் வந்ததன்றோ !
பூமுகம் மலர்ந்து
புன்னகை புரிகையில்
புவிதனில் நம்வாழ்வின்
புளகாங்கிதம் விளங்குதன்றோ !
ஆதாம் ஏவாள்

அந்தகாரச் சூனியத்தில்
அச்சுக் கொண்ட இரண்டாய்
நாம்…
வழியெங்கும் திசை
மாறும் பாதம்
நமக்கானது…
பாலிவுட் டான்ஸ் குழுவினருடன்….

(Click here for English Version) டிசம்பர் 12, 2015; மெல்லிய பனிச்சாரல் கலந்த இதமான மாலைப் பொழுதில் நமது பனிப்பூக்கள் குழுவினர் பாலிவுட் டான்ஸ் சீன் குழுவினருடன் கலந்துரையாட டேபஸ்ட்ரீ ஃபோல்க் டான்ஸ் மையத்திற்கு (Tapestry Folk Dance Center) சென்றிருந்தோம். உள்ளே நுழையும் ஒவ்வொருவரின் முகத்திலும் சுறுசுறுப்புப் பொங்கியது. குழுவின் ஆர்வம் மற்றும் மகிழ்ச்சியைக் காண்கையில் இன்று 2015ன் கடைசி வகுப்பு என நம்ப முடியவில்லை. சில அறிவிப்புகள், நடன ஆசிரியர் அறிமுகம், தயார்ப் […]
அமெரிக்கத் தேர்தல் – பகுதி 1

அமெரிக்க அரசியலிலும் இதெல்லாம் சாதாரணமப்பா.. “அந்த மூஞ்சியைப் பாரு .. யாராவது அதுக்கு ஓட்டுப் போடுவாங்களா? இந்த மூஞ்சிக்கு அடுத்த ஜனாதிபதி ஆகத் தகுதி இருக்கா?” “மெய்யாலுமே என் சொந்த மயிரு தான் .. பாக்கறியா.. பாக்கறியா .. தொட்டு வேணாப் பாக்கறியா?” ‘சும்மா அங்கனக்குள்ளயே எதுக்கு நோண்டிக்கிட்டு இருக்கிற? பேச்சு பேச்சாத்தான் இருக்கணும்’ இவையெல்லாம் கவுண்டமணியோ, வடிவேலுவோ பேசிய திரைப்பட வசனங்கள் அல்ல. வல்லரசு நாடான ஐக்கிய அமெரிக்காவில் 2016ம் ஆம் ஆண்டு அதிபர் பதவிக்குப் […]
புத்தக மூட்டை

” அம்மா வலிக்குதே …”
பச்சிளம் குழந்தையாக இருந்தேன்
பார்த்துப் பார்த்து வளர்த்தாய்
மூன்று வயது ஆனேன் என்
முதுகில் சுமையை ஏற்றி வைத்தாய்
பள்ளிப் பாடங்கள், புத்தகங்கள் என்றாய்
பளுவை ஏற்றிக்கொண்டே போனாய்
வலிக்குதே அம்மா என்றேன் வழியெல்லாம்
பழகி விடு என்று ஏற்றாய் என் பழியெல்லாம்
வழிகாட்டும் வள்ளுவம்

உதவி வரைத்தன்று உதவி உதவி செயப்பட்டார் சால்பின் வரைத்து வாழ்க்கையின் தத்துவத்தை இக்குறள் மிக அழகாக எடுத்துக் கூறுகிறது. மனித நேயம் என்றால் என்ன என்பதனை மிக உணர்வு பூர்வமாக இக்கட்டுரை வடிவமைத்துள்ளது. என்னுள் ஏற்பட்ட மனமாற்றத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன். என்னைக் கவர்ந்த கட்டுரை: ஒரு கல்லூரியில் நடந்த நிகழ்வு: ஒரு மாணவர் கல்லூரி வகுப்பறை நோக்கி நடந்து வருகின்றார்! திடீரென மழைத் துளிகள் விழ ஆரம்பித்தன. வலுத்த மழைத் துளிகளில் மாணவர் நனைந்து […]
எழில் அரசி எஸ்தர் பெற்றுத் தந்த விடுதலை

திருவிவிலியம் பழைய ஏற்பாடு எஸ்தர் ஆகமத்தில பார்த்தீங்கனா இந்தியா என்று தொடங்கும். என்ன வியப்பாயிருக்கா? ஆமாங்க… 2500 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா தொடங்கி எத்தியோப்பியா வரைக்கும் 127 மாநிலங்களையும் சூசான் என்ற தலைநகரிலிருந்து அகஸ்வேர் என்ற பாரசிக மன்னன் மிகுதியான செல்வச் செழிப்போடு ஆண்டுவந்தார். அந்தக் காலத்தில அரசியல், அதிகாரம், மதிமயக்கும் அழகு, செல்வச் செழிப்பு இவற்றோடு அடிமைப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களைச் சார்ந்த நிகழ்வைத்தான் இப்ப பார்க்கப்போறோம். கிராமத்துல சொல்லுவாங்க “அற்பனுக்கு வாழ்வு வந்தா, அர்த்த ராத்திரியில […]
குறை ஒன்றும் இல்லை

“கோகி வீட்டில பிறந்த நாள் அழைப்பு குடுத்திருக்காங்க மனோ ” கணிப்பொறித் திரையைப் பார்த்தபடி மனோவிடம் பேசினாள் பிருந்தா. “யாருக்குப் பிறந்த நாள் ?” ” அவங்க பெரிய பையன் ஆகாஷ்க்கு 9 வது பிறந்த நாள்”. “எப்போ?, எங்கே?”. “வர சனிக்கிழமை , ஒரு விளையாட்டுத் திடலில் “. “எங்கே?” மறுபடியும் மனோ வினவ, ஒரு பெரிய விளையாட்டு அரங்கம் பெயரைக் குறிப்பிட்டாள் பிருந்தா. “அங்கே என்ன இருக்கு?” “மினி golf, அப்புறம் குதிக்கறதுக்கு ஒரு […]
அப்பாவை காணவில்லை

அப்பா காலையில் வாக்கிங் சென்றவர் இன்னும் வீடு வந்து சேரவில்லை என்பது இவனுக்கு அலுவலகம் கிளம்பும்போதுதான் தெரிந்தது.அதுவும் அவன் மனைவி அதை ஒரு குறையாகச் சொன்னாள் ” கரண்ட் பில் கட்டறதுக்கு உங்கப்பாவை அனுப்பலாமுன்னா காலையில வெளிய போன மனுசன் இன்னும் காணல” என்றவளிடம் அப்பா இன்னும் வரலயா? ஆச்சர்யமுடன் கேட்டவன் இந் நேரத்துக்கு வந்திருப்பாரே, குரலில் கவலையைக் காட்டினான். நீங்க கிளம்புங்க, அவர் வந்துட்டாருன்னா உங்களுக்கு ஃபோன்ல சொல்றேன், அவன் மனம் ஊசலாட ஆரம்பித்துவிட்டது. இப்பொழுது அப்பாவைத் தேடிக் கிளம்பினால் அலுவலகத்துக்கு அரை நாள் லீவு […]
மறவாத அந்த நாள் !

அன்னையின் மடியில்
தவழ்ந்த நாள்
தந்தையின் வேட்டியில்
தொட்டிலில் தூங்கிய நாள் !
மலர் மெத்தையில்
புரண்டு சிரித்த நாள்
மயில் தோகை விரித்து
விசிறி விட்ட நாள் !