\n"; } ?>
Rotating Banner with Links
ad banner
Top Ad
banner ad

Archive for January, 2016

காதலும் கடந்து போகுமோ?

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments
காதலும் கடந்து போகுமோ?

பனிக்காலங்களில் போர்ச்சில் அமர்ந்து அந்த ஏரிக்கரையைப் பார்த்துக் கொண்டிருப்பது விக்கிக்கு மிகவும் பிடிக்கும். உறைந்து போய் வெண்படுகையாய் மாறிப் போன ஏரி; இலைகள் உதிர்ந்து கிளைகள் பரவிக் கிடக்கும் மரங்கள்; ஒரு பக்கமாகக் காற்று வீசியதால் அவற்றில் பாதிப் பக்கங்களில் ஒட்டியும் ஒட்டாமலும் காற்றில் ஊசலாடிக் கொண்டிருக்கும் பனித்துகள்கள்; இரவு தொடங்கப் போகிறது எனக் கட்டியங்கூறும் தூரத்து வீடுகளில் மஞ்சளாய் எரியும் விளக்குகள்; எங்கிருந்து வந்தன என்று அறியாத வண்ணம் விர்ரென்று பறந்து போகும் சிறு பறவைகள் […]

Continue Reading »

சொற்சதுக்கம் 6 – விடைகள்

Filed in பலதும் பத்தும் by on January 31, 2016 0 Comments
சொற்சதுக்கம் 6 – விடைகள்

மடம் மிளகு குளம் தளம் மதம் மதகு குடம் தடம் மகுடம் குடகு குங்குமம் கடகம் தங்கம் கங்கு மடங்கு களம் கடம் கும்மி மிகும் தங்கு தங்கும் கம்மி மங்கு மடங்கு தகும் மடங்கும் மங்கும் தங்கும்      

Continue Reading »

எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 4

Filed in இலக்கியம், கட்டுரை by on January 31, 2016 0 Comments
எங்கேயும் எப்போதும் MSV – பகுதி 4

(பகுதி 3) எம்.எஸ்.வி. என்ற மாமேதை படைத்த இசைச் சாம்ராஜ்யத்தில் இறைந்து கிடக்கும் நவரத்தினங்கள் தான் எத்தனை? மேலாகப் பார்க்கும் போதும் கேட்கும் போதும் புலப்படாத பல நுணுக்கங்கள் கவனத்துடன் அணுகினால் ஆச்சரியமேற்படுத்துகின்றன. தோண்டத் தோண்ட பொங்கி வரும் இசை ஊற்றில் தான் எத்தனை பாவங்கள், ராகங்கள். உணர்வுப்பூர்வமாக காதல், சோகம், தத்துவம், மகிழ்ச்சி, வீரம், ஆற்றாமை என்று மட்டுமே மேலோட்டமாக அவற்றைப் பிரித்துவிட இயலாது. ஒரு சில கடடுரைகளில் அவரது இசைச் சிறப்புகளை விவரித்துவிடலாம் என்று […]

Continue Reading »

சென்னை வெள்ள நிவாரண இசை நிகழ்ச்சி

சென்னை வெள்ள நிவாரண இசை நிகழ்ச்சி

நான் சென்னையில் இருந்து பதினைந்து வருடம் முன்பு அமெரிக்காவிற்கு வந்தேன். இங்கு வந்ததில் இருந்து தாயகம் நினைவு மேலோங்கி இருந்தது. விஜய் டிவி அல்லது ஜெயா டிவி பார்த்து அதில் பாடும் பாடகர்கள் திறமை கண்டு வியந்துள்ளேன். ஏதோ ஒரு வெளியூருக்கு வந்து தமிழ் மக்கள் அதிகம் இல்லாத இடத்தில் இருக்கிறோம் என நினைத்திருந்தேன். ஆனால் அந்த ஏக்கத்தைத் தகர்த்தெரிந்தது மினசோட்டா பல வருடங்களாக வெற்றிகரமாக நடத்தப்பட்டு வரும் ஒரு இசைக்குழுவான ஃபிரெண்ட்ஸ் கரியோக்கி. அவர்கள் சென்னை […]

Continue Reading »

பகுத்தறிவு – பகுதி 2

Filed in அன்றாடம், ஆன்மிகம் by on January 31, 2016 1 Comment
பகுத்தறிவு – பகுதி 2

(பகுதி – 1) இந்தப் பகுதிக்கான முன்னுரையை எழுதி இரண்டு மாதங்கள் உருண்டோடி விட்டன. இரண்டாம் பகுதி எழுதும் “மனநிலை” (மூட்) வரவேயில்லை. ஏனென்று தெரியவில்லை. ஒருவேளை அந்தக் கடவுளுக்கு நான் இதுபற்றி எழுதுவது பிடிக்கவில்லையோ? அவன்தான் தனது திருவிளையாடலினால் எனக்கு “மூட்” வரவிடாமால் செய்கிறானோ? இருக்கலாம்.. ஆனால் அந்தக் கடவுளுக்கு இந்த உலகத்தில் வாழும் கோடானுகோடி மனிதர்களில், அடுத்த வீட்டு மனிதருக்குக்கூட அவ்வளவாக அறிமுகமில்லாத என்னைத் தெரிந்து கொள்ளும் சந்தர்ப்பம் வந்திருப்பது சாத்தியமோ? அப்படியே தெரிந்து […]

Continue Reading »

உலகப் பொதுமறை உரைத்தொரு சாதனை

உலகப் பொதுமறை உரைத்தொரு சாதனை

இறைவன் மனிதனுக்குச் சொன்னது கீதை ! மனிதன் இறைவனுக்குச் சொன்னது திருவாசகம்! மனிதன் மனிதனுக்குச் சொன்னது திருக்குறள் ! அந்த தமிழ் மறையை, வெறும் மூன்று மணி ஐம்பத்தி இரண்டு மணித்துளிகளில் ஒரே மூச்சாக மழை போல் பொழிய முடியும் என்று நிரூபித்தார் திருமதி பிரசன்னா சச்சிதானந்தன்.   மினசோட்டாத் தமிழ்ச் சங்கம் ஏற்பாடு செய்திருந்த இந்த நிகழ்ச்சி ஜனவரி 24 அன்று மதியம் 12.05 தொடங்கியது. இடைவிடாத  உரையாக 1330 குறள்களையும் , பொருளுடன் உரைத்தார். […]

Continue Reading »

“குத்துக்கல்…!”

Filed in இலக்கியம், கதை by on January 31, 2016 0 Comments
“குத்துக்கல்…!”

அவளும் நானும் ரொம்ப வருஷமா இப்டித்தான் வாழ்ந்திட்டிருக்கோம். ஸாரி, வாழ்ந்திட்டிருக்கோமில்ல….இருந்திட்டிருக்கோம்…சேர்ந்து இருக்கிறவங்கள்லாம் சேர்ந்து வாழ்றதா அர்த்தமாகாதுல்ல…அதுனால அப்டிச் சொன்னேன்….வாழ்றதுங்கிறது ஆத்மபூர்வமானது….அப்டித்தான் நா நினைக்கிறேன்…இதயத்துல ஒருத்தர வச்சு போஷிக்கிறது…பூஜிக்கிறதுன்னு கூடச் சொல்லலாம்…அப்டியிருந்தா பரஸ்பரம் ஒருத்தர் நலத்துல இன்னொருத்தருக்கு அக்கறை பரிபூர்ணமா இருக்கும்…முணுக்குன்னா மனசு சங்கடப்படும்…என்னாச்சோ, ஏதாச்சோன்னு பதறும்…அப்டியெல்லாம் எந்த அதிர்வும் எங்க வாழ்நாள்ல ஏற்பட்டதுல்ல…அவளுக்கும் சரி, எனக்கும் சரி…சிறு சலனங்கூடக் கெடையாது…அதுனாலதான் சேர்ந்து இருக்கிறதுங்கிற பதத்தைப் பிரயோகப்படுத்தினேன். இதுல என்ன விசேஷம்னா, எங்களோட இருப்பு இதுநாள் வரைக்கும் யாருக்கும் […]

Continue Reading »

தலையங்கம்

Filed in தலையங்கம், முகவுரை by on January 31, 2016 0 Comments
தலையங்கம்

வாசகர்கள் அனைவருக்கும் பனிப்பூக்களின் இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள் ! புத்தாண்டில் பலர் பல விதமான தீர்மானங்களைச் செய்திருக்கலாம். அது இன்றிலிருந்து தொடர்ந்து உடற்பயிற்சி செய்வேன் என்பதாக இருக்கலாம். அல்லது ஏதேனும் கெட்ட பழக்கங்கள் இருந்தால் அதனைக் கைவிடுவதாக இருக்கலாம். அது எதுவாக இருப்பினும் அந்தத் தீர்மானத்தை நீங்கள் வாழ்நாள் முழுவதும் உறுதியாகக் கடைபிடித்து மகிழ்ச்சியாக வாழ்வதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரியட்டுமென்று இதன்மூலம் வேண்டிக் கொள்கிறோம். 2015 ஆம் வருட சாதனைகள் என்றும், 2016 […]

Continue Reading »

அசோகமித்திரனுக்கு அருகாமையில்….

அசோகமித்திரனுக்கு அருகாமையில்….

சமீபத்திய இந்தியப் பயணத்தின் போது ஒரு அரிய வாய்ப்பாக, பழம் பெரும் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது பெற்றவருமான எழுத்தாளர் அசோகமித்திரனைச் சந்தித்து  உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்த எனது கல்லூரி நண்பன் ஸ்ரீராமிற்கு, இச்சமயத்தில் எனது இதயபூர்வமான நன்றியை உரித்தாக்குகிறேன். எனது சந்திப்பைப் பற்றி எழுதுவதற்கு முன்னால், திரு. அசோகமித்திரன் பற்றி ஒரு சிறு குறிப்பு எழுதுவது பொருத்தமாக இருக்கும். தமிழ்ப் படிக்கும் ஆர்வலர்களுக்கு அவரைப் பற்றிய அறிமுகம் தேவையில்லையெனினும், இந்தக் […]

Continue Reading »

ஆட்டிஸம் – பகுதி 3

Filed in இலக்கியம், கட்டுரை by on January 31, 2016 0 Comments
ஆட்டிஸம் – பகுதி 3

(ஆட்டிஸம் – பகுதி 2) இந்தப் பகுதியில் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தேவையான இரண்டு முக்கிய விஷயங்களைப்பற்றி  பார்க்கலாம்.     அவர்களுக்குப் பொருத்தமான உணவு வகைகள் பயோமெடிக்கல் சிகிச்சை முறை பொருத்தமான உணவு வகைகள் ஆட்டிஸம் போன்ற நிலைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்குத் தகுந்த உணவு என்னவென்பதில் பல ஆராய்ச்சிகள் நிகழ்ந்துள்ளன என்பதை அறிந்து கொண்டோம். அந்த ஆராய்ச்சியின் விளைவாகக் கண்டுபிடிக்கப்பட்ட GFCF (Gluten Free Casein Free) வகை உணவுகளையே எங்களது மகனுக்குக் கொடுத்துக் கொண்டு வருகிறோம்.  முதலில் […]

Continue Reading »

banner ad
Bottom Sml Ad